business

img

பெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாகவும் உயர்ந்தது.... லிட்டருக்கு 21 காசுகள் வரை அதிகரிப்பு.....

புதுதில்லி:
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்காக கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் - டீசல்விலையை மோடி அரசு உயர்த்தவில்லை. 

ஆனால், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து, தேர்தல் முடிவுகளும் வெளியாகி விட்டநிலையில், புதனன்று தொடர்ந்து2-ஆவது நாளாக, பெட்ரோல் - டீசல் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது.செவ்வாயன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 12 முதல்15 காசுகள் வரையும், டீசல் விலையை லிட்டருக்கு 15 காசுகள் முதல் 18 காசுகள் வரையும் உயர்த்திய மோடி அரசு, புதனன்று மேலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 19 காசுகள் வரையும், டீசல் விலையை லிட்டருக்கு
21 காசுகள் வரையும் உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வால், பெட்ரோல் விலை, தில்லியில் 90 ரூபாய் 74 காசுகளாகவும், மும்பையில் 97 ரூபாய் 12 காசுகளாகவும், கொல்கத்தாவில் 90 ருபாய் 92 காசுகளாகவும், சென்னையில் 92 ரூபாய் 70 காசுகளாகவும் உயர்ந்துள்ளது. டீசலைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் லிட்டர் 86 ரூபாய் 09 காசுகளாகஉயர்ந்துள்ளது. மும்பையில் டீசல் விலை 85 ரூபாய் 19 காசுகளாகவும், கொல்கத்தாவில் 83 ரூபாய் 98 காசுகளாகவும், தில்லியில் 81 ரூபாய் 12 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.பெட்ரோல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் லிட்டருக்கு 21 ரூபாய் 58 காசுகளும், டீசல்விலை லிட்டருக்கு 19 ரூபாய் 18 காசுகளும் அதிகரித்துள்ளது.பெட்ரோல் மீதான விலையில், மத்திய அரசு 32 ரூபாய் 98 காசுகளும், மாநில அரசு 19 ரூபாய் 55 காசுகளும் வரியாக வசூலித்துக் கொள்கின்றன. அதேபோல டீசல் மீதான விலையிலும் 31 ரூபாய் 83 காசுகளை மத்திய அரசும், 10 ரூபாய் 99 காசுகளை மாநில அரசும் மக்களிடமிருந்து வரியாக சுரண்டுகின்றன.