business

img

ராஜஸ்தானில் ரூ. 100-ஐ தொட்டது பிராண்டட் பெட்ரோல் விலை....

புதுதில்லி:
சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் குறைவதில்லை. கச்சா எண்ணெய் விலை, சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றைத் தாண்டி, மத்திய - மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும் வாட் வரிகள் இரண்டு மடங்குஅதிகம் என்பதால், பெட்ரோல் - டீசல் விலை ஒருநாளும் குறையப் போவதில்லை என்றாகிவிட்டது.இந்நிலையில் ஒருவாரத்திற்கும் மேலாக, பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாய்30 காசுகளுக்கும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல்93 ரூபாய்க்கும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்88 ரூபாய் 82 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது.இதனிடையே, எரிபொருளுக்கு அதிக வரிவிதிக்கும் மாநிலமான ராஜஸ்தானின் பெரும்பாலானநகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 72 காசுகளைத் தாண்டியிருப்பதுடன், சில இடங்களில் 98 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் பிராண்டட் பெட்ரோலின் விலைலிட்டர் 101 ரூபாயைத் தாண்டியுள்ளது.