business

img

கொரோனா ஊரடங்குகளால் பாதிப்பு.... நாடு முழுவதும் கார் விற்பனை 7 சதவிகிதம் சரிந்தது....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக 2021 ஏப்ரலில் இந்தியாவில் கார் விற்பனை சுமார் 7 சதவிகிதம் அளவிற்கு சரிந்துள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி, ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 879வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தையமார்ச் மாத விற்பனையை விட 7.1 சதவிகிதம் குறைவாகும். 2021 மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 203 கார்களை விற்பனை செய்திருந் தது. 

மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ போன்ற கார்களின் விற் பனை எண்ணிக்கையும் 25 ஆயிரத்து 041 ஆகக் குறைந்துள்ளது. மற்ற பிரிவுகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.ஹூண்டாய் நிறுவனம் 2021 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 49 ஆயிரத்து 002 கார்களைமட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2021 மார்ச் மாதத்தில் விற்பனையான கார் களின் எண்ணிக்கையான 52 ஆயிரத்து 600-ஐ விட 6.8 சதவிகிதம் குறைவாகும். இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமே ஏப்ரலில் 2.3 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021 மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 24 ஆயிரத்து541 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஏப்ரலில் அது 25 ஆயிரத்து 095 கார்களாக உயர்ந்துள்ளது.ஏப்ரல் மாதத்தில் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம்18 ஆயிரத்து 285 கார்களையும், கியா மோட்டார்ஸ் நிறுவனம் 16 ஆயிரத்து 111 கார் களையும், டொயோட்டா நிறுவனம் 9 ஆயிரத்து 622 கார்களையும், ஹோண்டா நிறுவனம் 9 ஆயிரத்து 72 கார்களையும் விற்பனை செய்துள்ளன.