business

img

4ஜி அலைக்கற்றையை ரூ.57,122 கோடிக்கு வாங்கிய அம்பானியின் ஜியோ....

புதுதில்லி:
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை மற்றும் உபகரணங்களை வாங்கித்தராமல்  மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் முகேஷ்அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.57,122 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ஏலத்தில் முன்னிலை நிறுவனமாக உள்ளது. 

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நடத்திய தொலைத்தொடர்பு  சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தில் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ.77,814 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில்எடுத்துள்ளன. இதில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ஏலத்தில் முன்னிலை நிறுவனமாக உள்ளது. ஏர்டெல் ரூ.18,699 கோடிக்கும், வோடபோன் 1,993.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.2016 ஆம் ஆண்டில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் ஏழு நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஆனால் தற்போது மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியுள்ள அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொண்டன. மேலும் இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைகள் ஏலத்தில்இடம்பெறும் என எதிர்பார்த்தநிலையில், 4ஜி அலைக் கற்றைகள் மட்டுமே இடம்பெற்றன.ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஏலம் இரண்டு நாட்கள் நடந்தது. 6 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஏலம் செவ்வாயன்று மதியம் 12.45 மணியளவில் முடிந்ததாகதொலைத்தொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறினார். குறிப்பாக 700, 800, 900, 1800, 2100, 2300 மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலத்தில்விற்கப்பட்டன. இதில் 700 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இவை இரண்டு தவிர்த்து பிற மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் 60 சதவீதம் ஏலத்தில் எடுக்கப்பட்டன. மொத்தமாக ஏலத்துக்காக ஒதுக்கப்பட்ட 2308.80 மெகா ஹெர்ட்ஸ்அலைக்கற்றையில் ஏலத்தில்எடுக்கப்பட்ட அலைக்கற்றைகளின் அளவு 855.60 மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.

 ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் விற்கப்படும் என அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே ஏலத்தில் விற்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த ஏலத்தில் ஒதுக்கப்படும் அலைக்கற்றை மீது நிறுவனங்களுக்கு 20 ஆண்டு உரிமை அளிக்கப்படுவதாகவும் இந்த அலைக்கற்றைகள் மீது 3 சதவீதம் பயன்பாட்டுக்கட்டணமாக வசூலிக்கப்படும்  என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;