business

img

4-ஆவது நாளாக அதிகரித்த பெட்ரோல் - டீசல் விலை.... பெட்ரோல் 47 காசுகளும் டீசல் 79 காசுகளும் உயர்வு

புதுதில்லி:
அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து டீசல் விலையும், அக்டோபர் 22-க்குப் பிறகு பெட்ரோல் விலையும்- சுமார் 48 நாட்களாக மாறாமல் இருந்து வந்தன.இந்நிலையில், நவம்பர் 20 முதல் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயரத்துவங்கியுள்ளது.நவம்பர் 20 முதல் 22 வரை யிலான 3 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஞாயிறன்று தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81 ரூபாய் 38 காசுகளில் இருந்து 81 ரூபாய் 46 காசுகளாகவும், டீசல் லிட்டர் 70 ரூபாய் 88 காசுகளி லிருந்து 71 ரூபாய் 07 காசுகளாக வும் உயர்ந்தது.இந்நிலையில், திங்களன்று தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 25 காசுகளாக வும் உயர்ந்துள்ளது.இதுவே, மும்பையில் பெட்ரோல் விலை 88 ரூபாய் 23 காசுகளுக்கும், டீசல் 77 ரூபாய் 73 காசுகளுக்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் 83 ரூபாய் 10 காசுகளுக்கும், டீசல் 74 ரூபாய் 72 காசுகளுக்கும் விற்பனை ஆனது. சென்னையில் பெட்ரோல் விலை 84 ரூபாய் 59 காசுகளாகவும், டீசல்விலை 76 ரூபாய் 72 காசுகளாக வும் இருந்தது.

;