business

img

ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்கிய இந்தியா... அமெரிக்காவின் வாடிக்கையாளராக தொடர்கிறது...

புதுதில்லி:
நடப்பு 2020-ஆம் ஆண்டில்,அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங் களை விற்பனை செய்துள்ளது என்ற விவரத்தை அந்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (The Defense Security Cooperation Agency - DSCA) வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2019-ஆம் ஆண்டு, 55.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) அளவிற்கான அமெரிக்காவின் உலகளாவிய ஆயுதவர்த்தகம், 2020-ஆம் ஆண்டில்,50.8 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிந்துள்ளது.2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ஆம் ஆண்டு பல நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து குறைவான ஆயுதங்களையே கொள்முதல் செய்துள் ளன. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், இராக், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற் றுள்ளன.கடந்த ஆண்டு 12.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 93 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்த மொராக்கோ, 2020-ஆம் ஆண் டில் அதிகபட்சமாக 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 33 ஆயிரத்து 750 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்கியுள்ளது.இந்நிலையில், மொராக்கோவிற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் இந்தியா வெறும் 6.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 46 கோடியே50 கோடி) மதிப்புள்ள ஆயுதங் களை மட்டுமே அமெரிக்காவிடம் வாங்கி இருந்தது. ஆனால், 2020-இல் கொரோனா தாக்கம்- பொதுமுடக்கம்- நிதிப்பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இடையிலும் 3.4 பில்லியன் டாலர் (சுமார்ரூ.25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை இந் தியா வாங்கிக் குவித்துள்ளது.

;