புதுதில்லி:
ஆன்லைன் வர்த்தகம் தங்களின் வியாபாரத்தை மிகமோசமாக பாதித்து விட்டதாக அகில இந்திய மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் (All India Mobile Retailers Association) வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காகவும், வீட்டிலிருந்தபடியே பணி புரிவதற்காகவும் (Work From Home) மற்றெந்த நாடுகளை விடவும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகளவில் இருந்தது.இதனிடையே, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளியின் போது, சிறப்புத் தள்ளுபடி போன்றவை வழங்கப்படும் என்பதால், ரீடைல் சந்தையில் விற்பனை மேலும் அதிகமாக இருக்கும் என்றுஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மொபைல் போன் வர்த்தகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதற்கேற்ப பெரும்தொகையையும் அவர்கள் முதலீடு செய்திருந்தனர்.ஆனால், தீபாவளி பண்டிகை யையொட்டிய சிறப்பு விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 2020 தீபாவளி தங்களுக்கு கறுப்புத்தீபாவளியாக அமைந்துவிட்டதாக வும் இந்திய ஆப்லைன் ரீடைல் அமைப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் தீபாவளி விற்பனை சுமார் 50 சதவிகிதம் அளவிற்கு அடிவாங்கி இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.இதே காலகட்டத்தில், இந்தியாவில் சியோமி, விவோ, ரியல்மி ஆகியமுன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தீபாவளி விற்பனையில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து ள்ளதாகத் தெரிவித்துள்ளன. ஆப்பிள் நிறுவனமும் எப்போதும்இல்லாத வகையில் சந்தைக்கு இந்த வருட தீபாவளியின் போது அதிகளவிலான போன்களை விற்பனைச்சந்தைக்கு அனுப்பியுள்ளது. இவை எல்லாமே ஆன்லைன் வர்த்தகம். இதனைச் சுட்டிக்காட்டும் வர்த்தகர்கள், இந்தாண்டு தங்களின் தீபாவளி வர்த்தகம் குறைந்ததற்கு, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும், வங்கிகளும்தான் காரணம் என்று கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும்தசரா விற்பனையின் போது, அக்டோபரில் மொத்தம் 14 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றில் 6.5 மில்லியன் ஆன்லைனில் அனுப்பப்பட்டன. ஆனால், இந்தாண்டு, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுஇ-டெய்லர் நிறுவனங்கள் ஆன்லைன் மூலமே 15 மில்லியன் விற்பனையை விற்பனை செய்துள்ளதாக, ஆராய்ச்சி நிறுவனமான ‘டெக்ஆர்க்’ (TechArc) ஒரு கணக்கைக் காட்டுகிறது.இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் ஆன்லைனில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்வோருக்கு, வங்கிகள் 10 சதவிகிதம் வரை கேஷ்பேக்கொடுப்பதும், வாடிக்கையாளர் களை ஆன்லைன் வர்த்தகத்தை நோக்கி இழுத்து விட்டதாகவும், தங்களின் வாழ்க்கையில் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்தர் குரானா புலம்பியுள்ளார்.