articles

img

‘வெகுதூரம் செல்ல வேண்டும்; ஒன்றாகவே செல்வோம்!’ - ஜி ஜின்பிங்,

பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு குறித்த முக்கியமான விவகாரங்களுக்காக உங்களோடு ஜோகன்னஸ்பர்க்கில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  குறிப்பாக பிரிக்ஸ் உச்சி மாநாடு மூன்றாவது முறையாக ஆப்பிரிக்காவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  சர்வதேச நிலப்பரப்பை வடிவமைப்பதில் பிரிக்ஸ் ஒரு முக்கிய சக்தியாகும். சுதந்திரமான நம்முடைய வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுக்கவும் வளர்ச்சிக்கான உரிமையை கூட்டாகப் பாதுகாக்கவும் கூடியுள்ளோம். நவீனமயமாக்கலை நோக்கி அணிவகுத்துச் செல்கி றோம். அது மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தின் திசையை பிரதிபலிக்கிறது.  

திறந்த மனப்பான்மை, உள்ளடக்கம், வெற்றி - இவற்றுக்கான ஒத்துழைப்பு உணர்வில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் எங்கள் ஐந்து நாடு களின் வளர்ச்சிக்கு ஆதரவாக பிரிக்ஸ் ஒத்துழைப்பு உணர்வை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள் ளோம் என்பதை எங்கள் சாதனைப் பதிவு காட்டு கிறது. முக்கிய சர்வதேச, பிராந்தியப் பிரச்சனைகளில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நின்று வளர்ந்து வரும் நாடுகளின் குரலையும் செல்வாக்கையும் மேம்படுத்தியுள்ளோம்.

அடிபணிய மாட்டோம்!

பிரிக்ஸ் நாடுகள் எப்போதும் சுதந்திரமான வெளி யுறவுக் கொள்கைகளை ஆதரிக்கின்றன, நடைமுறைப் படுத்துகின்றன. எப்போதும் முக்கிய சர்வதேசப் பிரச்ச னைகளை, அவற்றின் தன்மையின் தகுதியின் அடிப்ப டையில் தீர்மானிக்கிறோம். நியாயமான கருத்துகளை வெளியிடுகிறோம். நியாயமான நடவடிக்கைகளை எடுக்கிறோம். நாம் கொள்கைகளைப் பண்டமாற்றம் செய்யவோ, வெளிப்புற அழுத்தங்களுக்கு அடிபணி யவோ, மற்றவர்களின் அடிமைகளாகச் செயல்படவோ மாட்டோம். நாங்கள் - பிரிக்ஸ் நாடுகள் விரிவான ஒருமித்த கருத்தையும் பொதுவான இலக்குகளையும் பகிர்ந்து கொள்கிறோம். சர்வதேச சூழ்நிலைகள் எப்படி மாறினாலும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துழைப்பதற்கான நமது அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் பொதுவான உணர்வு கள் மாறாது.

எங்கள் கடந்த கால சாதனைகளை கட்டியெழுப்ப வும் பிரிக்ஸ் ஒத்துழைப்பிற்கான புதிய எதிர்காலத்தை துவக்கவும் ஒரு முக்கிய தருணத்தில் ஒன்று கூடியுள் ளோம். நம் காலத்தின் போக்கை நாம் வழிநடத்திட வேண்டும். முன்னணியில் இருக்க வேண்டும் . ஒற்றுமை மூலம் நம்மை வலிமைப்படுத்திக் கொள்வது, நமக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் உயர்தர கூட்டாண்மையை உருவாக்குவது முதலான அடிப்படை நோக்கத்தை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். உலகளாவிய நிர்வாகத்தை மேலும் நியாயமா கவும் சமத்துவமாகவும் மாற்றுவதற்கும் உலகத்திற்கு அதிக உறுதி, நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரவும் நாம் உதவ வேண்டும்.

சக தோழர்களாக...

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வணிக மற்றும் நிதி ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும். வளர்ச்சி என்பது அனைத்து நாடுகளின் தவிர்க்க முடியாத உரிமை. ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட சலுகை  அல்ல. சில சர்வதேச நிறுவனங்களால் மதிப்பிடப்பட்ட படி 3 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியுடன் உலகப் பொருளாதார மீட்சி நிலைகுலைந்து கொண்டே செல்கிறது. வளரும் நாடுகளுடனான சவால்கள் இன்னும் கடுமையானவை. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அவர்களின் முயற்சிகள் தடுக்கப்படு கின்றன. பிரிக்ஸ் நாடுகள் வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறுவதற்கான பயணத்தில் சக தோழர்களாக இருக்கவேண்டும். விநியோகச் சங்கிலிகள் துண்டிப்பு, சீர்குலைவு மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களை எதிர்க்கவேண்டும். குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை மேம்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற துறைகளில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நிதி பரிமாற்றங்களை மேம்படுத்த வேண்டும்.

புதிய கண்டுபிடிப்பின் முடிவுகளை ஆதரிக்கும் வகை யில் புதிய சகாப்தத்திற்கான சீனா - பிரிக்ஸ் அறிவியல் புதுமை மற்றும் இன்குபேஷன் பூங்காவை சீனா அமைத்திடும். பிரிக்ஸ் தொலைநிலை உணர்திறன் செயற்கைக் கோள் பொறிமுறையின்கீழ், பல்வேறு நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் குறைப்பு ஆகியவை குறித்த தரவுகளை வழங்கிட பிரிக்ஸ் உலகளாவிய செயற்கைக்கோள் தரவு மற்றும் பயன்பாட்டு ஒத்துழைப்பு தளத்தை நிறுவுவது குறித்து ஆராய்வோம். ‘ஜ.நா 2030’ நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் சீனா அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படும். அமைதியை நிலைநாட்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும்.

உலகை வேட்டையாடும் ‘பனிப்போர்’

‘நிலைத்தன்மையை விட நன்மை அளிப்பது எதுவு மில்லை; கொந்தளிப்பை விட தீங்கு விளைவிப்பது எதுவு மில்லை’ என்பது சீனப் பழமொழி. பனிப்போர் மனநிலை இன்னும் நம் உலகத்தை வேட்டையாடுகிறது. மேலும் புவிசார்ந்த அரசியல் நிலையும் பதற்றமாகிறது. அனைத்து நாடுகளும் நல்ல பாதுகாப்பு சூழலையே விரும்புகின்றன. சர்வதேசப் பாதுகாப்பு என்பதும் இதிலி ருந்து பிரிக்க முடியாதது. மற்றவர்களின் இழப்பில் முழு பாதுகாப்பைத் தேடும் முயற்சிகளுக்கு இறுதியில் பின்னடைவு தான் ஏற்படும். சிக்கலான காரணங்களால் உக்ரைன் விவகாரம் நெருக்கடி நிறைந்ததாக பரிண மித்துள்ளது. அமைதியை கொண்டுவர தளர்ச்சியை ஊக்குவித்து சண்டையை முடிவுக்கு கொண்டுவர சமாதா னப் பேச்சுக்களை நடத்திட மிகப்பெரும் அழுத்தம் இன்று தேவைப்படுகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போல மோசமான ஒரு நிலைமையை யாரும் இன்று உருவாக்கிவிடக் கூடாது.    

பிரிக்ஸ் நாடுகள் அமைதியான வளர்ச்சியின் திசை யில் இருக்க வேண்டும். மேலும் இந்தக் கூட்டணியை பலப்படுத்திட வேண்டும். பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர் கள் கூட்டம், தேசிய பாதுகாப்பு மற்றும் பிற உபமுறை கள் குறித்த உயர் பிரதிநிதிகளின் கூட்டம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய பிரச்சனைகளுக்கு பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்க வேண்டும். முக்கிய சர்வதேச பிராந்திய பிரச்சனைகளில் ஒருங்கிணைப்பை மேம்படுத்திட வேண்டும். அரசியல் வெப்பம் அதிகரிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும். 

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு என்பது வளர்ச்சியின் ஒருபுதிய பகுதி. பிரிக்ஸ் நாடுகள் ஒரு புதிய ஆய்வுக் குழுவை அதற்காக தொடங்க ஒப்புக் கொண்டுள் ளன. அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கவும், தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்கவும் நாம்  செயல்பட வேண்டும். மிகவும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் கட்டுப்படுத்தக்கூடியதா கவும், சமத்துவத்திற்கும் அதை மாற்ற நாம் பாடுபட வேண்டும். மேலும் பரந்த அடிப்படையிலான ஒரு மித்த கருத்துடன் அதற்கான கட்டமைப்புகள் மற்றும் தர நிலைகளை உருவாக்கிட வேண்டும்.  நாம் மக்களிடையே பரிமாற்றத்தை அதிகரிப்பதோடு ஒருவரிடமிருந்து மற்றவர்களை காப்பதையும் ஊக்கு விக்க வேண்டும். பல நாகரீகங்களின் இடையே உலகில் பல வளர்ச்சிப் பாதைகள் செல்கின்றன. உலகம் அப்படி இருக்க வேண்டும். மனித வரலாறு ஒரு குறிப்பிட்ட நாக ரீகம் அல்லது அமைப்புகள் மட்டுமே கொண்டதாக இருக்க முடியாது. பிரிக்ஸ் நாடுகள் உள்ளடக்கிய உணர்வை முன்னிறுத்த வேண்டும். மத நல்லி ணக்கத்தை அதிகரிக்க வேண்டும். அனைத்து நாடுக ளுக்கு இடையேயும் மரியாதை உணர்வையும் மேம் படுத்த வேண்டும்.  பெண்களின் திறமையை முன்னிறுத்தும் வகையில் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து கலாச்சார, நிர்வாக ஆளுமை பரிமாற்றங்கள் குறித்த பல்வேறு உப முறை களை நாம் பயன்படுத்திட வேண்டும். கல்வியில் ஒத்துழைப்பை அதிகரித்திட, தொழில் நுட்பக் கல்விக்கான பங்கை உயர்த்திட, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு மேம்பட- இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முன்னுதாராணமாக பிரிக்ஸ் விளங்குவதை ஊக்குவித்திட வேண்டும்.

நியாயமான உலக நிர்வாகம் 

நியாயத்தையும் நீதியையும் நிலைநிறுத்தி உலகளா விய நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். சர்வதேச சமூகம் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதை யும உலகளவில் சவால்களைச் சமாளிக்கவும், தேவைப் பட்டால், உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் சரியான தேர்வாகும். இது ஐ.நா. சாசனத்தில் எழுதப் பட வேண்டும். வலுவான தாக்குதலும், உரத்த குரல் கொண்டவர்களும் இடும் கட்டளைகளை ஏற்க முடியாது.  உலக அமைப்புகளில் தங்கள் பிரத்யேக குழுக்களை உருவாக்குவது, சர்வதேச விதிமுறைகளை கடத்திச் செல்வது என்பதெல்லாம் ஏற்க முடியாது. நாம் நமது பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பங்கை முழுமையாக பலப் படுத்த வேண்டும். சர்வதேச நிதி மற்றும் நாணய அமைப்புகளின் முன்னோக்கிய சீர்திருத்தங்களுக்காக  முயல வேண்டும். மேலும் வளரும் நாடுகளின் குரலை யும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டும். பிரிக்ஸ் ஒத்துழைப்பு குறித்து வளரும் நாடுகளின் உற்சாகம் அதிகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரிக்ஸில் இணைய பலர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பல நாடுகளை உள்ளே கொண்டு வர திறந்த மனதுடன் உள்ளோம்.

பண்டைய ஆப்பிரிக்க கண்டம் ஆழமான ஞானத்தின் இருப்பிடமாக உள்ளது. ‘நீங்கள் வேக மாக செல்லவிரும்பினால் தனியாக செல்லுங்கள், வெகுதூரம் செல்ல விரும்பினால் ஒன்றாகச் செல்லுங் கள்’ என்பது ஆப்பிரிக்க பழமொழிகளில் ஒன்று. உபுண்டு வின் தத்துவம் ‘நாம்’ என இருப்பதால் நான் இருக்கிறேன் எனக் கூறுகிறது. உலகம் அனைத்து மக்களுடையதும் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அதே போல இணக்கமான சகவாழ்வு பல்லாயிரம் ஆண்டுக ளாக சீனாவின் லட்சியமாக இருந்து வருகிறது. கூட்டு எதிர்காலம், கூட்டாண்மை, கூட்டு ஒத்துழைப்பு- இவைக ளின் அடிப்படையில் மனிதகுலத்தின் நன்மைக்காக பணி யாற்ற சீனா தயாராக உள்ளது. நாம் சந்திக்க உள்ள பொதுவான சவால்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். ஒளி மயமான எதிர்காலத்தை பொதுவாக உயர்ந்த நோக்கத்து டன் வடிவமைத்திட வேண்டும். நவீனமயமாக்கலை நோக்கி பயணத்தை தொடர்வோம்!

தமிழில்: கடலூர் சுகுமாரன்