articles

img

திரிபுரா தேர்தல்: சரியான வாய்ப்பு!

திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு  10 மாதங்கள் இருந்தபோது திரிபுரா முதலமைச்சர் பிப்ளவ் குமார் தேபை பாஜக மத்தியத் தலைமை தலை யிட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கிவிட்டது. முன்னாள் காங்கிரஸ் தலைவராகிய மணிக் ஸாஹாவை புதிய முதலமைச்சராக ஆக்கியது. வடகிழக்கு மாநி லங்களில் கட்சித் தாவி பாஜகவுக்கு வந்து முதல மைச்சராக ஆன நான்காவது காங்கிரஸ்காரர்தான் இந்த மணிக்ஸாஹா. தனது அரசுக்கு எதிரான மக்க ளின் உணர்வைச் சமாளிப்பதற்கு பாஜக தலைமை பின்பற்றி வருகிற வழக்கமான தந்திரத்தின் ஒருபகுதி யாகத்தான் திரிபுரா முதலமைச்சரை மாற்றிய நட வடிக்கையும் உள்ளது. ஆனால், குஜராத்திலிருந்தும், உத்தரகண்டிலி ருந்தும், கர்நாடகத்திலிருந்தும் வித்தியாசமாக திரி புராவில் முதலமைச்சரை மாற்றிய நடவடிக்கைக்கு எதிராக பகிரங்கக் கலகமே திரிபுரா பாஜகவில் காணப் படுகிறது. பிப்ளவ் தேபை மாற்றியதை எதிர்த்து அமைச்சர் ராம்பிரசாத்பால் சட்டசபைக் கட்சிக் கூட்டத் தில் நாற்காலியை எடுத்து வீசியது உள்ளிட்ட நடவ டிக்கைகள் கட்சிக்குள் பகிரங்கக் கலகத்தையே சுட்டிக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, 20 எம்.எல்.ஏ.க்கள் அருண் சந்திரபௌமிக் என்பவரின் தலைமையில் கட்சியின் மத்திய தலைவர்களைச் சந்தித்து, பிப்ளவ் தேபை மாநிலக் கட்சித் தலைவராக ஆக்க வேண்டு மென்று கோரினர். முழுவதுமாக பதவி பறிக்கப்பட்ட பாஜகவின் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் கள் ரஞ்ஜய்தேபின் தலைமையில் ரகசியமாகக் கூட்டம் நடத்தியதும் பாஜக தலைமைக்கு தலை வலியை அதிகரிக்கச் செய்துவிட்டது.

அரைபாசிஸ்ட் பயங்கர ஆட்சி

கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசாமல் திடீ ரென்று முதலமைச்சரை மாற்றிய நடவடிக்கையில் கூட்டணிக் கட்சியாகிய ஐபிஎஃப்டி-யும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.  முதலமைச்சர் மணிக்ஸாஹாவின் தலைமையில் உள்ள அமைச்ச ரவையில் துணை முதலமைச்சராக இருப்பதற்குத் தயாரில்லை என்று ஐபிஎஃப்டி தலைவர் ஜிஷ்ணுதேப் பர்மன் அறிவித்ததும் பாஜக-வுக்கு ஆட்சி நடத்துவது எளிதாக இல்லை என்பதைத் தெளிவாக்கிவிட்டது. முகத்தை மினுக்கிக் காட்டுவதற்கு பாஜக எடுத்த நடவடிக்கை யானது முகத்தை அசிங்கப்படுத்திவிடுமோ என்கிற அச்சத்தில் இப்போது பாஜக தலைமை உள்ளது. திரிபுராவில் கடந்த நான்கு ஆண்டுக்கால பாஜக ஆட்சி முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது என்ப தற்கான சாட்சிப் பத்திரம்தான் முதலமைச்சரை மாற்றிய நடவடிக்கை. தேர்தல் வாக்குறுதிகளில் எதை யும் நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, மக்கள் மீது அதிக பொருளாதாரச் சுமையையும் ஏற்றிய நடவ டிக்கைகளையே பாஜக அரசு மேற்கொண்டது. எதிர்க் கட்சிகளின் அலுவலகங்களைத் தாக்கிச் சேதப் படுத்துவது, எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்குவது மூலம் ஒரு அரைப் பாசிஸ்ட் பயங்கர ஆட்சிக்கே பிப்ளவ்தேப் அரசு தலைமை வகித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் முதல் எதிர்க்கட்சிகளின் எல்லா அலுவலகங்களும் ஒருபகுதியோ முழுவதுமோ தாக்கித் தகர்க்கப் பட்டன. நான்கு ஆண்டுகளில் 22 ஊழியர்கள் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பாஜக குண்டர்  கும்பல்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர். சட்டத்தின் ஆட்சியே ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஊழலும் லஞ்சமும்

ஊழல்தான் பிப்ளவ்தேப் அரசின் முகமுத்திரை. ஒவ்வொரு நாளும் பாஜக அரசின் ஊழல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. திரிபுரா மாநில மின்சார கழகத்தில் பல கோடிகளில் ஊழல் நடந்துள்ளது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.183 கோடி செலவிட்டதிலும் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிக்கை வெளிவந்தது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கிடைப்பதற்கு 5000 முதல் 40,000 ரூபாய் வரை பாஜக தலைவர்கள் லஞ்சம் பெற்றனர். அரை லட்சம் பேர்க்கான சமூக பென்ஷன் நிறுத்தப்பட்ட நடவடிக்கையும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இயல்பாகவே அரசுக்கு எதிராக மக்களின் கோபம் எழுந்துள்ளது. அரசின் மக்கள்விரோதக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் கிளர்ச்சிகளும் பிரச்சார மும் நடத்தியது.  டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகை செய்தி வெளி யிட்டதுபோல, பாஜகவுக்கு இருந்த செல்வாக்கில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் ஆதரவைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிற சூழலில்தான் முதலமைச்சரை மாற்றி அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வீண்முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜக இத்த கைய தந்திரத்தின் மூலம் ஒன்றும் திரிபுரா மக்களை  தன் பக்கம் கவர்ந்துவிட முடியாது. பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க திரிபுரா மக்கள் தயாராகிறார்கள். 2023  திரிபுரா சட்டமன்றத் தேர்தலை அதற்கான சந்தர்ப்பமாக மக்கள் பயன்படுத்துவார்கள்!

நன்றி: தேசாபிமானி, தமிழில்: தி.வரதராசன்


 

 

;