articles

img

தேசிய தரவு தளமும் விவசாயத் தொழிலாளர்கள் பதிவும் - வி.அமிர்தலிங்கம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிதாக e-shram என்ற வலைத்தள பக்கத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி வைத்திருக்கிறது. தேசிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவு களை திரட்டி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் புதிய கொள்கைகளை வகுக்கவும், புதிய திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

இதன் பின்னணி

கடந்த வருடம் திடீரென்று கோவிட்-19 தொற்று நோய் காரணமாக நாடு முழுவதும், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறினார்கள். இவர்களைப் பற்றி எந்த விதமான தரவுகளும் இல்லாத காரணத்தால் மாநில அரசுகள் இவர்களுக்கு உதவி செய்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்த தொழிலாளர்க ளின் நிலை மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் அர சாங்கத்தின் எந்த உதவியுமின்றி சாலைகளில் அலைந்ததை கடந்த வருடம் பார்த்தோம். மேலும் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலை இல்லாத காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து எந்த விதமான உதவியும் பெற இயலவில்லை. பொதுவாக விவசாயத் தொழிலாளர்கள் மக்கள் தொகை கணக்கெ டுப்பில் மட்டும் இருக்கிறார்கள். நடைமுறையில் இவர்க ளுக்கான செயல்திட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. அரசாங்கம் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டு மென்று நாடு முழுவதும் அரசாங்கத்திடம் கோரிக்கை கள் எழுப்பப்படுகின்றன. அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் - விவசாய தொழிலாளர் கள் உள்ளிட்ட புலம் பெயர் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்காக போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். 

பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர்களின் அவல நிலையை ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. ஒன்றிய பாஜக அரசு மந்திரிகள் சிலர் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சி செய்தார்கள். இந்த பிரச்சனையை மனிதாபிமானமற்ற முறையில் தவறாக கையாண்டார்கள். இதனை உச்ச நீதிமன்றம் கண்காணித்து அதனடிப்படையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்காகவும், முறைசாரா தொழி லாளர்களுக்காகவும் சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டது. இதற்கான சிவில் ரிட் மனு எண்.6/2020, மேலும் மற்றொரு வழக்கை சுயமாக எடுத்துக் கொண்டது. அந்த வழக்கு புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளும் அவர்கள் படும் துயரங்களும், அதற்கு ரிட் மனு எண்.916/2020, உச்சநீதிமன்றம் புலம்பெயர் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் பதிவு செய்த புள்ளி விபர தகவல்கள் சேகரிப்பதில் இருக்கும் முன்னேற்றத்தை கேட்டது. மேலும் இந்த பதிவு செய்யும் பணியை விரைந்து முடிக்கவும் இந்த பணி 31.12.2021க்கு மேல் போகா வண்ணம் செயல்பட வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு வழிகாட்டுதலை கொடுத்தது. 

இதன் காரணமாக ஒன்றிய அரசாங்கம் இந்த வருட முடிவுக்குள் நாடு முழுவதிலுமுள்ள 38 கோடி முறைசாரா தொழிலாளர்களின் புள்ளி விபரங்களை சேகரிக்க இலக்கு நிர்ணயித்து e-shram என்ற வலைதள செயலி வழியாக முறைசாரா தொழிலாளர்க ளின் தகவல்களை பதிவு செய்து தேசிய தரவு தளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. 

தொழிலாளர்களுக்கான பலன்கள்

பதிவு செய்த தொழிலாளர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்குமென்று தெளிவாகத் தெரியவில்லை. 12 எண்கள் கொண்ட e-shram என்ற அடையாள அட்டை  வழங்கப்படும். பதிவு செய்து கொண்ட ஒவ்வொருவ ருக்கும் காப்பீட்டுப் பலன் (Insurance) கிடைக்கும். தொழிலாளர் நல அமைச்சக அறிவிப்பின்படி பதிவு செய்தவருக்கு விபத்துக் காப்பீடு ரூபாய் இரண்டு லட்சம் வரை இருக்கும். விபத்தில் பகுதி ஊனம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சமும், முழுமையான ஊனமோ அல்லது மரணமோ நேர்ந்தால் ரூபாய் இரண்டு லட்சமும் கிடைக்கும். முறைசாரா தொழி லாளர்களுக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கு இந்த தேசிய தரவு தளம் உபயோகமாக இருக்கும். மேலும் அவசர காலம் மற்றும் பேரிடர் காலம் போன்ற நேரங்களில் உரிய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிக ளைச் செய்ய இந்த தரவுதளம் உபயோகமாக இருக்கும். மேலும் அவசர காலம் மற்றும் பேரிடர் காலம் போன்ற நேரங்களில் உரிய தொழிலாளர்க ளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய இந்த தரவுதளம் பயனுள்ளதாக இருக்கும். 

இதிலுள்ள பிரச்சனைகள்

பதிவு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. இதில் பெரிய பிரச்சனை என்ன வென்றால் அதிக அளவில் எண் முறை கடத்தல் தொழில்நுட்பத்தை கையாள்வதாகும். ஆதார் எண்ணை கண்டிப்பாக இதனுடன் இணைக்க வேண்டு மென்று இருப்பது. பெரும்பாலான தொழிலாளர்கள் கைபேசி எண் இல்லாத காரணத்தால் இதனை ஆதார் எண்ணுடன் இணைக்க இயலாத நிலை இருக்கிறது. இதனால் இவர்களின் ஆதார் எண் அங்கீகரிக்கப் படாமல் இருக்கிறது. தொழிலாளர்கள் பற்றிய தரவு களின் பாதுகாப்பு குறித்தும் பிரச்சனை இருக்கிறது. 

பதிவு செய்வது எப்படி?

தொழிலாளர்கள் e-shram-இல் பதிவு செய்ய கைப்பேசியில் உள்ள செயலி அல்லது வலை தளத்தில் தாங்களாகவே பதிவு செய்து கொள்ள லாம். மேலும் பின்கண்ட இடங்களுக்கு சென்று பதிவு செய்துக் கொள்ளலாம். 1. பொது சேவை மையம், 2. இ.சேவை மையம், 3. தொழிலாளர் நல மையங்கள், 4. இந்த வசதியை வழங்கும் சில தபால் துறை அலுவல கங்கள், பதிவுக்கு பின்வரும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன. 1. பெயர், 2. தொழில், 3. நிரந்தர முகவரி, 4. என்ன படித்து இருக்கிறீர்கள், 5. திறமையும் அனுபவமும், 6. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரம், 7. ஆதார் எண், 8. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், 9. ஏதாவதொரு வங்கியின் கணக்கு எண், 10. வங்கியின் ஐ.எப்.எஸ்.சி எண், 11. ஆதார் கார்டு.

யார் விண்ணப்பிக்கலாம்?

வருமான வரி கட்டாதவர், பிராவிடென்ட் உறுப்பின ராக இல்லாதவர், தொழிலாளர் நல பாதுகாப்பு அமைப்பில் இல்லாதவர், இதில் 15 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். பொது சேவை மையம் அல்லது மாநில பிராந்திய அலுவல கம் இவற்றில் பதிவு செய்ய எந்த ஒரு கட்டணமும் இல்லை. தொழிலாளர்களே நேரிடையாக அரசின் இணையதளம் e-shram.gov.in வழியாகவும் பதிவு செய்யலாம். 

சங்கங்கள் செய்ய வேண்டியவை

பதிவு செய்பவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயம் மற்றும் கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள். இந்த பதிவு செய்யும் வேலையை நமது மாநில அமைப்புகள் தீவிரமாக இறங்கி செய்ய வேண்டும். ஆகையால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தொழிலாளர்களிடம் சென்று e-shram பதிவு விவரங்க ளை முழுமையாகச் சொல்லி அவர்கள் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். விவசாயத் தொழி லாளர்களின் பதிவு மிக முக்கியமானது. விவசாயத் தொழிலாளர்கள் தொழில்நுட்பம் தெரியாதவர்கள், ஆகையால் நாம் கண்டிப்பாக அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை பதிவு செய்ய நாம் முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். 

தொழிலாளர்களுக்கான இந்த தேசிய தரவு தளம் எதிர்காலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் திடமான கோரிக்கைகளை அரசு முன்வைக்க உதவி யாக இருக்கும். இந்த இணையதள முகப்பில் நம்முடைய அனைத்து உறுப்பினர்களையும் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் வேலை நடைபெறும் இடங்க ளுக்கு சென்று அவர்களையும் பதிவு செய்ய கவனம் செலுத்தலாம். 

கேரளா போன்ற சில மாநிலங்கள் தீவிரமாக இந்த  பதிவு சேர்க்கைகளை சிறப்பாகச் செய்து வருகிறார் கள்.  இந்த E-shram இணைய தள முகப்பில் தொழிலா ளர்களை பதிவு செய்வது ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கையோ அல்லது தொழிலாளர்கள் மீது உள்ள  கருணையோ அல்ல. இது உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக அமல்படுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலை உருவாக அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் பல போராட்டங்களின் பங்கும் இருக்கிறது. தொழிலாளர்கள் அவர்களுக்கு உரிய பலன்களை பெற நாம் அவர்களை இத்திட்டத்தில் இணைக்கும் வேலையை செய்ய வேண்டும். 

கோரிக்கைகள்

ஒன்றிய அரசின் திட்டங்களான பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி, மான்-தன் பென்சன் யோஜனா ஆகிய பென்சன் பங்களிப்பு திட்டங்களைப் போல் திட்டங்க ளை இதில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஆனால் இவர்களிடத்தில் எந்த விதமான தொகையும் வாங்கக் கூடாது. முறை சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய அமைப்பு ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்து கிராமப்புறங்களில் தொழிலாளர்களை பதிவு செய்ய  வேண்டும். தமிழக அரசு அனைத்து கிராம இ-சேவை மையங்களில் உடனடியாக பதிவை துவக்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள்வேலை நடை பெறும் இடங்களில் பதிவு முகாம்களை நடத்திட வேண்டும். 

கட்டுரையாளர்: மாநில பொதுச் செயலாளர்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்






 

;