ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த துவங்கி யுள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மாநில அரசு களுக்கும் மக்களுக்கும் ஸ்மார்ட்டான திட்டமாக இருக்குமா அல்லது ஷாக் அடிக்கும் திட்டமாக இருக்குமா என்ற கேள்வி இன்று பூதாகரமாக எழுந்துள்ளது.
விவசாயம், தொழில், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மின் நுகர் சார் இடங் களில் பயன்படுத்தப்படும் மின்சார அளவையும் அதன் பயன்பாட்டையும் துல்லியமாக கணிப்ப தற்கும் அதற்குரிய கட்டணத்தை நிர்ணயிப்ப தற்கும் இத்திட்டம் பயன்படுமா என்றால் நிச்சயம் பயன்படும். அதைத்தான் மின்வாரியம் எலக்ட்ரானிக் ஸ்டேட்டிக்ஸ் மீட்டர்கள் மூலம் செய்துவந்தது. அதனையும் நவீனப்படுத்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்றால் நிச்சயம் வரவேற் போம். ஆனால் பாஜக அரசின் நோக்கம் அதுவல்ல.
மின் விநியோகம் அதன் கட்டணங்களை தீர்மானிப்பது போன்ற முக்கியமானவற்றில் தனியாருக்கு கதவுகள் திறந்து விடப்படுகிறது.தனியாரின் கொள்ளை லாபத்திற்காகவே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம்.
மாநிலங்களை மிரட்டும் மோடி அரசு
மின்சார சட்டத் திருத்தம் 2003 - 2022 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. தனியாருக்கு மின்சா ரத்தை தாரை வார்க்கும் இச்சட்டம் நிறை வேற்றப்படக்கூடாதென வலியுறுத்தினோம். ஆனாலும் இச்சட்டத் திருத்தங்கள் சபையில் நிறைவேற்றப்பட்டன. அதன் விளைவாகவே ஸ்மார்ட் மீட்டர் கட்டாயமாகப்பொருத்தப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கட்டாயப்படுத்துவதோடு, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியுதவியை நிறுத்தி விடுவோம் என்று மோடி அரசு மிரட்டி வருகிறது. முற்றிலும் தனியார்
ஸ்மார்ட் மீட்டர்களைத் தயாரித்து வழங்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கிறது பாஜக அரசு.தனியார் ஸ்மார்ட் மீட்டர் பராமரிப்பு நிறுவன ங்கள்தான் மின்கட்டண வசூலிலும் ஈடுபடும்.
தற்போது மாநில மின்வாரியத்திடமுள்ள மின்கணக்கீடு, மின்கட்டணவசூல் மின் கணக்கீட்டில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல், மீட்டர் பழுதடைந்தால் அதனை சரி செய்து மின்சாரம் வழங்குவது போன்ற பணி களை தனியார் ஸ்மார்ட் மீட்டர் பராமரிப்பு நிறு வனங்களிடம் ஒப்படைக்கிறது.
இத்திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்ததோடு அரசின் மின்வாரியத்தின் மூலமாக மீட்டர்களைப்பொருத்த ஆவண செய்துவருகிறது.
தமிழ்நாட்டில் ,1,40,000 வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகள் கைவிடப்படவேண்டும்.கேரள அரசைப் போன்ற கொள்கை வழியிலான நடவடிக்கையை அறிவிப்போடு செயல்படுத்த வேண்டும். பேராபயம் நிறைந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
முதலில் ஸ்மார்ட் மீட்டருக்கான செலவுத் தொகையை எடுத்துக்கொண்டு, அடுத்து மின் கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டிய தொகையையும் எடுத்துக் கொண்டு எஞ்சிய தொகை இருந்தால் அதனை மின்வாரியத்திற்கு வழங்கும்.
மிக முக்கியமானது, மின்நுகர்வோர் பயன்படுத்தும் மின் அளவு, ஒவ்வொரு 15 நிமி டங்களுக்கும் ஸ்மார்ட்மீட்டர்& மோடம் மூலம் தனியார் மீட்டர் நிறுவன சர்வர்& கம்யூட்டரில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு ஏன் பதிவுசெய்யப்படுகிறது?
எளிமையான பதில் தனியாரின் கொள்ளை லாபத்திற்காகவே.
காலை 6 மணிமுதல் 10 மணிவரை உச்சபட்ச கட்டணம்.காலை 10 மணிக்கு மேல் மாலை 6 மணிவரை
பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உச்சபட்ச கட்டணத்திற்கு சற்று கீழ்.
மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணிவரை உச்சபட்ச கட்டணம்.
இரவு 10 மணிக்கு மேல் காலை 6 வரை சாதாரணக் கட்டணம்.
இப்படி ஒரு நாளை 4ஆகப் பிரித்து நான்கு விதமான கட்டணங்களை நுகர்வோர் மீது திணிக்கிறது ஒன்றிய அரசு.
மின்வாரியத்தின் கதி...
மின்சார சட்டத்தின் முக்கிய விதி போட்டியை உருவாக்குவது என்பதே. ஆகவே பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முன்வரு வார்களாம்.அந்த சேவையை பாஜக அரசு ஊக்குவிக்கிறதாம்.
வீதிகளில் ஐஸ் ஐஸ்... கப்ஐஸ் வியாபாரம்போல் மின்சார வியாபாரமும் நடக்கும்.
இலவச மின்சாரம் இனி காலி ஆகும்.
கடுமையான கட்டண உயர்வால் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாவார்கள்.உற்பத்தி யின் செலவு அதிகரிக்கையில் உற்பத்திப் பொருள் களின் விலைகளும் கடுமையாக உயரும்.
இத்திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்ததோடு அரசின் மின்வாரியத்தின் மூலமாக மீட்டர்களைப்பொருத்த ஆவண செய்துவருகிறது.
தமிழ்நாட்டில் ,1,40,000 வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகள் கைவிடப்படவேண்டும்.கேரள அரசைப் போன்ற கொள்கை வழியிலான நடவடிக்கையை அறிவிப்போடு செயல்படுத்த வேண்டும். பேராபயம் நிறைந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.