articles

img

ஓய்ந்திருக்கலாகாது தோழா! - ராமகிருஷ்ணன்

18வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.  இதில் இடதுசாரி கட்சிகள் போட்டியிடக் கூடிய 8 தொகுதிகள் முதல் கட்ட வாக்குப் பதிவில் வருகின்றன.

7 கட்டங்களாக தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் உருவாக்கியது பாஜக தலைமைக்கு உதவுவதற்காகவே. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு ஒரு கட்டமாக தேர்தல் நடத்துகிறபோது இரண்டு தொகுதிகள் மட்டுமே உள்ள திரிபுராவில் இரண்டு கட்டங்கள் எதற்காக? ஜம்மு - காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளுக்கு தேர்தல் ஐந்து கட்டங்களாக நடை பெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1அன்று முடிகிறது. 

மோடியின் ஆத்திரம்
பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தேர்தல் நிதி பத்திர திட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்திட்டம் ஊழலுக்கு வழி வகுக்கும்; கருப்பு பணத்தை ஒழிக்காதது மட்டுமல்ல; அதை வெள்ளையாக்க இத்திட்டம் பயன்படுத்தப் படும் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. 45 நாட்களாக இத்தீர்ப்பு பற்றி கருத்துச் சொல்லாமல் மவுனம் காத்த பிரதமர் திடீரென்று தீர்ப்பை நியாயப்படுத்தியதோடு இத் தீர்ப்பை எதிர்ப்பவர்கள் வருத்தப்படுவார்கள் என ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்தார். 

மோடி ஆத்திரப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. தேர்தல் பத்திரத்திட்டம் அவர் மூளையில் உதித்தது. “கருப்பு பணத்தை ஒழித்திட என் மனதில் ஒரு தெளி வான சிந்தனை உருவானது. நாங்கள் ஒரு வழியை கண்டறிந்தோம். அதுவே தேர்தல் பத்திரத் திட்டம்” என்றார் அவர். பாஜக தலைமை உலக மகா ஊழல் கட்சி என்று அம்பலப்பட்டு போனதால் ஆத்திரப் பட்டு மோடி அளித்த பேட்டி அது. எல்லா மாநிலங்க ளுக்கும் தான் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டு மென்பதற்காக ஏப்ரல் 19ல் துவங்கி ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது என்றாலும், அடுத்தடுத்து தேர்தல் நடைபெறுகிற மாநிலங்களில் கடைக்கோடி வாக்காளர்களுக்கும் தேர்தல் பத்திர ஊழல் பற்றிய செய்தியும் செல்வதற்கு இது வாய்ப்பாக பயன்படுகிறது. 

நிலைமாறும் வட இந்தியா
வட மாநிலங்களில் நிலைமை பாஜகவுக்கு சாதக மாக இருக்கிறது என்ற செய்திகள் ஊடகங்களில் துவக்கத்தில் வெளியானது. தற்போது யோகேந்திர யாதவ் (மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்ட மைப்பு) உ.பி., தில்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று வாக்காளர்களுடன் உரையாடி சேகரித்த தகவல்க ளின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரை, அவர் அளித்த பேட்டி, நிலைமை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக மாறி வருகிறது என்பதை உணர்த்து கிறது. மேலும், பெரும்பான்மையான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தேர்தல் பத்திர ஊழலை அடக்கி வாசித்தாலும் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சி  மிகப் பெரும் துயரம் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். 

மோடியின் மதவெறிப் பேச்சு
இந்தி பேசும் மாநிலங்களிலும் இந்தியா கூட்ட ணிக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என யோகேந்திர யாதவ், பரக்கலா பிரபாகர் உள்ளிட்ட பலர் எழுதியும், பேசியும் வருகின்றனர். 

இப்போதுள்ள சூழலிலும் எதிர்காலத்திலும்  இடது சாரிகளுக்கு - கம்யூனிஸ்ட்டுகளுக்கு கூடுதலான பணி காத்திருக்கிறது. ஏனென்றால் ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறி பிரச்சாரம் தற்போது மேலும் கூர்மை யடைந்துள்ளது.

ராஜஸ்தானில் (21.04.2024) பிரதமர் மோடி ஆற்றிய உரையில் “காங்கிரஸ் வெற்றி பெற்று அதிகா ரத்திற்கு வந்தால் அவர்கள் தேசத்தின் நிலம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க சொத்துக்களை இஸ்லாமி யர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்” என்கிறார். இது அப்பட்டமாக மதவெறியூட்டும் பேச்சு. இவ்வாறு பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது. அப்படிப்பட்டவர்களைத்தான் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக மோடி நியமித்திருக்கிறார். 

இத்தகைய சூழல் பற்றி சமூக பொருளாதார வல்லுநர் பரக்கலா பிரபாகர் சுட்டிக்காட்டியது இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்: 

“பாஜக - ஆர்எஸ்எஸ் அல்லாத அரசியல் சக்திக ளின் முன்னுள்ள சவால் வெறும் தேர்தலைப் பொருத்தது மட்டுமல்ல. அது அரசியல், சமூக, பண்பாடு, உள வியல் மற்றும் மதம் சார்ந்த ஒன்றாகும். இந்துத் துவா என்ற இந்து மத- பண்பாட்டு- சமூக அடையா ளத்தைக் கட்டி வளர்த்திடவும், உரமிட்டு உறுதிப் படுத்திடவும் பல பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் சமீபத்திய அதிர்ச்சியும் பயங்கலந்த பக்தியும் கூடிய பிரச்சா ரத்தின் விளைவாகவே பாஜக தனது இன்றைய அரசியல் பலத்தையும் தேர்தல் செல்வாக்கையும் பெற்றுள்ளது”.

தேசத்தின் ஒரு பகுதி மக்கள் மத்தியில், அவர்க ளின் அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து அவர்க ளுடைய சிந்தனையை ஆர்எஸ்எஸ்சும் சங் பரிவார அமைப்புகளும் எவ்வாறு மடை மாற்றம் செய்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

ஆபத்தின் ஆழம்
பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் இந்தியா எத்தகைய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியி ருக்கும் என்பது பற்றி வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்: 

“எதேச்சதிகாரம் ஆன்மாவை அழிக்கிறது; பெரும் பான்மைவாதம் சிந்தனையிலும் உள்ளத்திலும் நஞ்சை ஊட்டுகிறது; அது தோற்றுவிக்கிற வெறுப்பும் மதவெறியும் நாடெங்கும் புற்றுநோயென பரவி, தனிமனிதனின் மற்றும் சமூகத்தின் நாகரீகத்தை, ஒழுக்கத்தை கருணையை மட்டுமல்ல மனித நேயத்தையே காவு வாங்குகிறது. எனவே அதன் எழுச்சியை இன்றைக்கு நம்மிடம் உள்ள ஜனநாயக வழிகளின் மூலம் தடுத்தாக வேண்டும். அந்த வகையில் 1977க்குப் பின்னர், இந்த தேர்தல் கூடுதல் முக்கியத்துவமானது”.

மதச்சார்பின்மைக்காக, மத நல்லிணக் கத்திற்காக, மக்கள் ஒற்றுமைக்காக, தேச ஒருமைப் பாட்டிற்கான செயல்பாட்டாளர்கள்- குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் ஆற்ற வேண்டிய பணி யைத்தான் மேற்கண்ட இரண்டு வல்லுநர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். இத்தகைய பணியை முக்கிய மான அன்றாட வேலையாக செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தேவை அர்ப்பணிப்பு - மன உறுதி
1946-48 ஆம் ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக உருவான பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டது. எங்கெல்லாம் மத மோதல் ஏற்பட்டதோ அப்பகுதிக ளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து அமைதி உருவாக்க அண்ணல் காந்தி பாடுபட்டார்.

1947 ஆகஸ்ட் 15ல் தில்லியில் பண்டித நேரு தேசியக் கொடி ஏற்றுகிறபோது அண்ணல் காந்தி அங்கு இல்லை. கல்கத்தாவிற்கு சென்றிருந்தார். அங்கு மக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டிட 01.09.1947 அன்று கால வரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தை துவக்கினார். அன்றைய வங்கத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, காந்தியை சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி இருக்கும் உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் விளை வுகள் மோசமாக இருக்குமே என்று கேள்வி எழுப்பினார். “நல்ல வேளையாக அதை பார்ப்பதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன், என்னுடைய கட மையை செய்தவனாவேன்” என அமைதியாக காந்தி பதிலளித்தார். 

காந்தியின் வேண்டுகோள்
இதற்கு முன்னதாக  மோசமான மதக்கலவரம் நிகழ்ந்த நவகாளிக்கு (இன்றைய வங்காள தேசத்தில் உள்ள நகரம்) சென்று 06.11.1946 அன்று அப்பகுதி மக்கள் மத்தியில் காந்தி கீழ்க்கண்டவாறு பேசினார்:

“நீங்கள் (மக்களை பார்த்து) நெசவாளர்களாக இருங்கள், மீனவர்களாக இருங்கள், விவசாயிகளாக இருங்கள். நீங்கள் சார்ந்துள்ள மதத்தை மறந்து விடுங்கள்” என உரையாற்றினார்.

“மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை. ஒருபோதும் அதற்கு அரசியலில் இடமில்லை” என திரும்பத் திரும்ப காந்தி வலியுறுத்தினார்.

இவ்வாறு மதச்சார்பின்மைக்காக, மத நல்லி ணக்கத்திற்காக மக்கள் ஒற்றுமைக்காக பாடுபடும் காந்தியை விட்டுவைப்பார்களா? 

காந்தியைக் கொன்ற சித்தாந்தம்
காந்திஜி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. “நாங்கள் அரசியலில் இனி ஈடுபட மாட்டோம். ஒரு கலாச்சார அமைப்பாக செயல்படு வோம்” என ஆர்எஸ்எஸ் அளித்த உறுதியின் அடிப்ப டையில் ஆர்எஸ்எஸ் மீதான தடை நீக்கப்பட்டது. இதற்கு பிறகுதான் ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது. 1980ல் ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமல்ல நூற்றுக்கும் மேற்பட்ட சங் பரிவார அமைப்புகளுக்கு ஆர்எஸ்எஸ் வழிகாட்டி வருகிறது. காந்தியை கொன்ற அந்த தத்து வம் தான் பாஜகவுக்கும், சங் பரிவார அமைப்புகளுக் கும் சித்தாந்தமாக, வழிகாட்டியாக உள்ளது. இப் பின்னணியில்தான் மதச்சார்பின்மைக்கான பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

மதச்சார்பின்மைக்கான பணி
“மதச்சார்பின்மைக்கான போராட்டம் என்பது மனித மனங்களை வென்றெடுக்கும் போராட்டம்” என பேராசிரியர் கே.என்.பணிக்கர் கூறுவார்.

நமது தேசத்தில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையாளர்களாக உள்ளனர். இது மனித இயல்பு. மத நம்பிக்கையாளர்களை அணுகி அவர்க ளுக்கு மத உணர்வூட்டி (Religiosity) அடுத்தக் கட்டமாக அவர்களை மதவெறியர்களாக சங் பரிவார அமைப்புகள் மாற்றுகின்றன.

மத நம்பிக்கையாளர்களை அணுகி அவர்களுக்கு பிற மதங்களை மதிக்கக் கூடிய மத நல்லிணக்க (Communal Harmony) உணர்வையூட்டி அடுத்தக் கட்டமாக மதச்சார்பின்மை உணர்வை ஊட்ட வேண்டும். அதுவே நமது பணி.            

மதச்சார்பின்மை என்பது இந்தியப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. மதச்சார்பின்மைக்கான போராட்டம் என்பது பண்பாட்டுக்கான போராட்டத்தின் ஒரு பகு தியே ஆகும். அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல வடிவங்களில், பல தளங்களில் மதச்சார்பின்மைக் கான இயக்கத்தை முன்னெடுப்போம்;  மக்கள் நலன் காக்கும்; பாட்டாளி வர்க்க நலன் காக்கும் இயக்கங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்! 

மதச்சார்பின்மைக்கான போராட்டம் என்பது மனித மனங்களை வென்றெடுக்கும் போராட்டம்”. நமது தேசத்தில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையாளர்களாக உள்ளனர். இது மனித இயல்பு. மத நம்பிக்கையாளர்களை அணுகி அவர்களுக்கு மத உணர்வூட்டி (Religiosity) அடுத்தக்கட்டமாக அவர்களை மதவெறியர்களாக சங் பரிவார அமைப்புகள் மாற்றுகின்றன. மத நம்பிக்கையாளர்களை அணுகி அவர்களுக்கு பிற மதங்களை மதிக்கக் கூடிய மத நல்லிணக்க (Communal Harmony) உணர்வையூட்டி அடுத்தக் கட்டமாக மதச்சார்பின்மை உணர்வை ஊட்ட வேண்டும். அதுவே நமது பணி.

ஜி.ராமகிருஷ்ணன் 

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

;