articles

img

பிரச்சார மந்திரி... (மோடியின் கொரோனா கால செயல்பாடு)

நாம் பிரதம மந்திரியை பெற்றிருக்கவில்லை. பிரச்சார மந்திரியைதான் பெற்றிருக்கிறோம். மக்கள் கொத்து கொத்தாக செத்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பிரதம மந்திரி பிரச்சாரத்துக்கு செல்லமாட்டார்.

---டுவிட்டரில் பத்திரிகையாளர் பிரதிக் சின்கா

                              ***************

தி இண்டியா கேபிள் செய்திகள்:

மகா நிர்வானி அகாரா எனும் மத்திய பிரதேச மடத்தை சேர்ந்த சுவாமி கபில்தேவ் என்ற சாது கும்பமேளாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவிட் 19 ஏற்பட்டது. டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறந்துவிட்டார்.

நிரஞ்சனி அகாரா எனும் மடத்தை சேர்ந்த பல துறவிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதால் கும்பமேளாவில் பங்கேற்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஒரு பா.ஜ.க. தலைவர் பகிரங்கமாக தொலைக்காட்சியில் தனக்கு கோவிட் இருந்தும் கும்பமேளாவிற்கு வந்ததாக கூறினார். அவர் மூலம் எத்தனை பேருக்கு பரவியது என யார் அறிவார்?

உத்தரகண்ட் முதல்வர் “கொரோனாவை மத நம்பிக்கை வெல்லும்” என்றார். ஆனால் அவருக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார். 

இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தலைவரும் அவரது வலது கையும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளனர். மக்களின் உயிர்களைவிட மேற்கு வங்கம் அரசியல் அதிகாரம் மிக முக்கியம்.

;