articles

img

சாமானியர் வாழ்வாதாரத்தை அழித்த மோடி அரசின் பொருளாதார புல்டோசர்கள் - சவேரா

கடந்த எட்டு வருடங்களாக அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சாதாரண மக்க ளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றன. வேலையின்மை, வேலையில் பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம் (கூலி முறை) மற்றும் சம்பளம் (மாத வருமானம்), மூடுதல்கள் மற்றும் ஆட் குறைப்பு, மற்றும் ஊரடங்கின் போது வேலைகள் முற்றி லுமாக நிறுத்தப்படுவது ஆகியவை மக்களின் வாழ்வா தாரத்தையும் வாழ்க்கையையும் அழித்துள்ளன. அதற்கு மேல் விலைவாசி உயர்வு, மக்கள் தங்கள் கடும் உழைப்பினால் ஈட்டிய சொற்ப வருமானத்தை யும் கொள்ளையடித்துவிட்டது. இந்த அழிவின் பெரும் பகுதியை மக்கள் மீது புல்டோசர் போல திணித்த மோடி தலைமையிலான பாஜக அரசின் கொள்கை களில் இருந்து அறியலாம். ‘அச்சே தின்’ (நல்ல நாட்கள்) வாக்குறுதிகள் உடைந்து சிதறி விட்டன. அல்லது, இந்த நல்ல நாட்கள், தங்களது சொத்துக்க ளையும் லாபங்களையும் பன்மடங்கு பெருக்கிய நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே வந்துள்ளன.

மோடி அரசின் கொள்கைகளின் மிகப்பெரிய தோல்வியே வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அடைந்த தோல்வி. ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையில் சேரும் வயதை அடைகின்றனர். ஆனால், வேலை உருவாக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் எப்போதும் வளர்ந்து வரும் வேலையில்லாதவர்களின் வரிசையில் இணை கிறார்கள்.

சினங்கொண்டு/வெறிகொண்டு பெருகிவரும் வேலையின்மை

ஐஇ(IE) கணக்கெடுப்புத் தரவுகளின்படி, வேலை யின்மை விகிதம் 2018 இன் பிற்பகுதியில் இருந்து 7-8 சதகிகித வரம்பில் இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊரடங்கின் போது, நினைத்துப் பார்க்க முடியாத அளவாக 25 சதவிகிதம் வரை சென்றது. ஆனால் வேலையில்லா நெருக்கடியின் உண்மையான அளவீடு வேலையின்மை விகிதங்களில் இருந்து மட்டும் பெறப்படவில்லை. இந்த நெருக்கடியின் அளவு மற்றும் தீவிரத்தைப் புரிந்து கொள்ள இதைப் பார்க்க வும்: கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2017 சனவரியில் 40.9 கோடியிலிருந்து 2022 ஏப்ரலில் 40.3 கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில், மக்கள்  தொகை 130.5 கோடியிலிருந்து 137.4 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் தொகை 5 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், வேலை வாய்ப்பு 1.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், வேலை பங்கேற்பு விகிதம், அதாவது, வேலை செய்யும் அல்லது வேலை தேடும் உழைக்கும் வயதினரின் பங்கு ஜனவரி 2017 இல் சுமார் 45 சதவிகிதத்திலிருந்து ஏப்ரல் 2022 இல் சுமார் 41 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதன் பொருள் அதிகமான மக்கள் விரக்தியடைந்துள்ளனர். வேலை கள் இல்லாததாலும், வேலையின்றி உட்கார்ந்தி ருப்பதாலும் மனச்சோர்வடைந்து - அவர்கள் வேலைச் ‘சந்தை’யிலிருந்து விலகுகிறார்கள். இவர்க ளில் பெரும்பாலோர் இளைஞர்கள், நேர்காணல் மற்றும் தேர்வுகள் எழுதுவதிலும், மாயையான வேலைகளைத் தேடுவதிலும் அலைக்கழிக்கப்பட்டு கடனாளிகள் ஆகின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலையுடன் இணைந்த ஜூன் 2020 உடன் முடிவடைந்த காலாண்டில் கிட்டத்தட்ட 7.8 கோடி வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொற்றுநோயின் இரண்டாவது அலை, ஜூன் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில் 1.3 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இயல்பு நிலை திரும்பியதால் பெரும்பாலான வேலை வாய்ப்பு கள் மீண்டும் வருவதைக் கண்ட போதிலும் ஒரு பரந்த இடைவெளி உள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட கிட்டத்தட்ட 33 லட்சம் வேலை வாய்ப்புகள் இன்னும் குறைவாக இருப்பதாக சிஎம்ஐஇ (CMIE) மதிப்பிட்டுள்ளது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்கது, வேலைகளின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது - பெண்கள் அதிக வேலைகளை இழந்துள்ளனர், தொழில்கள் மற்றும் சேவைத் துறை நிறுவனங்கள் அதிக வேலைகளை இழந்துள்ளன. பலர் கிராமப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து சிறு விவசாய வேலைகள் செய்து எப்படியா வது சம்பாதித்து வருகின்றனர். இதனால், குறைந்த ஊதியத்தில் மற்றும் வேலை பாதுகாப்பு இல்லாத சாதாரண, தினக்கூலி வகை வேலைகள் அதிகரித்துள் ளன, அதே நேரத்தில் நல்ல வருமானம் தரும் வழக்க மான வேலைகள் அழிந்துள்ளன.

2019-20க்கான தொற்றுநோய்க்கு முந்தைய பிஎல்எப்எஸ் (PLFS) அறிக்கையின்படி, பெண்களின் பணி பங்கேற்பு விகிதம் வெறும் 22.8 சதவிகிதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. இது ஏற்கனவே பல ஆண்டுகளாகக் குறைந்து வந்தது. இளம் பெண்களில் (15-29 வயது) இது இன்னும் குறைவாக 21 சதவிகிதமாக இருந்தது. 2020 இல் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து அரசாங்க கணக்கெடுப்பு எதுவும் இல்லை. சிஎம்ஐஇ (CMIE) மதிப்பீடுகள், அசோகா பல்கலைக்கழக ஆய்வின்படி, 2019இல் இந்தி யாவில் சராசரி மாத பெண்கள் வேலைவாய்ப்பு 4.35 கோடியாக இருந்தது, 2021இல் 4.07கோடியாகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், பெண்களின் வேலைவாய்ப்பு நிலைமை மோசமாக உள்ளது. 2019 ஆம் ஆண்டை விட நகர்ப்புற இந்தியாவில் 2021 இல் 22.1 சதவிகிதம் குறைவான பெண்கள் வேலை செய்துள்ளதாகவும், 2021 இல் குறைவான பெண்கள் வேலை தேடுவதா கவும் சிஎம்ஐஇ (CMIE) தரவு காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 95 லட்சம் பெண்கள் தீவிரமாக வேலை தேடினர், 2020 இல் இந்த எண்ணிக்கை 83 லட்சமாக குறைந்துள்ளது.2021 இல் 65 லட்சம் மட்டுமே. இந்தப் போக்கு நகர்ப்புற இந்தி யாவிலும் கிராமப்புற இந்தியாவிலும் காணப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் (MGNR EGS) மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்பவர்க ளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித் துள்ளது, இது நம்பிக்கை இழந்த வேலை நிலை மையைக் குறிக்கிறது. தொற்றுநோய்க்கு முன், 2019-20இல், இத்திட்டத்தின் கீழ் 7.88 கோடி பேர் பணியாற்றினர். இது 2020-21இல் 11.19 கோடியாகவும், 2021-22ல் 10.62 கோடியாகவும் இருந்தது. இது போன்ற அவநம்பிக்கையான வேலை நெருக்கடி, கிராமப் புறங்களில், மக்கள் ஒரு வருடத்தில் சராசரியாக 50 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.209 என்ற அற்ப சராசரி ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக உள்ளனர்.

பட்டினிக் கூலி

2020-21இல் உண்மையான விவசாயக் கூலி வெறும் 0.3 சதவிகிதமாகவும், 2021-22இல் 1 சதவிகி தமாகவும் அதிகரித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ்  தெரிவித்துள்ளது. அதே ஆண்டுகளில், கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத ஊதியங்கள் 2020-21 இல் 1 சதவிகிதம் அதிகரித்து 2021-22 இல் 0.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்திய மக்கள்தொகையில் பெரும்பாலோர் வசிக்கும் மற்றும் பணிபுரியும் கிராமப்புறங்களில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான மாற்றங்கள், மக்களின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் ஏழைமயமாக்கலைக் காட்டுகிறது. 2019-20க்கான காலமுறை தொழிலாளர் படை (PLFS) கணக்கெடுப்பின் படி, p  வழக்கமான ஊழியர்களில், ஆண்களுக்கான சரா சரி மாதச் சம்பளம் கிராமப்புறங்களில் ரூ.14,000மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.20,000ஆகும், அதே சமயம் பெண்கள் கிராமப்புறங்களில் ரூ.9,300மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.16,300பெறுகிறார்கள். p சாதாரணத் தொழிலாளர்கள் ஆண்களாக  இருந்தால் தினசரி ஊதியம் கிராமப்புறங்களில் ரூ.305மட்டுமே, நகர்ப்புறங்களில் ரூ.383, பெண் தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் ரூ.197மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.254பெறுகின்றனர். p சுயதொழில் செய்பவர்களில், ஆண்கள் கிரா மப்புறங்களில் மாதம் ரூ.9,500மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.16,000 மட்டுமே சம்பாதிக்கிறார்கள். அதே சமயம் பெண் தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் ரூ.4,800 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.7,300 பெறுகிறார்கள்.

சிஎம்ஐஇ (CMIE) இன் மிகச் சமீபத்திய கணக் கெடுப்பு அறிக்கை (மார்ச் 2022) பரிதாபகரமான குடும்ப  வருமான நிலைகளின் அப்பட்டமான படத்தை வரை கிறது. சுமார் 57  சதவிகித குடும்பங்கள், இந்த கணக் கெடுப்பின்படி, ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கும் குறை வாகவே சம்பாதிக்கின்றன. இது ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.16,666 ஆகும். இது சராசரி தான். பலர் அதை விட மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் - சுமார் 17 சதவிகிதம் பேர் மாதத்திற்கு ரூ.8,333க்கும் குறைவா கவே சம்பாதிக்கிறார்கள். சராசரி ஆண்டு ஊதியம் வெறும் ரூ.1.7 லட்சம் அல்லது மாதம் ரூ.14,000. இந்த ஊதியத்தைப் பெறும் வேலை நேரத்தை கணக்கெடுப்பு வெளிப்படுத்தவில்லை - பிற ஆய்வு கள் மற்றும் நிகழ்வு ஆதாரங்கள் பொதுவாக மக்கள் 8மணிநேரத்திற்கு மேல் வேலை செய்து இவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று கூறுகின்றன.

இந்த வருவாய்கள் தான் வாழ்வாதார நிலை. விலை உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவை இன்னும் குறையும். மேலும், இவை மிகவும் கடுமையான வேலை நிலைமைகளின் கீழ் சம்பாதிக்கப்படுகின்றன, வழக்கமாக நிலையான 8 மணி நேர வேலை நாளை விட பல மணிநேர வேலைக்காக. இந்த மிகக் குறைந்த அளவிலான ஊதியங்கள்/வருமானங்களுக்கு ஒரு காரணம் மறைந்திருக்கும் வேலையின்மை - வேலையில்லாத பெரும் படை எந்த வேலையையும் சொற்ப ஊதியத் திற்கு பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் அவர்கள் பட்டினியிலிருந்து தப்பிக்க முடியும். எனவே, பெரும் நில உரிமையாளர்கள் அல்லது தொழில்துறை முதலாளிகளுக்கு, பெருகி வரும் வேலையின்மை ஒரு பெரிய வரப்பிரசாதமாக விளங்குகிறது - இது ஊதியங்களைக் குறைவாகவும், லாபத்தை அதிகமாகவும் வைத்திருக்கிறது. இது அவர்களுக்கு மோடி அளித்த மிகப்பெரிய பரிசு.

மோடி அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையின் புல்டோசர்கள் நகர்ப்புறங்களில் பல்வேறு சேவைகளில் பணிபுரியும் கீழ் நடுத்தர வர்க்கம் உட்பட தொழிலாளர் வர்க்கங்களின் பொரு ளாதார அழிவுக்கு இவ்வாறு வழிவகுத்தது.

சிபிஎம் மத்தியக்குழு இணையதளத்திலிருந்து...
தமிழில் : தங்கப்பிரியா

 

;