articles

img

மூலதனங்களின் குவி மையமும் முன்னேறும் தொழிலாளி வர்க்கமும் - இ.முத்துக்குமார்

இந்திய அளவில் உற்பத்தி மூலதனங்கள் குவிந்து கொண்டிருக்கிற பகுதியாகவும் காஞ்சிபுரம் மாவட்டம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.  உலக அளவிலான கார் சந்தை மோட்டார் வாகனங்களில் உற்பத்தி ஆலைகளும் கைப்பேசி சந்தையை ஆளுமை செய்யும் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட கைபேசிகளுக்கு அதன் கருவிகளை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட மின்ன ணுவியல் தொழிற்சாலைகளும் கண்ணாடி, மருந்து உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளும் மூலதன சுரண்டலின் மேலும் மேலும் விரிவாக்கம் அடைந்து கொண்டிருக்கிற தொழில் மையமாக இந்தியாவின் முன்னணி மாவட்ட மாக காஞ்சிபுரம் மாவட்டம் வளர்கிறது. விவசாயம் மெல்ல மெல்ல சுருங்கி கிராமப்புறத் தன்மையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நகரமயமாக்களின் வேகமான வளர்ச்சியை நோக்கி மாறுகிற மாவட்டமாக இரண்டாவது சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர் கொள்வதற்கு உரிய வகையில் சாலை கட்டமைப்பு உள்ளிட்ட நவீன நகரமயமாக்கலை எதிர்நோக்கி இருக்கிற மாவட்ட மாக காஞ்சி மாவட்டம் தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது.

பழமைவாய்ந்த கலைத்திறன் மிக்க தொழில் நுட்பத்துடன் பட்டு கைத்தறி நெசவுத்தொழில் அதே தன்மையில் தனது துணி உற்பத்தி செய்கிற காஞ்சி மாநகரத்தையும் தன் வசம் தக்க வைத்துக் கொண்டி ருக்கிறது.  புதிய தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இதை சார்ந்த பல்வகை தொழிலாளர் பிரிவுகளும் இக்காலகட்டத்தில் உருவாகி பழமை யான தொழிலாளர்களும் நவீன தொழிலாளர்களும் சேவை பிரிவு தொழிலாளர் என்கிற முறையில் பன்முகத் தன்மை வாய்ந்த தொழிலாளர் முகத்தின் மையப் பகுதியாக இம்மாவட்டம் திகழ்கிறது.  இந்த மாவட்டத்தில் தொழிற்சங்க இயக்கம் பலமானதாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.  ஆனால் பூஜ்ஜியத்தில் இருந்து புதிய தொழிற் சாலைகளில் தொழிலாளர்கள் தங்களுக்கான அமைப்பை உருவாக்குகிற அந்த பணியில் ஈடுபட்ட காலத்திலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் பாறை போல் தடைகளை விதித்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் ஆலைகளுக்குள் சங்கத்தை அமைத்து அதற்கான அனைத்து விதமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு அந்த பணியை துவக்கிய சிஐடியு தொழிற் சங்கம் இக்காலத்தில் சங்கம் அமைப்பதற்கான ஒரு நம்பிக்கையை தொழிலாளிகள் மத்தியில் விதைத்த தின் மூலமாக 150 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைக ளில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள்  உரு வாகி இருக்கின்றன.

சிஐடியு 50 தொழிற்சாலைகளில் தொழிற்சங்க அமைப்பை வேரூன்றி முன்னேறுகிறது. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 26 தொழிற்சாலைகளில் சிஐடியு தொழிற்சங்கத்தை அமைத்து மேலும் தனது வளர்ச்சியின் பாதையை விரிவாக்கம் செய்து கொண்டது. 

முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் முதல் கருவியாக...

மூலதன உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழி லாளர்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கு தடையை ஏற்படுத்துவதில் முதலாளிகளின் விருப்பத்தை நிறை வேற்றுகிற முதல் அரசு கருவியாக நீதிமன்றங்கள்  இருக்கின்றன.  தொழிலாளர்கள் கூடுவதற்கும் சங்கமாக போராட்டங்களை நடத்துவதற்கும் போராட்டங்களின் உச்சமாக நடைபெறுகிற வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை தடுத்து நிறுத்துகிற, முதலாளி களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற அந்த காரி யத்தை நீதிமன்றங்களே செய்கின்றன. சங்கம் அமைக்கப்பட்டிருக்கிற எல்லா ஆலை களின் முன்னாலும் மாவட்ட நீதிமன்றங்களும் உயர்நீதிமன்றங்கள் மூலமாகவும் இங்கு கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நம்முடைய தேசத்திற்கு பெயர் பேச்சுரிமை, கூட்டம் கூடுகிற உரிமை அனைத்து குடிமகன்களுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் அறவழியில் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட நம் நாட்டில் நமது நீதிமன்றங்களே இந்த உரிமையை தட்டிப் பறிக்கிற நிகழ்வுகள் நாம் சந்திக்கிற முரண்.

முதலாளிகள் எடுக்கக்கூடிய பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து தன்னை தற்காத்துக் கொள்கிற  பல்வேறு வகையான தொழிலாளர் நல சட்டங்கள் ஏட்டில் இருந்தாலும் இந்த பகுதியில் அந்த சட்டங்கள் முழுவதும் அதன் கடமையை செய்ய முடியாது. இந்த பின்னணியில்தான் ஒரு பக்கம் சங்கம் அமைத்தால் வேலை பறிபோகும். இன்னொரு பக்கம் போராட்டம் நடத்தினால் சிறைச்சாலை காத்திருக்கும். சட்ட ரீதியான உரிமைகளை நிலைநாட்ட விரும்பி னால் சங்கமே இல்லாமல் ஆக்கப்படும்.  இது ஒருவிதமான வெளிநாட்டு, இந்நாட்டு முதலாளிகளால் சர்வாதிகார ஆட்சியை ஜனநாயக தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் வாயிலாகவே இவை உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.  இதை எதிர்கொள்வது தான் இம் மாவட்டத்தில் தொழிலாளி வர்க்கமும் தொழிற்சங்க இயக்கமும் சந்திக்கிற அடிப்படையான சவால்.

11 ஆண்டுகள் கழித்து  பணி நிரந்தரம்

இந்தப் பின்னணியில் 1700 தொழிற்சாலை நிறைந்திருக்கிற இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 8  சதவீதம் ஆலைகளில் சங்கம் அமைக்கப்பட்டிருக்கின் றன. நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரமாக்கு கிற சட்ட ரீதியான போராட்டத்திலும் சங்க ரீதியான போராட்டத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தர உத்தரவினை சிஐடியு பெற்று இருக்கிறது.  சட்டம் எவ்வளவு காலதாமதமாக  செயல்படும் என்பதற்கு ஒரு வழக்கை வாசகர் கவனத்திற்கு முன் வைக்கிறோம். எல்என் டி இசிசி பேப்ரிகேஷன் என்கிற ஒரு தொழிற்சாலையில் தன் தொழிலாளிகளை 90 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நிரந்தரமாக அவர்களை ஆலை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது. அவர்கள் பெயரிலேயே ஒவ்வொருவர் கீழும் 20 பேர், 30 பேர், 50 பேர் வேலை செய்வதாக ஒரு போலியான ஒப்பந்த முறை ஆவணங்களை தயார் செய்து தொழி லாளர்களை உழைப்புச் சுரண்டலில் அந்த நிறுவனம் ஈடுபட்டது. 

இங்கு சங்கம் அமைக்கப்பட்ட பிறகு 2013 ஆம்  ஆண்டு இதற்கான ஆவணங்கள் முழுவதும் கொண்டு சென்று சென்னை தொழிற்சாலை துணை இயக்கு னர் முன்பாக பணிநிரந்தர வழக்கை சிஐடியு பதிவு செய்தது.  46 தொழிலாளிகளை பணி நிரந்தரம் செய்யக் கூடிய அந்த வழக்கில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில், 11 ஆண்டுகள் கழித்து அவர்கள் நிரந்தர தொழிலாளி என்கிற தீர்ப்பை சிஐடியு அந்த தொழிலாளிகளுக்கு பெற்றுக் கொடுத்தது. எல்லா ஆவணங்களும் எல்லா உண்மைகளும் சரியாக இருந்த போதிலும் அது சரி என்று சொல்வ தற்கு நம் நாட்டின் தொழிற்சாலை பணி நிரந்தர சட்டம் 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பல பேர் இறந்து விட்டார்கள் சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள்.  தொழிற்சாலைக்குள்ளேயும் போராட்டங்கள் மூலமாகவும் சட்டங்கள் மூலமாகவும் குறைந்தபட்ச உரிமைகளை ஒரு நீடித்த போராட்டத்தை சிஐடியு நடத்திக் கொண்டிருக்கிறது.

மொத்த தொழிலாளர்களில் ஒப்பந்தத் தொழிலா ளர்கள், அப்ரண்டீஸ், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல் வேறு பெயர்களை நிரந்தரத் தன்மையற்ற எப்போதும் வேலையை இழக்கலாம் என்கிற அச்சுறுத்தலுடன் கூடிய அச்சத்துடன் தொழிலாளிகளை வைத்துக்கொண்டு தான் இந்த பிரம்மாண்ட நிறுவனங்கள் ஒவ்வொரு மணித்துளியையும் கடந்து கொண்டிருக்கின்றன.  இந்த தொழிலாளிகள் எந்த உரிமையும் கோர முடியாது கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்ளவேண்டும்.  ஒரே விதமான வேலைத் தன்மை உள்ள நிரந்தரத் தொழிலாளிக்கு 40,000 கிடைக்கும் என்றால், அந்த வேலை செய்கிற நிரந்தரமற்றவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் இப்படி ஒவ்வொரு ஆலைக்குள்ளே யும் ஏறக்குறைய தொழிலாளிகள் எப்படி 90 சதவீதம் நிரந்தரமற்றவர்களாக இருக்கிறார்களோ இதே போல் சம்பளத்திலும் 90 சதவீத வித்தியாசத்தை நாம் பார்க்க முடியும். 

நவீன அடிமைமுறை

வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் சொந்த உறவுகளையும் வீடுகளையும் துறந்து அவர்கள் உருவாக்கி இருக்கிற தங்கும் விடுதி களில் தங்க வைக்கப்பட்டு தன்னுடைய பொருள் உற்பத்திக்காக  தங்குமிடத்திலிருந்து ஆலைக்கும் ஆலையிலிருந்து தங்கும் விடுதிக்கும் என்கிற நவீன அடிமை முறையை இந்த உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கி இருக்கின்றன. வெளி உலகத்தை பார்க்க முடியாத உறவுகளோடு பேச முடியாத இவர்களுக்கு தொழிற்சாலை சட்ட விதிகள் எதுவும்  நடைமுறையில் இருக்காது.  சொல்லொண்ணா அடக்குமுறைகளுக்கு மத்தி யில் குடும்பம் வாழ்வதற்காக இந்த தொழிலாளிகள் தங்களை உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இதை சகிக்க முடியாது என்கிற நிலைமையில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக் கின்றன. இப்படிப்பட்ட போராட்டங்களின் முத்தாய்ப் பான போராட்டம் தான்.

2021 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டம். 15,000 பெண் தொழிலாளிகளால் 17 மணி நேரம் உறையும் பனியில் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடத்தப் பட்டது. ஃபாக்ஸ்கான் ஆலைமுன்பு நடைபெற்ற அந்தப் போராட்டம் உலகம் முழுவதும் ஃபாக்ஸ் கான் கார்ப்பரேட் முதலாளிகளின் கொடிய சுரண்டலை அந்த பெண் தொழிலாளர்கள் நடுவீதியில் அம்பலப் படுத்தினார்கள். தன்னுடைய சுரண்டல் கொடுமைக்கு ஃபாக்ஸ் கான் அதிகாரிகளை மன்னிப்பு கேட்க வைத்த போராட்ட மாக அந்த போராட்டம் அமைந்தது.  அரசு அந்த போராட்டத்தை தன் அடக்கு முறை யின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த போராட்டம் சொல்லுகிற செய்தி ஒன்றுதான். இந்த பகுதி முழுவதும் 2 லட்சம் தொழிலாளி களில் 90 சதவீதமான தொழிலாளிகள் ஒரு கொடிய சுரண்டல் முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் கள் என்பதுதான்.

இப்படிப்பட்ட தொழிலாளிகளுக்கு சட்டரீதியான உரிமைகளையும் கொடிய சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அவர்கள் சங்கமாய் திரள்கிற அந்த போராட்டம் தான் இப்போது தொழிற்சங்க இயக்கம் சந்திக்கிற சவால் மிகுந்த பணி.  நிரந்தரமற்ற பல்லாயிரக்கணக்கான இந்த தொழிலாளிகளை திரட்டுவது குறித்து சிஐடியு காஞ்சி புரம் மாவட்டம் விவாதிக்க இருக்கிறது. ஒன்றிய மோடி அரசாங்கத்தின் முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கிற புதிய சட்டத் தொகுப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களில் இப்பகுதி தொழிலாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தில்லி விவசாயி கள் போராட்டத்திற்கு ஆதரவாக உணவு புறக்கணிப்பு போராட்டத்திலும் மாநிலங்கள் கடந்து நடக்கக்கூடிய பல்வேறு தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக சிஐடியு தனக் கான வர்க்க பங்களிப்பினை செலுத்தி வருகிறது. 

தமிழகத்தில் விவசாயிகள் இயக்கம் கிராமப்புறங்க ளில் தனது அமைப்பை வலுவாக செயல்படுவதற்கு அதற்கான ஊழியர்களை பராமரிப்பதற்கு தனது சொந்த நிதியிலிருந்து தொழிலாளர்களுடைய பங்க ளிப்பாக தொடர்ந்து நிதி ஆதாரங்களை விவசாய இயக்கத்திற்கு வழங்கி வருகிறது.  வாலிபர் இயக்கம், மலை மக்கள் இயக்கம், இலங்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி என பல்வேறு சகோதர அமைப்புகளுக்கும் தனது சகோதர ஆதரவை தெரிவிக்கிற சகோதர போராட்டங்களையும் சிஐடியு நடத்தி வருகிறது. பாரம்பரிய பட்டு நெசவுத் தொழிலில்  வேலை வாய்ப்பு பெறக்கூடிய 25000க்கும் மேற்பட்ட நெச வாளர்களை பாதுகாத்திட அதற்கான நெருக்கடிகளை எதிர்த்தும் தொழிலாளர் நல சட்டங்களுக்கான போராட் டங்களை எதிர்கொள்ளவும் சிஐடியு தனது தொழிற் சங்க அமைப்பை பலப்படுத்துகிற பணிகளை இம்மாநாடு விவாதிக்க இருக்கிறது. 

இந்த பணியில் இக்காலத்தில் ஏராளமான போலீஸ் வழக்குகளும் தொழிலாளர்களின் வேலை பறிப்புக ளும் வெளி மாநிலங்களுக்கு இடம் மாற்றம் செய்யும் கொடுமைகளும் இங்கு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.  எந்த நேரத்திலும் அதிர்ச்சிக்குரிய போராட்டங்கள் வருவது தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக இம் மாவட்டம் இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் வலு வான தொழிற்சங்க இயக்கமாக சிஐடியு தன்னை தகவமைத்துக் கொண்டுவருகிறது. அனைத்து வகையான தொழிலாளிகளையும் முதலாளித்துவ அரசியல் சுரண்டல் கொள்கைகளுக்கு எதிராக போராடுகிற அரசியல் சிந்தனையை உரு வாக்குகிற அந்த காரியத்தை நோக்கி சிஐடியு தன் பயணத்தை தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் தடைகளுக்கு மத்தியில் ஓரடி முன்னே என்கிற அந்த வளர்ச்சியை நோக்கி சிஐடியு முன்னேறுகிறது. 

கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்


 

;