articles

img

‘நடுநிலை’யே உன் விலை என்ன? - அ. விஜயகுமார்

தமிழகம் உள்ளிட்ட 102 மக்களவைத் தொகுதி களில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. வெள்ளிக் கிழமை (ஏப்,19) இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சமூக ஊடகங் களின் செயல்பாடுகள் முந்தைய தேர்தல்களை காட்டி லும் இந்த தேர்தலில்  அதிகரித்துள்ளது. ஆனால் பாரம்பரியமான அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் நம்பகத்தன்மை ஒவ்வொரு தேர்தலின் போதும் தேய்ந்து கொண்டே வருகிறது. நடு நிலை என்று சொல்லிக்கொள்ளும் பல செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி அலைவரி சைகள் தேர்தல் களத்தில் உள்ள பல்வேறு அணிகள் குறித்த செய்திகளை வெளியிட்ட போதிலும், பாஜக குறித்த செய்திகள் மற்றும் விமர்சனங்களை வெளி யிடும் போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கை உணர்வுடனும் நடந்து கொண்டன. இதற்கு காரணம் அக்கட்சி மீதான அச்ச உணர்வின் வெளிப்பாடு மட்டும்தானா? 

‘உரைகல்லின்’ மிதப்பு

உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொள் ளும்  பத்திரிகைக்கு தமிழகத்தில் இப்போதே பாஜக ஆட்சி வந்துவிட்டது போன்று நினைப்பு. மக்கள வைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அந்தத் துறை தொடர்பான செய்திகளை அது வெளியிட்ட விதத்தைப் பார்த்தாலே அது புரியும். அந்நியச் செலா வணி மோசடி உள்பட  பல குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ள டிடிவி தினகரனை அருகில்  வைத்துக் கொண்டு  பிறகட்சிகளை ஊழல் கட்சிகள் என்று  அண்ணாமலை பேசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்.  தமிழகத்தின் கோயபெல்ஸ் ஆக மாறியுள்ள அண்ணாமலை கேள்வி கேட்கும் செய்தியாளர்களை மிரட்டுவது, அவர்களின் நிறுவனத்திற்கு நிர்பந்தம் அளித்து பணியில் இருந்து நீக்குவது போன்ற கேவ லமான வேலைகளை துவக்கியிருக்கிறார். நேர்மை யான செய்தியாளர்களை நிறுவனங்கள் பாராட்டும் காலம்மாறி பாஜக தலைவர்களிடம் கேள்வி கேட்டு  அவர்களை நெருக்கடிக்குள் தள்ளாதே என அறிவுரை சொல்லும் ஊடகங்கள் தான் அதிகரித்துள்ளன

பாஜகவின் கூரியர்

தமிழால் இணைவோம்;மோடி பிம்பத்தை கட்டமைப்போம் என்பதே மற்றொரு நாளிதழின் வேலையாக மாறிவிட்டது. ராமர்கோவில் ஆக இருக்கட்டும் பாஜக தேர்தல் அறிக்கையாக இருக்கட்டும் இரண்டையும் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை ஒளியை விட மிக வேகமாக செய்தது. பாஜகவின் கூரியர் பணிக்கு குறுகிய கால ஒப்பந்தம் எடுத்துள்ள அந்த நாளிதழ் வடமாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு குறித்த செய்திகளை வராமல் பார்த்துக் கொள்கிறது. இப்படி இவர்கள் எத்தனை நாட்கள்தான் தமிழக வாசகர்களின் கண்களையும் காதுகளையும் மூடி வைக்க முடியும்.

போட்டா போட்டி

நேர்மையின் பக்கம் நிற்க துணிவு வேண்டும். அந்த துணிச்சலை தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இழந்து விட்டதை இந்த தேர்தலின் போது பார்க்க முடிந்தது. மற்ற நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வந்த தினமல ருக்கு இந்தாண்டு நாமே வெளியிட்டால் என்ன என்ற ஆசை வந்துவிட்டது. தமிழகத்தில் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அந்த நாளிதழ் இரவு பகலாக வேலைபார்த்துக்கொண்டிருக்கிறது. கமலாலயத்தில் தயாரிக்கப்பட்ட சர்வே முடிவுகளை  நடுநிலைமையான முடிவுகள் என முத்திரை குத்தி  தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க இவர்களிடையே போட்டா போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

வில்லனுக்கு  கதாநாயகன் வேடம்

 தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதுகுறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னணி தமிழ் நாளிதழ், தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நேர் எதிரான கொள்கைகளை கொண்ட பிரதம ருக்கு வேஷ்டி, சட்டை, துண்டு அணிவித்து அழகு பார்த்தது. பாமர மக்களுக்கு  தேவையான செய்தி களை வெளியிட்டு அதன் மூலம் தமிழை வளர்த்த  அந்நிறுவனம், பிரதமரை வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து குணச்சித்திர நடிகராக மாற்றும் வேலையை  கச்சிதமாக செய்து முடித்தது. 

‘மெய்நிகர்’ உலகின் பொய்முகம்

புதிய புதிய பெயர்களில் பல யூ டியுப் சேனல்கள் இந்த காலகட்டத்தில் முளைத்தன. அவர்கள் அனை வரும் குளம் குட்டையில் அல்ல கான்கிரீட் தரையில் தாமரையை மலர வைக்கும் முயற்சியில் இறங்கியுள் ளன.  தமிழகத்தில் பாஜகவின் தோல்வி உறுதிப் படுத்தபட்ட ஒன்று. எனவே அவர்களின் நோக்கம் மக்களவைத்  தேர்தல் அல்ல. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் தான். அதற்கான முன்னோட்டமாக இந்த தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக் கிறார்கள். அதற்கு சில ஊடகங்களும் விலை போயுள்ளன.

இணைய ஏடுகளுக்கு அதீத கட்டுப்பாடு

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்த நிலையைப் பார்க்கமுடிகிறது. கேரளாவில் ஆளும்  இடது முன்னணிக்கு எதிராக அனைத்து ஊடகங் களும் கம்பு சுழற்றிக்கொண்டிருக்கின்றன.  பாஜக  ஆதரவு ஊடகங்களுக்கு பத்திரிகைச் சுதந்திரம், பத்திரி கையாளர்கள் நலன் குறித்து சிறிதுகூட கவலை யில்லை. கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் நேர்மையான மற்றும் நடுநிலை யான பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டனர். உலகிலேயே மிக உயர்ந்த ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்திய நாட்டில்தான் அச்சு முதல் டிஜிட்டல் வரை அனைத்து வகையான ஊடகங்களிலும் சுதந்திரமான பத்திரிகையாளர்கள் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருந்தது. அரசு மற்றும் அதன் ஏஜென்சிகளின் கண்காணிப்பின் கீழ்  அவர்கள் கொண்டுவரப்பட்டனர். சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மீது  திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்றன.

நாடாளுமன்றத்தில் உள்ள செய்தியாளர் அரங்கில் முன்பு மூத்த செய்தியாளர்களை காண முடியும். அவர்கள் கலந்துரையாடும் போது புதிய புதிய தகவல்கள் வெளியே வரும். இவை நாட்டு மக்களுக்கு செய்திகளாக சென்று சேரும். ஆனால் இன்று அந்த அரங்கம் வெறிச்சோடிக் கிடக்கிறது. 

முடக்கப்பட்ட நியூஸ் கிளிக்

தி வயர், கேரவன் மற்றும்  சுதந்திரமான ஊடகங்களின் குரல் வளைகள் நெரிக்கப்பட்டன. நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் பொய்யான குற்றச் சாட்டின் பேரில் முடக்கப்பட்டது.  46 பத்திரிகை யாளர்கள் மீது தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அவர்களது இல்லங்களிலும் அலுவலகங் களிலும் சோதனைகளை நடத்தியது. நியூஸ்கிளிக் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அதன்  மனிதவளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்ற சோதனைகள் மற்றும் கைதுகள் இந்தியாவில் அதிகரித்து வரும் சர்வாதிகாரப் போக்கின் ஒரு பகுதி யாகும். காவல்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தி ஊடகங்கள் அச்சுறுத்தப் படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது.

வரலாறு காணா  இணையக் கட்டுப்பாடு

நரேந்திர மோடி ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. பத்தி ரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 2022 இல் 150 ஆவது இடத்தில் இருந்தது. இது 2023இல்  161 (180 நாடுகளில்)  ஆக மேலும் சரிந்துவிட் டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 பத்திரிகையாளர்கள் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பத்திரிகையாளர்கள் இதே குற்றச்சாட்டுகளுடன் பிணையில் உள்ளனர். ஒரு ஊடகவியலாளர் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட வில்லை. மேலும் ஒருவர் குற்றச்சாட்டில் இருந்து விடு விக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில், கடந்த பத்து ஆண்டு களில் இணையகட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு ஊடகவியலாளர்களைத் துன்புறுத்துவது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை யினரைத் தவிர தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் சுதந்திரமான ஊடகங்களை குறிவைத்து தாக்குவது அதிகரித்துள்ளது. இது அரசாங்கத்தின் அன்றாட உத்தியாக மாற்றப்பட்டுள்ளது. பூஞ்ச் கொலைகள் குறித்த கட்டுரையை 24 மணி நேரத்திற்குள் அதன் இணையதளத்தில் இருந்து நீக்கத் தவறினால், ஒட்டுமொத்த இணையதளமும் நீக்கப்படும் என்று சமீபத்தில் கேரவன் இணைய இதழிடம் கூறப்பட்டது. 2021-22இல் திருத்தப் பட்ட தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள், ஊடக நிறுவனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படு கின்றன. மேலும் செய்தி இணையதளங்கள் உட்பட டிஜிட்டல் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தை வெளி யீட்டாளரிடம் கேட்காமல் அகற்றவும் திருத்தங்களை செய்யவும் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்ச கத்திற்கு அந்த விதிகள், அதிகாரம் அளித்துள்ளது.

படாதபாடு பட்ட  பத்திரிகை சுதந்திரம்

தி வயர் உட்பட பல ஊடக நிறுவனங்கள் மற்றும்  பிற நிறுவனங்கள் இந்த விதிகளை எதிர்த்து நீதி மன்றத்தில் தாக்கல்  செய்துள்ள மனுக்கள் விசாரணை யில் உள்ளன. ஊடக சுதந்திரத்தை நசுக்கவே மோடி அரசாங்கம் ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023ஐ அவசர அவசரமாக கொண்டுவந்து அமல்படுத்தியது.  இதற்கு முன்பு ஒன்றிய அரசு 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புச் சட்டம், 2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும்  அதற்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) விதிகள், 2021 ஆகியவற்றைக் கொண்டு வந்தது நினைவிருக்கலாம். இந்தச் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகக் கூறி மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன. 

வேவு பார்த்த மோடி அரசு

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை ஊடகங்களோடு நின்றுவிடவில்லை. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் திரைப்படங்கள் முதல் ஓடிடி இயங்குதளங்கள் வரை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மோடி  அரசின் இரண்டாவது ஐந்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், இஸ்ரேல் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட பெகாசஸ் சாத னத்தை கொண்டு உளவு பார்க்கப்பட்டனர்.  ஒரு காலத்தில் ஒரு சிறந்த தேசிய செய்தி நிறுவன மாக இருந்த யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா (யுஎன்ஐ) இன்று  மூச்சுத் திணறுகிறது. பிடிஐ மற்றும் யுஎன்ஐ போன்ற தேசிய செய்தி நிறுவனங் களை ஒதுக்கிவிட்டு ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தனையில் செயல்படும் 1948இல் உருவாக்கப்பட்ட ஹிந்துஸ் தான் சமாச்சார் நிறுவனத்தை அரசு ஊக்கப்படுத்து கிறது.  ஹிந்துஸ்தான் சமாச்சார் நிறுவனத்திற்கு செய்தியாளர்களை கிராமப்புற அளவில்கூட நியமிக்கும் வகையில் அந்நிறுவனத்தை மோடி அரசு   வலுப்படுத்தி வருகிறது. 

ஊடக சுதந்திரம் காக்க...

இன்று பத்திரிகைச் சுதந்திரம் மட்டுமல்ல, பத்திரிகையாளர் ஊதிய உயர்வு குறித்த  மஜிதா  ஊதியக் குழுவின் பரிந்துரைகளும் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது. அந்தகுழுவின் பரிந்துரை களுக்கு எதிராக உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவற்றை எதிர்த்து பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு கடந்த ஐந்தாண்டுக்கால மோடி  ஆட்சியில் தொழிலாளர் சட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டன. 8 மணி நேர வேலை மற்றும் வேலைஉத்தர வாதம் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் எந்தவித காரணமும் இன்றி வெளியேற்றப்பட்டனர். எனவே மோடி ஆட்சி உழைக்கும் மக்களுக்கு மட்டு மின்றி பத்திரிகையாளர்களுக்கும் எதிரான ஆட்சியே. எனவே நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தையும் பத்தி ரிகையாளர் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் மோடி ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.




 


 

;