இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புகளை பாதுகாக்கவும் கடந்த 10 ஆண்டு காலமாக ஒட்டு மொத்த இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துள்ள மோடி ஆட்சியை தூக்கியெறியவும் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் மேலும் மேலும் வலுவான முறையில் தங்களது ஒற்றுமையையும், பணியையும் மேற்கொள்ள வேண்டுமென சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் கோயம்புத்தூரில் டிசம்பர் 1 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் பகுதிகள்:
பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்க ளும் இந்தியாவை தாங்கள் பெரிய அள விற்கு முன்னேற்றி விட்டதாக புகழ்ந்து கொள்கி றார்கள். இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு தங்களது ஆட்சி அமிர்த காலத்தை கொண்டு வந்துவிட்டதாக பிதற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் அமிர்த காலம் யாருக்கானது?
ஒரு புராணக் கதை உண்டு. அமிர்தம் பிறந்த கதை. விஷ்ணு புராணத்தில் வருகிறது. அமிர்தத்தை எடுப்ப தற்காக பாற்கடலை கடைகிற நிகழ்ச்சி நடந்ததாக அதில் வருகிறது. ஒருபுறம் தேவர்கள், மறுபுறம் அசுரர் கள் அமர்ந்திருக்க பாற்கடலை கடைகிறார் விஷ்ணு. இரண்டு குடங்கள் வருகின்றன. ஒரு குடத்தில் அமிர்தம் இருக்கிறது. மற்றொரு குடத்தில் விஷம் இருக்கிறது. அமிர்தத்திற்காக தேவர்களும், அசுரர்க ளும் காத்திருந்த நிலையில், தேவர்கள் அயர்ந்தி ருந்த தருணத்தில் அசுரர்கள் அமிர்தத்தை எடுத்துச் சென்று விடுகிறார்கள். பின்னர் அவர்களிடமிருந்து அமிர்தத்தை பறித்து தேவர்களுக்கு கொடுக்கப் பட்டது என்பது புராணக் கதை.
இன்றைய இந்தியாவில் ஏழைகளுக்கு அமிர்த காலம் என்று சொல்லிவிட்டு பெரும் பணக்காரர்கள், மகா கோடீஸ்வரர்களுக்கு அமிர்தத்தை, அமிர்த காலத்தை அளித்திருக்கிறது மோடி அரசு. அதை மீண்டும் நாட்டின் ஏழைகள் வசமே ஒப்படைப்ப தற்கான பெரும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டி யுள்ளது. அத்தகைய போராட்டத்தை - அமிர்த காலத்தை உண்மையிலேயே கொண்டு வருவ தற்கான போராட்டத்தை நடத்தும் முகமாகத்தான் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு இந்தியா எனும் அணி சேர்க்கையை உருவாக்கியுள்ளோம்.
இந்தியாவின் வளர்ச்சி தங்களது ஆட்சியில் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.6 சதவீதம் அள விற்கு அதிகரித்துவிட்டதாக மோடி அரசு படாடோ பமாக பிரச்சாரம் செய்து வருகிறது. 7.6 சதவீதம் என்றால், அது உண்மையிலேயே மிகப் பெரிய வளர்ச்சி விகிதமாகும். ஆனால் உண்மை அதுதானா? இல்லை என்கிறார் இந்தியாவின் முதன்மையான புள்ளியி யல் துறை ஆய்வாளர் பிரணாப் சென். பாஜக ஆட்சி யாளர்கள் கூறுவது முற்றிலும் திரிக்கப்பட்ட, பொய் யான விபரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வளர்ச்சி சதவீதமாகும். உண்மையிலேயே 7.6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றால், கடந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டு வருகை 77 சதவீதமாக வீழ்ச்சிய டைந்துள்ளது; புதிய முதலீடு வருகை 72 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது; ஏற்றுமதி, இறக்குமதி விகிதம் 79 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது; அது ஏன்?
அதுமட்டுமல்ல, கடந்த ஓராண்டில் வரி செலுத்தும் பட்டியலிலிருந்து 44 ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங் கள் காணாமல் போயுள்ளன. அத்தனை நிறுவனங்க ளும் மூடப்பட்டுள்ளன என்ற விபரங்கள் வெளியாகி யுள்ளன.
இதன் பெயர் தான் வளர்ச்சியா?
இவை மட்டுமல்ல, நாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பட்டினி குறியீடு அதிகரித்து வருகிறது.
இந்திய மக்களின் உச்சாணிக் கொம்பில் உள்ள வெறும் 1 சதவீதம் பணக்காரர்கள், மகா கோடீஸ்வ ரர்களின் வருமானம்- சொத்துக் குவிப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. அடிமட்டத்தில் உள்ள 25 சதவீதம் ஏழை, எளிய, வறிய மக்களின் வருமானம் 13 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டு கால மோடி யின் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகியுள்ளனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகி யுள்ளனர்.
இத்தகைய தருணத்தில் உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா மலைப்பகுதியில் நடந்து வந்த சுரங்கச் சாலை அமைக்கும் பணியில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி வெற்றிகர மாக நடந்துள்ளது. நவீன இயந்திரங்கள் எல்லாம் தோல்வியடைந்தன; வெளிநாட்டிலிருந்து மோடி அரசு வரவழைத்த மீட்புப் பணி வல்லுநர்களாலும் முடிய வில்லை. ஆனால் சுரங்கத்திற்குள் கைகளாலேயே மண்ணைத் தோண்டி எலி வளை போன்று அமைத்து அதன்மூலம் 18 மணி நேரத்திற்குள்ளாகவே வெற்றிகர மாக அந்தத் தொழிலாளர்களை 12 தொழிலாளர்கள் மீட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளனர். அந்த 12 பேரும், எலி வளை முறையில் அமைக்கப்படும் சுரங்கத் தொழிலாளர்கள் ஆவர். இதைவிட முக்கிய மானது, அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்பது.
இதே முஸ்லிம்களும் தலித்களும் தான் பாஜக ஆட்சியில் கொடூரமான வெறுப்புக்கும், வன்முறைக் கும் உள்ளாகியிருக்கிறார்கள். மத, சாதி ரீதியான தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறார்கள். உண்மை யில் மத, சாதி பேதமின்றி, சகத் தொழிலாளர்களை மீட்பதற்காக தங்களது உயிரையும் பணயம் வைத்த இந்த 12 தொழிலாளர்கள் தான் இந்த நாட்டின் உண்மை யான கதாநாயகர்கள். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வணக்கம் செலுத்துகிறது.
பிரதமர் மோடி அவர்களே, இந்த தொழிலாளர்க ளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் இந்தியாவை உருவாக்குவதற்காக தங்களது உயிரையே பணயம் வைக்கிறார்கள். நீங்களோ இந்தியாவை அழிப்பதற்காக முயற்சி செய்கிறீர்கள்.
அந்த 12 தொழிலாளர்களும் அரசாங்கம் அளிக்கும் வெகுமதி தங்களுக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். எங்கள் சொந்த சகோதரர்களை காப்பாற்றுகிற கடமை யைத்தான் நாங்கள் செய்தோம் என்று கூறியிருக்கி றார்கள். இவர்கள் அல்லவா உண்மையான நாய கர்கள்? இவர்கள், எங்களது தாய்மார்கள் வசிக்கும் கிராமங்களில் வீட்டு வசதியோ, சாலை வசதியோ இல்லை; எங்களது கிராமங்களை கவனியுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மனித நேயத்தை உணர்த்திய, சக மனிதர்கள் மீது சாதி, மத பேதமல்ல; அன்பை மட்டுமே செலுத்த வேண்டும் என்ற உயரிய விழுமியங்களை இந்தத் தொழிலாளர்கள் மோடி அரசுக்கு உணர்த்தி சென்றி ருக்கிறார்கள். இதுதான் உண்மையான இந்தியா.
ஆனால் மோடி அரசு, பாஜக ஆளும் மாநிலங்க ளில் பெண்கள், பட்டியலின, பழங்குடியின மக்கள், சிறுபான்மை மக்கள் என அனைவரும் வாழ்விழந்து, வாழ்வாதாரங்கள் இழந்து, மாண்பிழந்து, சிறுமைப் பட்டு கிடக்கிற நிலையே நீடிக்கிறது. நமது சகோதரி கள், பெண் குழந்தைகள் மீது ஒவ்வொரு மணி நேர மும் 49 பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்படு வதாக அதிர்ச்சி செய்திகள் வருகின்றன. பழங்குடி, மலைவாழ் மக்களிடமிருந்து வன நிலங்கள் பறிக்கப்பட்டு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
அதேபோல நாட்டின் அரசியலமைப்பின் அனைத்து அடிப்படைகளும் தகர்க்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் 11 நிமிடங்களில் 22 மசோதாக்கள் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்படுகின்றன. நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் அரசின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறது. அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஏவப்படுகின்றன.
அமலாக்கப் பிரிவு என்பது கிட்டத்தட்ட 6 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஆனால் இதுவரை வெறும் 23 வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைத் தும் மோடி அரசால் ஏவப்பட்டு பதிவு செய்யப்பட்ட திட்டமிட்ட பொய் வழக்குகளே என்பது உறுதியாகி றது. இத்தகைய அமலாக்கப் பிரிவின் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் அம லாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்களால் குறி வைக்கப்படும் அரசியல் பிரமுகர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் அந்த நிமிடமே அவர்கள் அரிச்சந்தி ரன் ஆகிவிடுகிறார்கள் என்பது தான் வேடிக்கை.
மோடி அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் பத்தி ரிகையாளர்கள் உட்பட அனைவரையும் கைது செய்து உபா சட்டத்தின் கீழ் விசாரணை ஏதுமின்றி, பல ஆண்டு களாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. ஊட கங்கள் ஒடுக்கப்படுகின்றன. மோடி அரசுக்கு ஆதர வாக செயல்படும் ஊடகங்கள் தவிர பிற ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. சோதனைக்கு உள்ளாக்கப்படு கின்றன.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மோடி அரசு தனது அரசியல் ஏஜெண்டுகளாக ஆளு நர்களை பயன்படுத்துகிறது. அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை அவர்கள் முற்றிலும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தமிழ்நாடு, கேர ளாவில் ஆளுநர்கள் மேற்கொள்ளும் அராஜகங் களை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அது மட்டு மல்ல, மாநிலங்களில் நிதி ஆதாரங்கள் ஒன்றிய அரசால் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. அதையும் மீறி கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு அனைத்திலும் முதல் மாநிலமாக வெற்றி பெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் இந்திய தேசத்தை பாதுகாக்க ஆட்சியதிகாரத்திலிருந்து உடனடியாக மோடி அரசு தூக்கியெறியப்பட வேண்டியது அவசியம். அதற்கான பணிகளில் உடனடியாக களம் இறங்குவீர்.