articles

img

கனன்று கொண்டிருக்கும் ஆறா பெருநெருப்பு...

பூவிரியும், காவிரியின் ஆற்றங்கரையிலே… 
பொன்வயல்கள் விடியும் அடி வானம் வரையிலே…
பாய்விரிதல் போல் விரியும் நீரின் பரப்பிலே…
வாய்விரியும் செங்கமலம் பவள நிறத்திலே…
காவியங்கள் இப்படித்தான் தஞ்சையை பாடும்…
களஞ்சியங்கள் நிறைந்ததும் மக்கள் வயிறுகள் வாடும்… 

என்ற நவகவியின் பாடல் வரிகளின்தொடர்ச்சியே அன்றைய தஞ்சைமண் ணின் வயல்வெளிகளையும், மக்களின் வாழ்வியலையும் விவரிக்கும். வளம்கொழிக்கும் பூமியாக நாம் கருதிக் கொண்டிருக்கும் டெல்டாவில், 1940-களின் இறுதிவரை அல்லது இரிஞ்சூர் கோபாலகிருஷ்ணனின் வதம்வரை, தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த, வார்த்தைகளில் சொல்லமுடியாத வேதனைகள் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதிகாலை ஏர் ஓட்டிச் சென்று, சூரியன் மறைந்த பின்னர் நிலத்தை விட்டு வெளியேறி, ஆண் டைகளின் வீட்டில் சென்று ஒரு படி, இரண்டுபடி நெல் கூலிவாங்கி, அதை வீட்டுக்குக்கொண்டு வந்து உரலில் இடித்து அரிசியாக்கி, பொங்கி, அதன்பின் பசியோடு தூங்கிப் போயிருக்கும் பிள்ளைகளை எழுப்பி, அவர்களுக்கு சோறு ஊட்டிவிட்டு, இரவு பன்னிரண்டு மணிக்குத் தூங்கி, பின் மீண்டும் அதிகாலை எழுந்து இதேபோல ஒரு காலச்சக்கரத்தில் பயணிக்கும் கொடுமையைச் சொல்லி மாளாது. 

தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணம்புரிய வேண்டுமென்றால் ஆண்டைகளின் அனுமதி அவசியம். ஆண்கள் வேட்டி அணியக்கூடாது, செருப்பு போடக்கூடாது. எதிர்த்தால் சவுக்கடி, சாணிப்பால் கொடுமைகள்… இவை எல்லாம் எங்கோ நடந்தவை அல்ல. சமீபத்தில் உள்ள கீழத்தஞ்சையில் சமீபகாலம் வரை நடந்தவை. இக்கொடுமைகளை எதிர்த்துச் சமர் செய்தவர்கள் உண்மையில் புரட்சிக்காரர்கள்தான். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலும், விவசாயத் தொழிலாளர் இயக்கத்திலும் இருந்தார்கள். தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி,கே.ஆர்.ஞானசம்பந்தம், கோ.வீரய் யன், கோ.பாரதிமோகன் உள்ளிட்ட இன்னும் பிற மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்ட வழிமுறைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த இயக்கமே ஆண்டைகளின், பண்ணையார்களின் கொடுமைகளை மிகக் குறுகிய காலத்தில் ஒழிக்க உதவியது. 

அமெரிக்காவில் சிகாகோ நகரில் 8 மணி நேரவேலை 8 மணிநேர உறக்கம்8 மணி நேர ஓய்வு என்ற மூன்று கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து அங்கே தொழிலாளி வர்க்கம்போராடிய போது ஆளும் வர்க்கம்அடக்கி ஒடுக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதேபோல்தான் கீழத்தஞ்சையில் கூலிக்காகப் போராடிய விவசாயத் தொழிலாளர்களையும் அப்பாவி மக்களையும் கட்சியின் துடிப்பு மிக்க இளைஞர்களையும் நிலப்பிரபுத்துவ ரவுடிக்கும்பல் அரசின் காவல்துறை துணையோடு தடியடி நடத்தி கீழத்தஞ்சை மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. இந்நிலையின்தான் 1968-ல் டிசம்பர்25 அன்று இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணனின் தலைமையில் குண்டர்படை கீழவெண்மணியில் ராமய்யாவின் குடிசைக்குள் வைத்து குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட தீயிட்டு எரித்து கரிக்கட்டைகளாக்கினர். 

இந்நிலையில் 1968 டிசம்பர் 26, 27,28-ல் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில்கலந்துகொள்ள கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்த தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் வீ.மீனாட்சிசுந்தரம், கே.ஆர்.ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் சம்பவம் அறிந்து வெண்மணிக்கு திரும்பி வந்தனர். அங்கு திரண்டிருந்தமக்கள் கூட்டத்திற்கு முன்பு பதற்றத்துடன் நிலைகுலைந்து நின்ற கட்சி தோழர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அத்தகைய கோரச் சம்பவத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்திற்கு வழிகாட்டினர். எந்த நோக்கத்திற்காக அன்றுஉழைப்பாளி மக்கள் போராடி ரத்தம் சிந்தினார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இன்று அந்த 44 வெண்மணி தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் செம்பதாகையுடன் 1000 மோட்டார்சைக்கிளில் தொழிலாள தோழர்கள் அணிவகுக்கும்மாபெரும் பேரணி திருவாரூரில் இருந்துவெண்மணி நோக்கி புறப்படுகிறது. ஆறா பெரு நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் வெண்மணி தியாகிகளை என்றும் நினைவில் கொள்வோம்.

===ஐ.வி.நாகராஜன்===

;