articles

img

“வகுப்புவாதம் ஒரு அரசியல் திட்டம், மதமல்ல”

“வகுப்புவாதம்ஒரு அரசியல் திட்டம், மதமல்ல” 

ஸ்ரீகாந்த் மிஸ்ரா

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36வது மாநாட்டில் பேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, இந்தியாவில் வளர்ந்து வரும் செல்வ சமத்துவமின்மை மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தொழிலாளர் ஒற்றுமையில் பங்கேற்பு ஜூலை 9, 2025 வேலை நிறுத்தத்தில் சங்கத் தோழர்களின் பங்கேற்பு குறித்துப் பேசிய அவர், “25 கோடி தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தில் நாமும் துணை நிற்கிறோம் என்பதைப் பறைசாற்றுவதாக இது அமைந்தது” என்று கூறினார். செல்வ சமத்துவமின்மையின் கொடுமை “டார்வினின் ‘Survival of the fittest’ (தகுதியுள்ளது வாழும்) என்ற கோட்பாடு தற்போது இந்தியாவில் ‘survival of the richest’ (பெரும் பணக்காரர்களே வாழ்வர்) என்று மாறிவிட்டது” என்று விமர்சித்த அவர், இந்தியாவின் செல்வப் பகிர்வு குறித்து அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை வெளியிட்டார்: 1% பணக்காரர்களிடம் 40% செல்வம் குவிந்துள்ளது; 10% பணக்காரர்களிடம் 70% செல்வம் குவிந்துள்ளது;  கடைநிலை 50% மக்களிடம் வெறும் 3% செல்வம் மட்டுமே உள்ளது என விவரித்தார். பட்டினியில் வாடும் இந்தியா 2024இல் உலக பட்டினி குறித்த ஆய்வில் பட்டினியால் வாடும் 127 மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 105வது இடத்தை வகிப்பதை நினைவுகூர்ந்த அவர், இந்த நிலையை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். விவசாயிகள் மீதான தாக்குதல் மோடி அரசின் விவசாயிகள் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “பஹல்காம் தாக்குதல் குறித்து இன்றுவரை வாய் திறக்காத மோடி தான் விவசாயிகளின் வாழ்வாதாரங்களுக்காக உழைப்பதாக மார்தட்டிக் கொள்கிறார்” என்றார். “தில்லியில் போராடிய விவசாயிகளில் 750 பேரைக் கொன்றுவிட்ட இந்த நாட்டில்தான் ஆண்டுதோறும் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைக் கணிசமாக மறந்துவிடுகிறார்” என்று அவர் கடுமையாகக் கண்டித்தார். இன்சூரன்ஸ் ஊழியர்களின்  மூன்று கடமைகள் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினரின் மூன்று முக்கிய கடமைகளாக அவர் குறிப்பிட்டவை:  1. சமூக நீதி பெண்கள், தலித்துகளின் உரிமைக்காகப் போராடுவது;  2. மதச்சார்பின்மை பாதுகாப்பு   சாதி, மத, இன ரீதியாக மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியை எதிர்கொள்வது. எடுத்துக்காட்டாக மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் (ஒரு பாஜக அமைச்சர் உட்பட) குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். 3. ஜனநாயகம் மற்றும் இறையாண்மை பாதுகாப்புக்காக போராடுவது. “ஆளும் அரசுக்கு இணக்கமான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்காமல் மௌனம் சாதிப்பது” கவலையளிப்பதாகக் கூறினார். அரசியலமைப்பு பாதுகாப்பு “ காப்பீட்டு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அரசியல் பார்வைகள் உடையவராக இருப்பினும், ஒரு பொறுப்பு மிக்க தொழிற்சங்க உறுப்பினர் என்ற வகையில் சாதி, மதம் கடந்து இந்தத் தேசத்தின் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முன் உள்ளது” என்று வலியுறுத்தினார். பகத்சிங்கின் செய்தி பகத்சிங் தூக்கு மேடைக்குச் செல்லும் இறுதி வேளையில் கூறிய வார்த்தை களை மேற்கோள் காட்டினார்: “இந்தியா முதலாளித்துவ, ஏகாதிபத்தியப் பாதையில் ஒரு நாளும் பயணிக்க இயலாது; பொதுவுடைமையே அதன் பாதை” என்ற வரிகளோடு தனது உரையை நிறைவு செய்தார்.