articles

img

விடுக(வி)தை - மா.முத்துச்சாமி, மு.வாடிப்பட்டி

விடுக(வி)தை - மா.முத்துச்சாமி, மு.வாடிப்பட்டி

வெறி நாய் அல்ல
தெரு நாய் அல்ல
குரைக்காத நாய்
மோப்பம் பிடிக்காத நாய்

காவல் காக்கும் நாய்
காவல் துறைக்கு துணையான நாய்
திருடர்களுக்கு சிம்ம  சொப்பனம்
மின்சாரம் உண்ணும் நாய்

தெருவெங்கும் அலையாத நாய்
 நெடுமரத்தில் இரவு பகல்
கண்விழிக்கும் நாய்

சுட்டெரிக்கும் வெயில்
புயல் மழைக்கும் அஞ்சாத நாய்
யார் அந்த நாய்?
முயலுங்கள் குழந்தைகாள்!