articles

அறிவியல் சிந்தனையே புரட்சியின் அடிப்படை - உ.வாசுகி உரை

அறிவியல் சிந்தனையே புரட்சியின் அடிப்படை 

உ.வாசுகி உரை சென்னை, செப். 12 -  சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். நாடு முழுவதும் நினைவு நிகழ்ச்சிகள் “நாடு முழுவதும் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பல்வேறு வடிவங்களில் நடை பெறுகிறது. தமிழ்நாட்டில் அதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உடல் தான பதிவு  நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்று வாசுகி தெரிவித்தார்.

மார்க்சிய சித்தாந்தத்தில் உறுதி சீத்தாராம் யெச்சூரியின் அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய வாசுகி, “தோழர் சீத்தாராம் யெச்சூரி மார்க்சிய சித்தாந்தத் தின் நிலைபாட்டில் மிக உறுதியாக நின்று தான் பிரச்சினைகள் குறித்த மதிப்பீட்டை முன்வைப்பார், அரசியல் விளக்கங்களை அளிப்பார்” என்றார். மார்க்சியம் - அறிவியல் பார்வை “மார்க்சியம் என்பது அறிவியல் பார்வையை உள்ளடக்கியது. எனவேதான் ஒரு சமூகம் அறிவியல் சிந்தனையோடு முன் னேறும் போது, அங்கு புரட்சிகரக் கருத்து களை விதைப்பது என்பது மிக சுலபமாக இருக்கும். பகுத்தறிவு வேண்டும், கேள்வி  கேட்க வேண்டும், தரவுகள் மூலம் உண்மை களைத் தேட வேண்டும், ஆய்வுகள் மூலம்,  ஆராய்ச்சிகள் மூலம் புதிய சமூக விதி களை உருவாக்க முடியும். இயற்கைக்கான  விதிகளை கண்டுபிடிக்க முடியும்” என்று வாசுகி விளக்கினார்.

“எனவேதான் சமூகத்தில் அறிவியல் பார்வையை வளர்க்க வேண்டும், ஆய்வுக் கான, ஆராய்ச்சிக்கான தளத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத் தில் இந்த உடல் தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்று தெரிவித்தார். சீத்தாராம் யெச்சூரியின் தனித்துவம் சீத்தாராம் யெச்சூரியின் பேச்சு நடையை பாராட்டிய வாசுகி, “தோழர் சீத்தா ராம் யெச்சூரி மிகவும் கடினமான அரசி யல், பொருளாதாரம், அறிவியல் குறித்து அனைவரும் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் குட்டிக் கதைகள், உவமைகளை சில ஒப்பீடுகளுடன் கூறு வார்” என்றார். சாதி-வர்க்க இரட்டைப் போராட்டம் சீத்தாராம் யெச்சூரியின் முக்கியமான அரசியல் தத்துவத்தை விளக்கிய வாசுகி, “சாதியை மனதில் வைத்துக் கொண்டு

 வர்க்கத்தை கவனிக்காமல் இருப்பது  அல்லது வர்க்கத்தை மட்டும் மனதில்  வைத்துக் கொண்டு சாதிய ஒடுக்குமுறை களை, சாதியப் பிரச்சினைகளை கவனிக்கா மல் புறந்தள்ளுவது - இரண்டுமே இன்றைய  சூழ்நிலையில் செய்யக் கூடாத விஷயம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறுவார்” என்றார். வர்க்கப் போராட்டத்தின்  இரு முகங்கள் “வர்க்கப் புரட்சியில் நம்பிக்கை உள்ள வர்கள் கம்யூனிஸ்டுகள். வர்க்கப் புரட்சி யின் ஒருபக்கம் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம். மறுபக்கம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம். இரண்டையும் இணைத்து, இரண்டையும் உள்ளடக்கி செய்தால்தான், அது  இன்றைய சூழலில் வர்க்கப் போராட்டமாக  மாறும் என்று சீத்தாராம் யெச்சூரி கூறு வார்” என்று விளக்கினார். “அப்படி இரண்டையும் இணைத்த போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று உ.வாசுகி அழைப்பு விடுத்தார்.