articles

img

பாகிஸ்தானில் தொடரும் அடக்குமுறைகள்

பாகிஸ்தானில் தொடரும் அடக்குமுறைகள்!'

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2022 மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவரது விடுதலை கோரி பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (Pakis tan Tehreek-e-Insaf) மே 9-ல் போராட்டம் நடத்தின. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பைசலாபாத் நீதிமன்றம், இம்ரான் கட்சியின் 59 உயர்மட்டத் தலைவர்க ளுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது. மே 9 போராட்டத்தில் பங்கெடுத்த நூற்றுக் கணக்கானோருக்கு நீண்ட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைகளில் உள்ளனர்.  வெளிநாடுகளில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களை விற்றதில் நடைபெற்ற ஊழ லுக்கான வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான்  கான் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் ஜாமீனில் இம்ரான் கான் விடுதலை யானார். ஆனால் ஆயிரக்கணக்கான அவரது கட்சி ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் கலவ ரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஏராளமானோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். 2023 ஆகஸ்டில் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப் (Sheh baz Sharif) தலைமையிலான புதிய அரசு இவ ரைக் கைது செய்தது. ஊழல், தவறான நிர்வா கம் மற்றும் தேசத்துரோகம் ஆகிய குற்றங்க ளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன.