articles

img

புதிர் விளையாட்டு - மஞ்சு

புதிர் விளையாட்டு

புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது சுவையான அனுபவம் மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்துக்கு அது ஒரு உடற்பயிற்சியுமாகும். பின்வரும் புதிரை அவிழ்ப்பதற்கு, விடையைப் பார்க்காமல் நீங்களாக முயற்சி செய்யுங்கள். கண்டுபிடித்ததை விடையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

எப்படித் தப்பித்தாள் எமிலி?

நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது. தெருவிளக்குகள் எதுவும் எரியவில்லை. வீடுகளிலிருந்தும் வெளிச்சம் வரவில்லை. எமிலிப் பொண்ணு  குடையை எடுக்காமல் வெளியே வந்ததை எண்ணி நொந்துகொண்டே சாலையில் மெதுவாக நடக்கிறாள்.  கூர்ந்து கவனித்துப் பார்த்தபடி நடக்கிறபோது, ஒரு பக்கம் கறுப்புச் சேலை அணிந்த பெண்மணி ஒருவர் வேகமாக வருகிறார். எதிர்ப் பக்கத்திலிருந்து முன்பக்க விளக்கைப் போடாமல் கறுப்பு வண்ண கார் ஒன்று வருகிறது. அந்த கறுப்புச் சேலைப் பெண் ஒதுங்கி நிற்கிறார். கறுப்புக் கார் ஓட்டுநரும் சாமர்த்தியமாக அதைத் திருப்புகிறார்.  மோதி விடாமல் தப்பித்து சாலையைப் பாதுகாப்பாகக் கடக்கிறாள் எமிலி. எப்படி அது முடிந்தது?

விடை

அது இரவு நேரம் என்று சொல்லவில்லையே! பகல் நேரம்தான் என்பதால் தெருவிளக்குகள் எரியாவிட்டாலும், வீடுகளிலிருந்து வெளிச்சம் வராவிட்டாலும் சாலையில் போதுமான ஒளி இருக்கத்தானே செய்யும்? ஆகவே எமிலி எளிதாகத் தப்பித்தாள் என்ற சரியான பதிலை ஊகித்ததற்காகப் பாராட்டுகள், செல்லம்ஸ்...