articles

img

கனவாகிப் போன நிரந்தர வேலை; களம் காண அழைக்கும் ஒசூர் மாநாடு - எஸ்.பாரதி

கனவாகிப் போன நிரந்தர வேலை; களம் காண அழைக்கும் ஒசூர் மாநாடு

இந்தியா முன்னெப்போதும் கண்டிராத மிகப்பெரிய வரிக் கொள்ளையை ஜிஎஸ்டி பெயரில் 2017 முதல் வசூலித்து வரு கிறது மோடி அரசு. இதனால் நாடு முழுவதும் சிறு, குறு தொழில் நிறு வனங்கள் கடுமையாகப் பாதிக் கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், குஜராத்தின் சூரத் உள்ளிட்ட அனைத்து தொழில் நகரங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 50,000 சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். சூரத்தில் 6,000 தறிகள் மூடப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். எட்டு ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் ஜிஎஸ்டி வரிக் கொள்ளைக்கு எதிராக போராடிய போதும் அசையாத மோடி அரசு, தற்போது பீகார் தேர்தலை முன்னிட்டு சிறு வரிக் குறைப்புக ளை மாயத் தோற்றமாக முன் வைத்துள்ளது. விலையேற்றமும் வரித் திணிப்பும் மக்களின் சேமிப்பைக் கொள்ளையடித்தது மட்டுமல்ல; நாட்டின் வேலைவாய்ப்பில் மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு  வாக்குறுதியும் நடைமுறையும் ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உரு வாக்குவதாகச் சொன்ன பாஜக அரசு, தற்போது ஒன்றிய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள சுமார் 10 லட்சம் பணி யிடங்களை நிரப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக அப்பணி யிடங்களில் ஒப்பந்த வேலை மற்றும் வெளிமுகமைகளை அமர்த்துகிறது. இந்திய ராணுவப் பணி கூட ‘அக்னி பாத்’ திட்டம் மூலம் தற்காலிகப் பணி யாக மாற்றப்பட்டுவிட்டது. தேசப்பணி யாற்றலாம் என கனவு கண்ட இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணிக்குப் பிறகு வெறும் கைக்காசுடன் வெளியேற்றப்படுகின்றனர். 75 சதவீதம் பேர் நிரந்தரப் பணி இல்லாமல் வெளியேற்றப்படுகிறார்கள். பொதுத்துறை  நிறுவனங்களின் சிதைவு உலகின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேயில் சுமார் 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அடிப்படை பாதுகாப்புப் பணிகளுக்குக் கூட ஆள் எடுக்காத நிலையில், மோடி  ஆட்சியின் கடந்த பத்தாண்டுகளில் 677 க்கும் மேற்பட்ட பெரும் விபத்து களை ரயில்வே சந்தித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பாலசோர் விபத்தில் மட்டும் 300 பேர் உயிரிழந்தனர். கடந்த பதினொரு ஆண்டுகளாக முக்கிய பொதுத்துறை நிறுவனங்க ளின் பணியாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகள் 12 ஆகக் குறைக்கப்பட்டு பணியாட்கள் சுருக்கப்பட்டனர். வங்கிப் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலி லும் கூடுதல் பணியிடங்கள் உரு வாக்கப்படவில்லை. பிஎஸ்என்எல் போன்ற மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் பெரும் வேலைவாய்ப்புக் குறைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 2014இல் 2.38 லட்சமாக இருந்த பணியாளர் கள் 2024இல் வெறும் 55,000 ஆகக் குறைந்துள்ளனர் - 75 சதவீத குறைப்பு. 2019இல் மட்டும் 78,569 பேர் விருப்ப ஓய்வில் வெளியேற்றப் பட்டனர். தனியார் நிறுவனங்கள் 2022 அக்டோபரில் 5ஜி சேவை தொடங்கிய நிலையில், பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையிலேயே உள்ளது. 5ஜி வரும் என்பது 2025 இறு திக்குள் எதிர்பார்ப்பு மட்டுமே. நிரந்தர வேலையின் சரிவு 2019-20இல் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 9.2 லட்சம் பேர் நிரந்தர பணியாளர்களாகப் பணிபுரிந்தனர். இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2023-24இல் 8.12  லட்சமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக,  பட்டியலின வகுப்பைச் சார்ந்த நிரந்த ரப் பணியாளர்கள் 1.60 லட்சத்திலி ருந்து 1.44 லட்சமாகவும், பழங்குடியின பணியாளர்கள் ஒரு லட்சத்திலிருந்து 88 ஆயிரமாகவும் குறைந்துள்ளனர். மோடி ஆட்சியின் பத்தாண்டுகளில் நிரந்தரப் பணியாளர்களின் எண் ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி மன்றங்களிலும் இதே நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் தூய்மைப் பணி படிப்படியாக தனி யார்மயமாக்கப்படுகிறது. அரசுப் பணிக ளிலேயே நிரந்தரப் பணிகள் குறைக்கப்படும்போது, தனியார் நிறுவனங்களின் நிலை இன்னும் மோசம். பெரும்பாலான நிறுவனங்க ளில் நிரந்தரப் பணியாளர்கள் குறைக்கப்பட்டு ஒப்பந்தப் பணியா ளர்களும் பயிற்சி மாணவர்களும் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தின் நிலை தமிழ்நாட்டில் மாநில அரசுத் துறை களிலும் பொதுத்துறை நிறுவனங்க ளிலும் பல லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை முறையாக நிரப்பு வதற்குப் பதிலாக ஒப்பந்த முறையில்  ஆள் எடுக்க ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கப் பட்டுள்ளது. அரசுத்துறை மற்றும் பொதுத்துறை பணிகளில் நிரந்தரப் பணி ஒழிக்கப்படும் போது முதலில் பாதிக்கப்படுவது சமூக நீதிதான். மாற்றத்திற்கான வழி ஒன்றிய பாஜக அரசு நவதாராள மயக் கொள்கைகளைப் பின்பற்றி நிரந்தரப் பணியாளர்களைக் குறைக் கிறது. உழைப்புச் சுரண்டலை அதி கரிப்பதன் மூலம் அரசின் செலவு களை மிச்சப்படுத்தி, அந்தப் பணத் தைப் பெரும் முதலாளிகளுக்குச் சலு கையாக வழங்குகிறது. இது தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை மறுக்க முன்னுதாரணமாகிறது. நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கான வரியை உயர்த்தலாம், பெரும் முதலாளித்துவ நிறுவனங்க ளின் லாபத்தின் மீது வரி விதிக்கலாம், பெரும் பணக்காரர்களின் பரம்பரைச் சொத்து கை மாறுவதற்கு வரி போட லாம். இவை சாதாரண மக்களைப் பாதிக்காது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியைப் புதிய மற்றும் நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்தலாம். ஆனால் நவதாரா ளமய அரசுகள் இதைத் தானாகச் செய்யாது. போராட்டங்கள் மூலம் மட்டுமே இதில் மாற்றம் காண முடியும். வாலிபர் சங்க  மாநில மாநாடு இவ்வாறான சூழலில், சட்டரீதியான மற்றும் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு என்ற முழக் கத்தை முன்வைத்துள்ள இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் 18ஆவது மாநில மாநாட்டை ஒசூரில் அக்டோ பர் 12, 13, 14 தேதிகளில் நடத்து கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை அரசுகள் உருவாக்க வேண்டும். ஒப்பந்த மற்றும் வெளி முகமை மூலம் நிரப்பப்படும் பணி யிடங்களை கைவிட்டு ஒன்றிய அரசும் மாநில அரசும் நிரந்தரப் பணியா ளர்களை தேர்வு செய்ய வேண்டும்.  தனியார் துறையில் வேலைவாய்ப் பினை உறுதிப்படுத்துகின்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். கிக் தொழிலாளர்கள் (செயலி வழித் தொழிலாளர்கள்) போன்றவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிட வேண்டும் போன்ற முழக்கங்களோடு மாநாடு நடைபெற உள்ளது. நிரந்தர வேலை கள் குறைக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டக் களம் காண்போம்!