மையமான கல்விக் கொள்கையில் இருந்து விலகும் மோடி அரசு
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம், பாகுபாடின்மை, கல்விக்கான அரசின் உத்தரவாதம் மற்றும் கடப்பாடு ஆகிய மையமான கொள்கைகளில் இருந்து புதிய கல்விக் கொள்கை தன்னை விலக்கிக் கொண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை ‘கொள்கை இல்லாமையே தனது திட்டமாக’ (policy of absence) அறிவித்துள்ளது . இந்தியாவின் மேட்டுக்குடியினர் பட்டியலின, பழங்குடியின மக்களை கல்வியில் இருந்து விலக்கி வைத்ததை எதிர்த்து நடைபெற்ற நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றி புதிய கல்விக் கொள்கை ஒன்றும் பேசவில்லை.
விடுதலை இந்தியாவின் கல்விக் கொள்கைகள் இந்தியக் கல்வி முறையானது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து இன்று வரை சமூகப் படிநிலைகள், சமூகப் பிளவுகளை கெட்டிப்படுத்தியே வந்துள்ளது. 1947 இல் கல்வி தேசத்தை கட்டமைக்கும் திட்டமாக உருவானது. குழந்தைகளுக்கு தார்மீக அறநெறிகள், உடல் நலம், அறிவியல் தொழில்நுட்பம், சுயச்சார்பு, கலாச்சார சீர் திருத்தம் ஆகிய நோக்கங்களுடன் ஏழை நாட்டைக் கட்ட மைக்கும் கல்வித் திட்டம் உருவானது. இதனை அடி யொற்றி 1968 , 1986 களில் உருவான புதிய கல்விக் கொள்கை யில் தொடக்கக் கல்வி அனைவருக்கும் வழங்க திட்ட மிடப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு களைக் குறைத்தல், பள்ளிக் கட்டமைப்பு வசதிகள், பட்டி யல் சாதியினர், பழங்குடியினர், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல் கல்வியின் நோக்கங்களாக இருந்தன. கூடவே சத்துணவு, ஆரோக்கியம், குழந்தைத் திருமணம் நிறுத்தம் ஆகிய நோக்கங்களுக்கும் முக்கி யத்துவம் அளிக்கப்பட்டன.
எனினும் கல்வி நிர்வாகச் சிக்கல்கள்,செயலாக்கத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் சில மாநிலங்கள் மட்டுமே முன்னே றின. பல மாநிலங்கள் பின்தங்கின. இதனால் ஏழைக் குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். நவ தாராளமயமும் பொதுப் பள்ளிகளும் விடுதலைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகளில் மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்கள் உருவாகின. உயர் தொழில் வர்க்கத்தினர், நிர்வாகிகள், கல்வியாளர்கள் பலரும் பொதுப் பள்ளிகளில் உருவாகியவர்கள் தான் .1980கள் முதல் நவ தாராளமயச் சீர்திருத்தம் வேகப்படுத்தப்பட்டது. பொதுத்துறைகள் தோல்வி எனும் கதையாடல்கள் தோன்றின. நடுத்தர வர்க்க குடும்பத்தினர் அரசுப் பள்ளி களை விட்டு வெளியேறி தனியார் பள்ளிகளுக்குச் சென்ற னர். சோம்பேறி ஆசிரியர்கள், திறமை இல்லா நிர்வாகம் என பாராபட்சமான பேச்சுகள் பரவின.
பொதுப் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏழைகளுடன் அடையாளப் படுத்தப்பட்டன. பல தனியார் பள்ளிகள் தொழிற்சாலை களை போன்று இயங்கின. குளோபல் பள்ளிகளில் பயிலும் இந்தியக் குழந்தைகள் உலகளவில் இயங்குகின்றனர். ஆனால் அவர்களின் கால்கள் உள்ளூரில் ஊன்றி இருக்க வில்லை. இந்தியக் கலாச்சார பின்புலத்தில் இருந்து அன்னி யப்படுத்தியது. திறமையான நபர்கள் படிப்புக்காகவும் வேலைக்காகவும் இந்தியாவை விட்டு வெளியேறி னார்கள். மக்கள் விரோதக் கல்விக் கொள்கை, 2020 இதுவே புதிய கல்விக் கொள்கை 2020 உருவா வதற்கான தளத்தை வழங்கியது. கோவிட் 19 மருத்துவப் பேரிடர் உலகளாவிய ஊரடங்கின் போது புதிய கல்விக் கொள்கை 2020 அறிவிக்கப்பட்டது. அது சீர்திருத்தம், அனை வரையும் உள்ளடக்கிய கல்வி, புதுமை என்ற பெயரில் தொழில்நுட்பம் நவ தாராளமயக் கல்வியில் முன்னேறு தல் ஆகியவற்றையே முன்னிலைப் படுத்துகிறது. கார்ப்ப ரேட் கனவான்கள், கருணைமிக்க நன்கொடையா ளர்களுக்கு கல்வி நிர்வாகத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கிறது. அரசு- தனியார் பங்களிப்பு போன்ற ஆடம்பர வார்த்தைகளும் இளம் வயதிலேயே தொழில்சார் பயிற்சி, மாநிலங்களின் கல்விப் பொறுப்பை மறுத்தல் ஆகியவை புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களாக உள்ளன. சமூக ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக்கும் கல்விக் கொள்கை பிரெஞ்சு சமூகவியலாளர் பியர் பூர்தியூ ( Pierr Bourdieu) ‘ பள்ளிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் சிறப்புரி மையை/ சலுகையை கல்வித் தகுதியாக மாற்றம் செய்கின்றன.
பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு மாறுபட்ட மதிப்புகளை வழங்கு கின்றன’ என்கிறார். புதிய கல்விக் கொள்கை 2020 மிகச்சரி யாக இதைத்தான் செய்கிறது. நிலவும் சமூகப் படிநிலை யை பாதுகாக்கிறது. மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில் பின்தங்கிய சமூகத்தினரை சமூக பொருளாதார ரீதியாக முன்னேற வைப்பதற்கான ( social mobility) திட்டம் எதுவும் இல்லை. உலகமய மூலதனத்திற்கான சேவையில் பாதுகாப்பற்ற பணிகளை வழங்கி மூலதனத்திற்கு சேவை செய்வது மட்டுமே அதன் நோக்கமாக உள்ளது. திறமை அடிப்படை யில் இல்லாமல் பிறப்பு மற்றும் பொருளாதாரப் பின்னணி யில் குழந்தைகளைப் பிரிக்கிறது. உன்னதமான பாடத் திட்டம், உழைப்பிற்கு கண்ணியம் அளித்தல் என்று பெருமை பேசினாலும் சாதி அடிப்படையிலான இந்திய சமூ கத்தில் இது போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவார மாகவே இருக்கும். பட்டியல் சமூகத்தினரின் கல்வி உரிமைப் போராட்ட வரலாறு பட்டியல் சமூகத்தினர் பள்ளிகள், கோவில்கள், சாலை கள், குளங்கள், கிணறுகள் ஆகிய பொது இடங்களை பயன்படுத்திக் கொள்வதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பல போராட்டங்கள் நடந்துள்ளன. 1882 இல் ஜோதிபா புலே இந்தியக் கல்வி ஆணையம் (ஹண்டர் ஆணையம்) முன்பு சாட்சியம் அளித்தார். பட்டியல் சாதியினர் பள்ளி களுக்குள் அனுமதிக்க மறுப்பதை ஆவணங்களுடன் விளக் கம் அளித்தார். அரசுப் பள்ளிகளில் பட்டியல் சமூகத்தினர் கல்வியில் புறக்கணிக்கப்படுவதால் புலே- சாவித்திரிபாய் புலே அவர்களுக்காக பள்ளிகளைத் திறந்து கல்வி கற்பிப்ப தையும், உயர்சாதியினரின் தடைகளையும் ஆணையம் முன்பு சாட்சியம் அளித்தனர்.
ஆணையத்தின் அறிக்கை யில் உயர் சாதியினர் தலித்துகளை பள்ளிக்கு வர விடாமல் தடுத்தல், பட்டியல் சாதியினரின் கல்வி ஆர்வம் ஆகியவை இடம் பெற்றன. புலேவின் வலுவான சாட்சியம் காலனிய அரசின் பட்டியல் சாதியினருக்கு கல்வி ஒதுக்கல் கொள்கையை வெளிப்படுத்தியது. இது கல்வியை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தை காலனிய அரசுக்கு ஏற்படுத்தி யது. எனவே ஹண்டர் ஆணையம் தொழிலாளர்களுக்கும் தலித்துகளுக்கும் தனிப் பள்ளிகளும், இரவுப் பள்ளி களும் அமைக்க பரிந்துரைத்தது. ஆனாலும் இதுவெல்லாம் மிகச் சாதாரண பரிந்துரைகள் தான்! இந்தக் காலத்தில் தான் கேரளாவில் விளிம்பு நிலைச் சாதிகள், ஏழைச் சமூகங்கள் கல்வி உரிமைக்காகப் போரா டின. திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர்கள் பொதுவான மலையாளிகள் அமைப்பில் உள்நாட்டினருக்கு கல்வி யும் வேலையும் கோரிப் போராடினர்.
ஆனால் இந்த அமைப்பின் மூலமாக உயர் சாதி நாயர்கள் மட்டுமே பலன் பெற்றனர். எனவே டாக்டர் பால்பு தலைமையில் 1895, 1896 ஆண்டுகளில் மக்கள் சாசனத்தில் பல்லாயிரம் ஈழ வர்கள் கையெழுத்து பெற்று அரசிடம் இன ஒதுக்கலை சுட்டிக்காட்டி தனிப் பள்ளிகள் கோரினர். அரசு பேருக்கு சில பள்ளிகளை மட்டுமே திறந்தது. 1903 இல் ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன யோகம் அமைப்பின் மூலம் ஸ்ரீ நாராயண குரு ‘ அமைப்பு மூலம் வலிமை பெறு- கல்வி மூலம் விடுதலை பெறு’ என்ற லட்சியத்தை முன்வைத்தார். அரசு பள்ளிகளை திறக்கா விட்டால் ஒடுக்கப்பட்ட சமூகங்களே அமைப்பாக செயல் பட்டு சொந்த பள்ளிகளைக் கட்டுவார்கள் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 20 ஆம் நூற்றாண்டில் கல்வி உரி மைக்கான வலுவான போராட்டங்கள் எழுந்தன. தலித்துகளின் கல்வி உரிமைக்காக பிரிட்டிஷ் இந்தியா வில் புலையர் வகுப்பைச் சேர்ந்த அய்யன்காளி தலைமை யில் பிரமிக்கத்தக்க போராட்டங்கள் நடந்தன. பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தாங்கள் தீண்டத்தகாதவ ராக நடத்தப்படுவதை எதிர்த்து சாதி இந்துக்களுக்கு எதி ராக போராட்டங்களை முன்னெடுத்தார். அரசுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். பொது இடங்களில் அருவருக்கத்தக்க தீண்டாமையை கடைப் பிடிக்கக் கூடாது என்று அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டன. 1904 இல் வெங்கானூரில் அய்யன்காளி தனது தோழர்களுடன் தங்களுக்கான பள்ளிக்கூடத்தை தொடங்கி னார். பசித்த வேங்கைகளைப் போல தலித்துகள் இந்த எளி மையான பள்ளியில் நவீனக் கல்வியைக் கற்றனர். இது அவர்களின் கல்வி தாகத்தை உலகிற்கு பறைசாற்றியது.
உயர்சாதியினரின் எதிர்வினை உடனடியாகவும், கடு மையான வன்முறையாகவும் இருந்தது. தலித் குழந்தை கள் படிப்பதை பார்த்த ஆதிக்கசாதி ஆண்கள் பள்ளியைச் சூறையாடித் தீக்கிரையாக்கினர்.இந்த வன்முறை அரசு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. மேட்டுக்குடியினர் அனைத்து சாதிய சமூகத்தினருடன் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக பள்ளிகளில் பயில்வ தற்குப் பதிலாக, தலித்துகளின் கல்வி வாய்ப்புகளை அழிப்ப தற்கே முயற்சி செய்வார்கள் என்பதை இந்த வன்முறை நிரூபித்தது. அம்பேத்கரின் கல்விப் புரட்சி 1920, 1930 களில் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891-1956) கல்வி உரிமைக்காக மாபெரும் இயக்கத்தை நடத்தினார். 1927 இல் பம்பாய் சட்டமன்றக் கவுன்சிலில் தனது வலிமையான உரையில், தனது சொந்த அனுப வத்தில் பெற்ற படிப்பினைகள் மூலம் தலித்துகள் பள்ளியிலி ருந்து ஒதுக்கி வைக்கப்படும் அவமானகரமான தடை களை, கொடூரமான உண்மைகளை அம்பலப்படுத்தினார். வகுப்பில் புனிதமான எல்லைக்கோடு கிழிக்கப்பட்டு தலித் குழந்தைகள் அதற்கு அப்பால் அமர வைக்கப் பட்டனர். குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவை கூட மறுக்கப்பட்டது. சாதி இந்து மாணவர்கள் பிரம்பால் அடிக்கப்பட்டார்கள்.
ஆனால் தலித் மாணவர்களால் தாங்கள் தீட்டுப்படக் கூடாது என்பதற்காக தலித் மாண வர்கள் களிமண் உருண்டைகளாலும், கற்களாலும் தாக்கப் பட்டனர். இவ்வாறு ஆசிரியர்கள் தீண்டாமையிலிருந்து தப்பித்தனர் என்றார் அம்பேத்கர். அம்பேத்கரின் உரை தலித் மக்களின் கல்வி ஒதுக்கல் துயரம் பற்றிய குற்றப் பத்திரிகையாக இருந்தது. சமூக பாரபட்சம் போன்றே வறுமையும் கல்விக்குத் தடை என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். எனவே ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான அமைப்பை உருவாக்கினார். பம்பாய் மற்றும் பிற நகரங்க ளில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான தனி விடுதிகளைத் திறக்க வேண்டும்.அவர்களின் வீட்டிலும் ,வீட்டைச் சுற்றி யுள்ள சமூக வெளியிலும் நிலவும் சாதிய ஒடுக்குமுறை யில் இருந்து தூர விட்டு விலகி கற்றலுக்கு சாதகமான சூழ லில் தலித் மாணவர்கள் வாழவும் கற்கவும் முடியும் என்றார். பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய ஆதிக்க சமூக சீர்திருத்தவாதிகளின் கொள்கைகள் சாதி எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்கப்பட்ட சாதியின ரின் கல்வி உரிமைக்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடி யாது என்று நவீன அறிஞர்கள் கூறுகின்றனர். கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு கருவி மட்டுமல்ல. அது சாதிய ஆதிக்கம்,படிநிலைச் சமூகத்திற்கு சவால் விடுப்பதையும் மனித சமத்துவத்தை உறுதிப்படுத்து வதற்கான ஆயுதமும் ஆகும் என்று ரோசலிண்ட் ஹான்லோன் கூறுகிறார்.
புலே கல்வியை ஒரு ஆற்றலாக மட்டும் பார்க்கவில்லை. சாதிய ஆதிக்கத்தை சட்டபூர்வ மாக்கிய பிராமணிய சாஸ்திரங்களுடன் போட்டியிடும் வல்லமையைத் தரும் ஆயுதமாக கல்வியை பார்த்தார். பிரிட்டிஷ் அரசு இந்த விசயத்தில் தீவிரமாகச் செயல்பட வில்லை. அதன் செயல்பாடுகள் மிகவும் குறுகியதாக முழுமையற்று இருந்தன. சபய சாக்ஷி பட்டாச்சார்யா குறிப்பிடுவது போல, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வி தர பிரிட்டிஷ் அரசு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சீர்திருத்த வாதிகள், தன்னார்வலர்களையே சார்ந்து இருந்தது. பிரிட்டிஷ் அரசும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சமூக சீர்திருத்த வாதிகளும் அனைவருக்குமான விரிவான கல்வி சமூக ஒழுங்கை சீர்குலைத்து விடும் என்று அஞ்சினர். யதார்த்தத்தை எதிர்கொள்ளாத புதிய கல்விக் கொள்கை புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் சமத்துவ மற்ற வரலாறை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டது. அதன் தொடக்கக்கல்வி பற்றிய பார்வையும், முன் பருவக் குழந்தைப் பராமரிப்பும், குழந்தைகள் வகுப்புக்கு வெளியே எதிர்கொள்ளும் தடைகள் குறித்தும் மௌனம் சாதிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத் திருத்தம் 2016, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குடும்பத் தொழி லில் ஈடுபடுவதை அனுமதிக்கிறது.
இதனால் கற்றல்- உழைப்பு இரண்டுக்குமான இடைவெளி மறைந்து குழந்தை கள் சோர்வடைதல், பள்ளி இடைவிலகல், உடல் வளர்ச்சி தடைபடுதல் ஆகிய அபாயங்கள் நேரிடும். புதிய கல்விக்கொள்கை முன்வைக்கும்வெறும் ஆசைகளும், விருப்பங்க ளும் சந்தேகத்திற்குரியது.அது பேசும் மின்னணுவியல் தொழில்நுட்பங்கள், நவ தாராளமயக் கொள்கைகள் ஆகியவைகள் மீடியாக் களின் தாக்கத்தினால் இன்றைய இளைஞர்கள் ஸ்டார்ட் அப், புதுமை படைத்தல், சுயம்புவாக முன்னேறுதல் ஆகியன பற்றி கனவு காணத் தூண்டப்படுகிறார்கள். அது முன் வைக்கும் கல்வியில் நெகிழ்வுத் தன்மை, பல துறைகளிலும் கற்றல் ஆகியவற்றுக்கும் கள யதார்த் தத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அரசுப் பள்ளிகள், ஊரகம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. மொழித் தடைகள், போதுமான நிதி இன்மை ஆகிய சிரமங்களை மாண வர்கள் எதிர்கொள்கின்றனர். குழந்தைப்பருவ ஆய்வறிஞர் சாரதா பால கோபாலன் பள்ளி செல்லாக் குழந்தைகள்/ கல்வி அமைப்புக்கு வெளியே இருக்கும் குழந்தைகள் விதி விலக்கல்ல. மாறாக கல்வி முறையின் விளைவு என்கிறார். பொதுவாக இவர்கள் பெண் குழந்தைகள், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர் குடும்பக் குழந்தை களாக இருக்கின்றனர். இவர்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளில் இருந்து கல்வி அமைப்பு மூலமாகவே விலக்கப்படுகின்றனர். ஆனால் கறாரான கல்வி முறை யால் இவர்கள் தோல்வியடைந்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றனர். செய்ய வேண்டிய கல்விச் சீர்திருத்தங்கள் அரசு தாம் எந்த மக்களுக்காக சேவை செய்கிறோம் என்று சொல்கிறதோ, அவர்களையே தேசியக் கல்விக் கொள்கை கைவிடுகிறது. அரசு- தனியார் பங்களிப்பு, மின்ன ணுமயப்படுத்துதல் இவையெல்லாம் உண்மையான சீர்திருத்தம் அல்ல. பள்ளிகளில் சாதிய ரீதியாக தனி மைப்படுத்துவதற்கு முடிவு கட்டுதல் , கல்வி கட்ட மைப்புகளில் சமத்துவம், சந்தைப் பொருளாதாரத்திற்கு வருங்காலத் தொழிலாளர்களாக வகைப்படுத்தாமல் - எல்லாக் குழந்தைகளையும் சம உரிமை உள்ள குடிமக்க ளாக பார்த்தல் இவை போன்ற சமூக கட்டமைப்பு ரீதி யான சீர்திருத்தங்கள் தான் உண்மையில் தேவைப்படு கிறது.
கல்வி அடிப்படை உரிமை எனும் உத்தரவாதம் அளித்த ஒரே சட்டமான, 2009 கல்வி உரிமைச் சட்டத்தில் இருந்து புதிய கல்விக் கொள்கை விலகிச் செல்கிறது. அனை வருக்கும் கல்வி, பாரபட்சமற்ற கல்வி, அரசு பொறுப்புக் கூறல் ஆகியவற்றை பற்றி புதிய கல்விக் கொள்கை பேச வில்லை. இது கல்வி நிர்வாகிகளின், உயர் அதிகார வர்க்கத்தின் விடுதல் இல்லை. இது மோடி அரசின் கொள்கை ரீதி யானது. அனைவருக்கும் கல்வி எனும் அடிப்படை உரிமை யிலிருந்து பின்வாங்கி, தன்னார்வம், தனியார் முன்முயற்சி சீர்திருத்தம் இவை எல்லாம் ‘ கொள்கை கள் இல்லாத திட்டத்தை’ குறிக்கிறது. பள்ளி என்பது உலகமயப் பொருளாதாரத்திற்கு அடிமைத் தொழிலாளர் களை உருவாக்கும் இடம் மட்டும் தானா?அல்லது விமர்சன மனப்பான்மையை உருவாக்கி வளர்க்கும் இடமா? ஜனநாயகரீதியாக சிந்திக்கவும் கற்பனை வளத்தை உருவாக்குவதற்கான இடமாகவும் புதிய கல்விக் கொள்கை பள்ளிகளை முன்மொழியவில்லை. கல்வி என்பது வகுப்பறையில் மட்டுமே நிகழ்கிறது என்பது கட்டுக்கதை. குழந்தைகள் உழைப்பு, விளையாட்டு, மொழி, இயக்கம், அன்பான பராமரிப்பு ஆகியவற்றின் மூலமாக கற்கின்றனர். ஆனால் இந்தியப் பள்ளிகளில் இதை ஏற்றுக் கொள்வதே இல்லை. சாதிய ரீதியான ஒதுக்கல், அதற்கு எதிரான போராட்டம், காலனித்துவ கல்வி உருவாக்கம், குழந்தை களின் அனுபவ அறிவு ஆகிய இந்திய வரலாற்றை உணர்ந்து உள்வாங்காத வரையில் புதிய கல்விக் கொள்கை அனை வருக்கும் கல்வியை
வழங்காது. அது முன்மொழிவது எல்லாம் வெறும் விருப்பங்களும் ஆசைகளும் மட்டுமே. உண்மையான மாற்றம் கல்வி சார் தொழில்நுட்ப வியலார்கள், கார்ப்பரேட் சமூக பொறுப்பு நன்கொடை மூலமாக நடக்கவே நடக்காது. கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான பாதை மட்டும் இல்லை என்ற உண்மையை அங்கீகரிக்க வேண்டும். கல்வி என்பது நீதி, சமத்துவம், ஜன நாயகம் ஆகியவற்றுக்கான அடிப்படையாகும். இந்த தொலைநோக்குப் பார்வை இல்லாமல் புதிய கல்விக் கொள்கை என்பது அது பெருமையாக சொல்லிக் கொள்வது போல புதிய தொடக்கமாக இருக்காது. அது பழைய கதையாடலின் தொடர்ச்சியாகவே இருக்கும். நன்றி: பிரண்ட்லைன் கல்விச் சிறப்பிதழ், செப்டம்பர் 15, 2025 தமிழில்: ம.கதிரேசன்
