articles

img

மீத்தேனை உறிஞ்சும் மரங்களின் தண்டு - சிதம்பரம் ரவிச்சந்திரன்

மீத்தேனை உறிஞ்சும் மரங்களின் தண்டு

மரங்களின் தண்டுகள் வளி மண்டலத்தில் இருந்து மீத்தேனை அகற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் பசுமைக்குடில் வாயு உமிழ்வை குறைப்பதில் ஒரு புதிய எளிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்டுகளில் இருக்கும் நுண்ணுயிரிகளே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

அமேசான் முதல் இந்தோனேஷியா வரை

வேளாண்மை மற்றும் புதை படிவ எரிபொருட்களை எரிப்பதால் உமிழப்படும் மீத்தேன் கார்பன் டை  ஆக்சைடை விட 28% தீய விளைவு களை ஏற்படுத்தக்கூடியது. என்றா லும் இந்த வாயு குறுகிய காலத்திற்கு  வளி மண்டலத்தில் தங்கி நிற்கிறது. இது தொழிற்புரட்சி காலம் முதல் 30%  புவி வெப்ப உயர்விற்கு காரணமாக  உள்ளது. 1980களுக்கு பின் இந்த உயர்வு வேகமாக அதிகரித்து வரு கிறது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை  நேச்சர் (Nature) இதழில் வெளி வந்துள்ளது. யுகே பெர்மிங்ஹாம் பல்கலைக் கழக ஆய்வுக்குழுவினர் பேராசிரியர்  வின்செண்ட் கௌசி (Prof Vincent  Gauci) தலைமையில் இந்த ஆய்வு களை நடத்தினர். மரங்களின் மீத்தேன் உறிஞ்சும்  திறன் அமேசான் மற்றும் பனாமா வின் வெப்ப மண்டலக் காடுகளில் உயரமான பகுதியில் உள்ள மரங் கள், யு கே ஆக்ஸ்போர்ட்ஷெர் பகுதி யில் (Oxfordshire) வித்தம் வுட்ஸ்  (Wytham Woods) பிரதேசத்தில் மித  வெப்ப மண்டலக் காடுகளில் காணப் படும் அகண்ட இலை மரங்கள், ஸ்வீடன் புவி முனையருகு புதர் ஊசியிலைக்காட்டு மரங்களின் தண்டுகளில் ஆராயப்பட்டது. வெப்ப மண்டலக் காடுகளில் மரங்களின் தண்டுகள் மீத்தேனை உறிஞ்சும் அளவு அதிகம். வெப்பம்  மற்றும் ஈரப்பதமான இடங்களில்  மீத்தேன் உறிஞ்சும் நுண்ணுயிரி களின் திறனே இதற்கு காரணம். மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் மீத்தேனை உறிஞ்சி சிதைவடையச் செய்து ஆற்றல் மூலமாக மாற்றி  பயன்படுத்துகின்றன.  முன்பு நிலப்  பகுதியில் மண் மட்டுமே மீத்தேனை  உறிஞ்சும் தொட்டியாக செயல்படு கிறது என்று கருதப்பட்டது.  ஆனால் இப்போது இந்த புதிய  கண்டுபிடிப்பு காலநிலை மாற்றத் தின் தீமைகளை குறைப்பதில் மரங் கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. 2021  கிளாஸ்கோ 26 உலக காலநிலை உச்சி மாநாட்டில் 2030 ஆம் ஆண்டிற்  குள் மீத்தேன் உமிழ்வை 30% குறைப்பது என்று உறுதி எடுக்கப் பட்டது. அதனால் காடுகளை அழிப்பதை தடுப்பது மற்றும் அதிக  மரங்களை நடுதல் போன்ற முறை கள் முக்கியத்துவம் பெறுகிறது. காலநிலை அவசரநிலையை சமாளிப்பதில் மரம் நடுதல் ஒரு முக்கிய வழியாக கருதப்படுகிறது. 2020-2025 காலத்தில் யு கே அரசு இதற்காக 500 மில்லியன் பவுண்டு செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனால்  சில சூழ்நிலைகளில் இயற்கையாக  காடுகள் வளர்வது அதிக பயனளிக்கி றது என்று கருதப்படுகிறது இதை  சமீபத்தில் வெளிவந்த காடுகள் பற் றிய மற்றொரு ஆய்வு கூறுகிறது.

தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் காடுகள்

காடுகள் தம்மைத்தாமே மீள் வளர்ப்பு செய்துகொள்வது சில குறிப்பிட்ட இடங்களில் வரும் முப்ப தாண்டு காலத்திற்கு செலவு குறைந்த, பலன் தரக்கூடிய முறை என்று ஜேக்கப் புகோஸ்கி (Jacob Bukoski) என்ற ஆய்வாளர் தலை மையில் அமைந்த ஆரிகன் பல்க லைக்கழக வன அறிவியல் கல்லூரி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்காக 130 நாடுகளில் ஆயி ரக்கணக்கான தரவுகள் ஆராயப் பட்டன. 46% பகுதிகளில் இயற்கை யான காடு மீளாக்கமே சிறந்தது. 54%  பகுதிகளில் மரம் வளர்ப்பு திட்டங்கள்  அதிக நன்மை அளிக்கக்கூடியது. பொதுவாக மெதுவாக வளர்ந்தாலும் காடுகள் தம்மைத்தாமே மீளாக்கம் செய்துகொள்வதே சிறந்தது. இதுபற்றிய ஆய்வுக்கட்டுரை நேச்சர் காலநிலை மாற்றம் (Nature Climate Change) என்ற இதழில் வெளிவந்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய  நாடுகளில், இயற்கையான காடு மீளாக்கம் மற்றும் மரம் நட்டு வளர்த்து  காட்டை  உருவாக்குதல் என்ற இவ்  விரு முறைகளில் எந்த முறை அதிக  நன்மை தரக்கூடியது என்பது பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். மரங்களின் மறு வளர்ச்சி, நடை முறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கள், பொருளாதார நிலை, கார்பன் சேமிப்புத் திறன் ஆகியவற்றை பொறுத்து இயற்கையான காடு  மீளாக்கம் மேற்கு மெக்சிகோ,  ஆண்டீஸ் பகுதி, தென்னமெரிக்கா வின் தெற்கு முனைப்பகுதி, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, இந் தியா, தெற்கு சீனா, மலேசியா மற் றும் இந்தோனேஷியாவில் சிறந்த பலனைத் தருகிறது. இரண்டு முறைகளையும் இணைத்து செயல்படுத்துவது உலக ளாவிய நிலையில் இயற்கையான காடு மீளாக்கத்தை விட 44%, மரம்  நட்டு வளர்ப்பதை விட 39% கூடுதல்  பலன் தரக்கூடியது என்று ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மரம் நட்டு காடுகளை உருவாக்குதல் ஒரு மாற்று முறையே தவிர புதை  படிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் பசுமைக்குடில் வாயுக் களின் உமிழ்வைக் குறைக்க இயற்  கையாக வளரும் காடுகளே சிறந்தது. முப்பதாண்டு காலம் மரம் நட்டு காடுகள் வளர்க்கப்பட்டாலும் எட்டு மாதங்களுக்கு உமிழப்படும் பசு மைக்குடில் வாயுக்களின் உமிழ்  விற்கே அது சமமானது. மறு  வளர்ப்பு செய்யப்படும் நிலப்பகுதி கள், அதனால் ஏற்படும் உயிர்ப்  பன்மயத்தன்மையின் தாக்கம், மரப்பொருட்களின் தேவை, நீர்  இருப்பு போன்ற பல்வேறு கார்ப னற்ற இயற்பியல் காரணிகளை  பொறுத்தே காடு வளர்ப்புத் திட்டங் கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்து கின்றனர். அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மீத்தேனை இயற்கை வழியில்  அகற்ற மரங்களின் தண்டுகள் உதவு கின்றன என்ற கண்டுபிடிப்பு காடுகள்  அழிக்கப்படுவதை குறைக்கவும் காடு வளர்ப்பு குறித்த புதிய விவ ரங்களை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளவும் இந்த ஆய்வு முடிவுகள்  பெரிதும் உதவும் என்று நம்பப்படு கிறது.