நில உரிமை முறையும் குத்தகை விவசாயத்தின் வரலாறும்
நில உரிமை முறை என்பது ஒரு சமூகத்திற் குள் நிலம் எவ்வாறு சொந்தமாக உள்ளது, பயன்படுத்தப்படுகிறது, கட்டுப்படுத்தப்படு கிறது மற்றும் மாற்றப்படுகிறது என்பதை தீர்மா னிக்கும் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நடை முறைகளின் தொகுப்பாகும். இது நிலவளங்கள் தொடர்பாக தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் அரசுக்கு இடையிலான உரிமைகள், கடமைகள் மற்றும் உறவுகளை நிறுவுகிறது. இந்தியாவில் குத்தகை விவசாயம் என்பது வரலாற்றில் மிக நீண்டு செல்கிறது. குத்தகை விவ சாயம் நடந்ததற்கான சான்றுகள் கி.மு.4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அர்த்தசாஸ்திரத் தில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் மிகவும் முறையான மற்றும் பரவலான குத்தகை முறை கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்தான் வடிவ மைக்கப்பட்டது. நில உரிமை மற்றும் குத்தகை யைப் பாதித்த பல்வேறு நில வருவாய் முறைக ளை அதாவது ஜமீன்தாரி, ரயத்துவாரி, மஹால் வாரி போன்றவற்றை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தினர்.
ஆங்கிலேயர் காலத்து நில வருவாய் முறைகள்
ஜமீன்தாரி அமைப்பு (1793)
ஆங்கிலேய கவர்னர் லார்டு கார்ன்வாலிஸ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நிரந்தரத் தீர்வுச் சட்டம். ஜமீன்தார்களால் வசூலிக்கப்பட்ட தொகை 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி மட்டுமே ஜமீன்தார்களுக்கு சொந்தமானது. மீத முள்ள பத்து பங்குகள் ஆங்கிலேய அரசாங்கத்தி ற்குக் கொடுக்கப்பட்டன. ஜமீன்தார்களுக்கு நிலத் தையும், அதில் வேலை செய்யும் விவசாயிகளை யும் கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
ரயத்துவாரி அமைப்பு (19ஆம் நூற்றாண்டு)
தென்னிந்தியாவின் சில பகுதிகளில், குறிப் பாக மெட்ராஸ் மாகாணம் மற்றும் பம்பாய் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில அரசுக்கும் ரய்த்கள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட விவசாயிகளுக்கும் இடையே நேரடி உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. விவசாயிகளுக்கு ஆக்கிரமிப்பு உரிமைகள் வழங்கப்பட்டன.
மஹால்வாரி முறை (1822-1835)
வடமேற்கு எல்லைகளான ஆக்ரா, பஞ்சாப், கங்கை பள்ளத்தாக்கு மற்றும் மத்திய மாகாணம் போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்டது. நில வருவாய் முழு கிராமத்தின் சார்பாகவும், கிராமத் தலைவர்களால் விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டது. வருவாயில் மாறிய பங்கு வாடகை மதிப்பில் 66 சதவீதமாக இருந்தது.
தமிழகத்தில் குத்தகை விவசாயச் சட்டங்கள்
பண்டைய தமிழ்நாட்டில் நில உரிமை மற்றும் குத்தகை ஏற்பாடுகள் இருந்தன. சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் நில மானியங்கள் பொ துவானவையாக இருந்துள்ளன. சுதந்திரத்திற் குப் பிறகு குத்தகைதாரர்கள் வெளியேற்றத்திலி ருந்து பாதுகாப்பிலும் நியாயமான வாடகையை உறுதிப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தியது.
முக்கியச் சட்டங்கள்:
J குத்தகைப் பாதுகாப்புச் சட்டம் 1952: தஞ்சாவூர் குத்தகைதாரர்கள் மற்றும் பண்ணையாள் பாதுகாப்பு J குத்தகைப் பாதுகாப்பு சட்டம் 1955: விவசாயம் செய்யும் குத்தகைதாரர்களுக்கு நில உரிமைப் பாதுகாப்பு J நியாயமான வாடகை செலுத்தல் சட்டம் 1956: குத்தகைதாரர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் J குத்தகைதாரர்கள் பதிவுச் சட்டம் 1969: குத்தகை உரிமைகள் பதிவு உருவாக்கம் J குத்தகைப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 1972: தவறான சாக்குப்போக்குகளின் கீழ் வெளியேற்றம் தடுப்பு
குத்தகை விவசாயிகளின் உரிமைகள்
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யும் குத்தகை தாரர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் குறிப்பி டத்தக்க உரிமைகள் சட்டங்கள் வழங்கியுள்ளன: J நீர்ப்பாசன வசதிகளை அணுகும் உரிமை J கால்வாய்கள், கிணறுகள், குளங்கள் போன்ற நீர்ப்பாசன முறைகளுக்கு அணுகல் J விவசாயக் கூட்டுறவுகளில் பங்கேற்க உரிமை J கூட்டுறவுகளில் உறுப்பினர்களாக இருப்ப தன் மூலம் விதைகள், உரங்கள், இயந்திரங் கள் பயன்படுத்துதல்
தற்போதைய நிலைமையும் பிரச்சனைகளும்
புள்ளிவிவரங்கள்: J 1953-54: குத்தகை விவசாயம் 20.6% J 2002-03: குத்தகை விவசாயம் 6.6% J தாராளமயக் கொள்கைகளுக்குப் பிறகு: 10.4%
மாநிலவாரி குத்தகை விவசாயம்:
J ஆந்திரா: 35.7% J பீஹார்: 22.7% J ஒடிசா: 16.9% J ஹரியானா: 14.8% J மேற்கு வங்கம்: 14.7% J தமிழ்நாடு: 13.5%
கொள்கைக் குறைபாடுகள்:
Jநாட்டில் நடக்கும் விவசாயிகளின் தற்கொலை களில் 80% குத்தகை விவசாயிகளால் ஏற்படுகிறது J வங்கிக் கடன் கிடைப்பது அரிது J எந்த மானியங்களும் கிடைப்பதில்லை J கிசான் கிரெடிட் கார்டுகளில் மொத்த விவசாயக் கடனில் 3% மட்டுமே பெறுகிறார்கள் Jபயிர்க் காப்பீட்டிற்கு தகுதியற்றவர்களாகின்ற னர் தமிழ்நாட்டில் 2016 புள்ளியியல் துறையின் கணக்கெடுப்பின்படி 71 லட்சம் சிறு குறு விவ சாயக் குடும்பங்களில் 30% விவசாயிகள் குத்தகை நிலங்களில் பயிர் சாகுபடி செய்கி றார்கள். இவர்களுக்கு பிரதமர் நிதி உதவித் திட்டத்தில் பண உதவி கிடைக்கவில்லை.
முன்னோடி மாநிலங்களின் நடவடிக்கைகள்
அதிக வட்டி விகிதங்களில் கடன் வாங்குபவர்க ளையும், தனியார் கடனிலிருந்தும் குத்தகை தாரர்களைப் பாதுகாக்கும் “பணக்கடன் சட்டத்தை” இயற்றிய ஒரே மாநிலம் கேரளா. தெலுங்கானாவில் ஒரு பயிர் பருவத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4000 நேரடியாக இடுபொருள் தேவைக்காக வழங்கப்படுகிறது.
எதிர்காலத் தேவைகள்
நகரமயமாக்கல் கிராமப்புற நிலப்பரப்பில் ஊடுருவியுள்ளதால், மேலும் நிலம்பற்றாக் குறையாக இருப்பதால் குத்தகைதாரர்கள் இந்தியாவில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குத்தகை விவசாயிகளுக்கான தேவைகள்:
J மாநிலங்களுக்கு ஒரு சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல் J கடன் தகுதி அட்டைகள் வழங்குதல் Jவங்கிகள் விவசாயம் செய்யும் குத்தகை தாரர்களுக்குக் கடன் வழங்குதல் J குத்தகைதாரர்களுக்கும் விவசாயிகளுக்கும் குறுகிய கால உற்பத்திக் கடனுக்கான இலக்கு நிர்ணயித்தல் Jபயிர்க் காப்பீட்டைப் பயிர்க் கடனிலிருந்து பிரித்தல் Jநபார்டு மூலம் குத்தகைதாரர் விவசாயிகள் மேம்பாட்டு நிதியை அமைத்தல்