articles

img

தொழிலாளர் - விவசாயிகள் பேரெழுச்சி நாடு முழுவதும் மாபெரும் வெற்றி

மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளர்- விவ சாயிகள் நடத்திய மாபெரும் எழுச்சியில் லட்சக்கணக் கில் மக்கள் அணி திரண்டனர். நாடு தழுவிய கிராமப் புற வேலைநிறுத்தம், தொழிற்சாலைகள் மட்டத்தி லான வேலை நிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் கிளர்ச்சியாக நடைபெற்றது.  

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிஷான் மோர்ச்சா) - அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக விடுத்த அழைப்பினை ஏற்று பிப்ரவரி 16 வெள்ளியன்று இந்த நாடுதழுவிய பேரெ ழுச்சி நடைபெற்றது. இந்த எழுச்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பல்வேறு துறைசார்ந்த நடுத்தர வர்க்க ஊழியர்கள் ஆகியோருக்கும் ஆதர வளித்த அரசியல் கட்சிகள், இளைஞர்கள், மாண வர்கள், பெண்கள், அறிவுஜீவிகள் மற்றும் சமூகத்தின்  முற்போக்கு சக்திகள் அனைவருக்கும் இந்த பேரெ ழுச்சியில் பிரதான பங்கு வகித்த சிஐடியு உள்ளிட்ட இயக்கங்கள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளன.

நாடு தழுவிய இந்த எழுச்சியில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இந்திய நிலக்கரி நிறுவன சுரங்கங்கள் அனைத்தும் முற்றாக மூடப் பட்டன. அனைத்து சுரங்கத்தொழிலாளர்களும் முழு மையாக வேலைநிறுத்தம் செய்தனர். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  கொல்கத்தா, பாரதீப், தூத்துக்குடி, விசாகப்பட்டி னம், சென்னை ஆகிய துறைமுகங்களில் சரக்கு கையா ளுதல், தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் முற்றாக ஸ்தம்பித்தது. அனைத்து பெரிய துறைகளிலும் முழு வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஒப்பந்தத் தொழிலா ளர்களும் முழுமையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத்தில் உள்ள பவநகர் உட்பட பல சிறிய துறை முகங்களிலும் வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது. பொதுத்துறை, எண்ணெய் உற்பத்தி மையங்க ளிலும் அவற்றின் மார்க்கெட்டிங் நிறுவனங்களிலும் தொழிலாளர் வேலைநிறுத்தம் முழுமையாக நடை பெற்றது. குறிப்பாக நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அசாம், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்க ளில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்க ளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுமையாக வேலை நிறுத்தம் செய்து வலுவான போராட்டத்தில் ஈடு பட்டனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் டாக்சி, வேன் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல மாவட்டங்களில் பந்த் போன்ற நிலைமை ஏற்பட்டது.  நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டம் மற்றும் ஆஷா எனப்படும் தேசிய சுகாதார திட்ட தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டனர். அனைத்துப் பகுதிகளிலும் இவர்கள் சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபட்டனர். குஜராத் தில் குறிப்பாக, அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலா ளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை துவக்கினர். மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் திருச்சிராப்பள்ளி, திருமயம், ராணிப் பேட்டை ஆகிய ஆலைகளில் முழு வேலைநிறுத்தம் நடைபெற்றது. விசாகப்பட்டினம் பெல் ஆலையில் கணிசமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர். விசாகப்பட்டினம், சேலம் இரும்பு எஃகு ஆலைகளில் கணிசமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாட்டின் அனைத்து உருக் காலைகளிலும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

அனைத்து வடகிழக்கு மாநிலங்கள், அனைத்து தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இந்திய மின் தொகுப்புக் கழக தொழிலாளர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். மத்தியப் பிரதேசம், குஜராத்தில் சரிபாதி மின்  தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. நாட்டின்  அனைத்து மின் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைநகர் புதுதில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள காஸியாபாத், சகிபாபாத், நொய்டா, புலந்த்சாகர் மற்றும் பரீதாபாத் ஆகிய மிகப் பெரும் தொழில் மையங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நொய்டா உள்ளிட்ட இடங்களில் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. உத்தரப்பிரதேச பாஜக அரசின் கடும் அடக்கு முறைகள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றையும் மீறி தொழில் மையங்கள் ஸ்தம்பித்தன.  மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் முற்றாக மூடப்பட்டன.

இப்பகுதி முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் வடசென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங் கள், விசைத்தறி கூடங்கள், இன்ஜினியரிங் தொழில கங்கள், சிறு,குறு, நடுத்தர தொழிற்கூடங்கள் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொழிலா ளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பெருமளவில் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரளத்தில் ஆளுநர் மாளிகை உட்பட அனைத்து மாவட்ட மையங்களிலும் பல பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற போராட்டம் நடை பெற்றது.

இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட், ஜம்மு- காஷ்மீர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார், சத்தீஸ்கர், ஒரிசா, திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் எண்ணற்ற இடங்களில் மிகப் பெருவாரியான தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்ற போராட்ட இயக்கங்கள் நடைபெற்றன.  பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டனர். இன்சூரன்ஸ், வங்கி, மத்திய அரசு ஊழியர்கள் எண்ணற்ற இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரெழுச்சியின் ஒரு பகுதியாக அழைப்பு விடுக்கப்பட்ட கிராமப்புற வேலைநிறுத்தம் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு மக்கள் பேராதரவை பெற்றது.

 ஏற்கெனவே கடந்த சில நாட்களாக விவசாயிகள் மீது மோடி அரசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை களை கண்டித்தும், விவசாயிகள் எழுச்சியின் கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்பு களின் சார்பில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டனர்.

நாடு முழுவதும் ஒருமித்த குரலாக, மோடி அரசு வெளியேறு என்பதே இமயம் முதல் குமரி வரை எதிரொ லித்தது. 2024 தேர்தலில் மோடி அரசை தொழிலா ளர்- விவசாயிகள் படை வீழ்த்தும் என்று இந்த இயக்கங்களில் பங்கேற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் முழக்க மிட்டனர்.  இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற போராட் டத்தில் திரிணாமுல் அரசின் காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலில் அனருல் இஸ்லாம் எனும் விவசாயத் தொழிலாளி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கும் நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது.