‘‘தனியார்மயத்திற்கு எதிராக தொடரும் தொழிலாளர் போராட்டம்’’
தருமபுரி, ஆக. 5 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) 16ஆவது மாநில மாநாடு தருமபுரி யில் எழுச்சியுடன் தொடங்கியது. மாநாட்டிற்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசுகையில், “வர்க்க அடிப்படையிலான போராட்டமே நமது உண்மையான பலம். தொழி லாளர்களை அழிக்கும் நோக்கம் கொண்ட சக்திகள் எவையும் வெற்றி பெற முடியாது” என்று கூறினார். தொழிலாளர் உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் தற்போது அதிகரித்து வரும் தனியார்மயம், ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் ஆகி யவை தொழிலாளர் நலனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்ப தாக சுட்டிக்காட்டினார். பழைய ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப் பட்டு புதிய திட்டம்கொண்டுவரப் பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கு பஞ்சம் படி வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும், தொழிற் சாலைகளில் வேலை செய்யும் 8 கோடி தொழிலாளர்களை 4 தொழிலாளர் சட்டத் திருத்த தொகுப்பின் மூலம் வெளியேற்ற முடியும் என்றும் எச்சரித்தார். பொருளாதார தடைகள் “ஒரு நாட்டின் மீது பொருளா தார தடை விதிப்பது என்பது மனித இதயமற்ற செயல்” என்று அ.சவுந்தரராசன் கவலையை வெளிப்படுத்தினார். அமெரிக்கா வின் ஆயுத வியாபாரமும், டால ரின் ஆதிக்கமும் உலக நாடு களுக்கு பொருளாதார நெருக்கடி யை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். இராக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, மருந்துகள் கிடைக்கா மல் லட்சக்கணக்கான குழந்தை கள் பலியான நிகழ்வுகளை நினை வுபடுத்தினார். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததையும் குறிப்பிட்டார். சமூகப் பிரச்சனைகள் தீண்டாமைக் கொடுமையை கோடிக்கணக்கான மக்கள் அனுபவித்து வருவதாகவும், அரசியல் சட்டம் இயற்றப்பட்டும் இது தொடர்வதாகவும் கவலை தெரி வித்தார். மதப்பெருமையை ஏற் படுத்தி மாற்றுமத நபர்களிடையே கலவரத்தை தூண்டும் முயற்சிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டார். “கடந்த 100 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் மத உணர்வை மதவெறியாக மாற்றி வருகிறது. மக்களை பிளவுபடுத்தி நாட்டை ஆளுவது சுலபம் என்று நினைக் கிறார்கள். இதனை எதிர்த்துப் போராட வேண்டும்” என அழைப்பு விடுத்தார். பொதுத்துறை சீரழிவு சிஐடியு மாநில பொதுச்செய லாளர் ஜி. சுகுமாறன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், “இந்தியாவில் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வரு கிறது” என்று தெரிவித்தார். 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட புதிய பொரு ளாதாரக் கொள்கைகளால் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டதாக கூறினார். 1990களில் இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டன. 2000-களில் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைத் தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. வாஜ் பாய் ஆட்சியில், பொதுத்துறை நிறு வனச் சொத்துகளை விற்பதற் காகவே ஒரு தனி அமைச்சகம் நியமிக்கப்பட்டது. பின்னர் இடது சாரிகளின் ஆதரவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, தனியார்மயத்திற் கான அமைச்சகம் நீக்கப்பட்டது என்று நினைவுபடுத்தினார். தொழிலாளர் போராட்டங்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி நடை பெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் அதிக மான தொழிலாளர்கள் பங்கேற்ற தாக தெரிவித்தார். ஆந்திராவில் 10 மணி நேர வேலை, கர்நாடகத்தில் 12 மணி நேர வேலைக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் போராடி வரு கின்றனர். நெதர்லாந்தில் 6 மணி நேர வேலை, வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற கொள்கை அமல்படுத்தப்பட்டு, உற்பத்தி அதி கரித்துள்ளது என்ற உதாரணத்தை சுட்டிக்காட்டினார். ஒப்பந்த முறை அதிகரிப்பு நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை யும், ஒப்பந்த மற்றும் அவுட்சோர் சிங் முறைகள் அதிகரித்து வரு வதையும் சுட்டிக்காட்டினார். மின்சாரப் பேருந்துகளை இயக்க 500 பேருந்துகளுக்கு 700 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிய மிக்கும் திட்டம் உள்ளதாக தெரி வித்தார். உள்ளாட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இந்த முறைகள் பின்பற்றப்படுவதாக குறிப்பிட்ட அவர், “அவுட்சோர்சிங் முறைகளுக்கு எதிராக வலுவாக போராட வேண்டும்” என்று வலி யுறுத்தினார். கேரளாவில் கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு நாற் காலி வசதி கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அதேபோல் உத்தரவிட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.