articles

img

3-ஆவது நாளாக திரண்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் 27 மையங்களில் தொடரும் காத்திருப்பு போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள்  3 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.20 - 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க  வேண்டும். 23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் புதனன்று 3 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. திருச்சி - கரூர் மண்டலங்கள் சார்பில் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புற நகர் கிளை முன் நடந்த போராட்டத்திற்கு டி.என்.எஸ்.டி.சி மத்திய சங்க துணை தலைவர்  சண்முகம் தலைமை வகித்தார். திருச்சி கரூர்  மண்டல தலைவர் சிங்கராயர் துவக்க உரை யாற்றினார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், டி.என். எஸ்.டி. சி திருச்சி, கரூர் மண்டல பொதுச் செய லாளர் மாணிக்கம், எஸ்.சி.டி.சி மாநிலத் தலை வர் அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு அரசுப் போக்கு வரத்து ஊழியர்  (சிஐடியு) சங்கத்தின் மண்டலத்  தலைவர் கே.கார்த்திக்கேயன், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மண்டலத் தலைவர் கே. பிரான்மலை ஆகியோர் தலைமை வகித்த னர். போராட்டத்தில் கலந்து கொண்டு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி, போக்குவரத்து சங்க மண்டல பொதுச் செயலா ளர் ஆர்.மணிமாறன், ஓய்வு பெற்ற சங்கத்தின்  மண்டல பொதுச் செயலாளர் பி.லோகநாதன், சிபிஎம் மாநகர செயலாளர் எஸ்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பேசினர். முன்னதாக சிஐ டியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தும்,  சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் போராட் டத்தை நிறைவு செய்தும் உரையாற்றினர்.  நாகப்பட்டினம் நாகப்பட்டினம் போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு மத்திய சங்கத் தலைவர் ஏ. கோவிந்தராஜ் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் வி.பி.நாகைமாலி துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து, சம்மேளன துணைத் தலைவர் எம்.கண்ணன், மண்டல பொதுச் செய லாளர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.