articles

img

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

எல்ஐசியில் அதிகாரிகள் பணி

பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில்(LIC) பல்வேறு பிரிவுகளில் அதிகாரி கள் பணியிடங்களை நிரப்பு கிறார்கள். பொதுப்பணியில் 350,  பொறியியல் பிரிவில் 81, சிறப்புப் பிரிவுகளில் 410  பணியிடங்கள் அறிவிக்க ப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிரப்புதல் தொடங்கும் தேதி - ஆகஸ்ட் 16, 2025 விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - செப்டம்பர் 8, 2025 தேர்வு முறை - இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு(கணினி வழி) அக்டோபர் 3, 2025 அன்று நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறு பவர்களுக்கு நவம்பர் 8, 2025 அன்று முதன்மைத் தேர்வு (கணினி வழி) நடைபெறும். வயது வரம்பு - குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு அரசு விதிமுறை களின்படி அதிகபட்ச வயதில் தளர்ச்சி இருக்கும். கல்வித்தகுதி - பொதுப்பணி அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் இளங்கலை பெற்ற வர்களாக இருக்கவேண்டும், பொறியியல் மற்றும் சிறப்புப்  பிரிவில் விண்ணப்பிப்பவர் களுக்குத் தேவையான கல்வித்தகுதிகள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2025

மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்த நிலைமை மாறி, தகுதித் தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது.  தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் தகுதியை நிர்ணயிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இவர்களை நியமிப்பதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி - செப்டம்பர் 8, 2025 முதலில் வெளியான அறிவிக்கையின்படி, தாள்-1க்கான கணினி வழித்தேர்வு நவம்பர் 1, 2025 அன்றும், தாள்-2க்கான கணினி வழித்தேர்வு நவம்பர் 2, 2025 அன்றும் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வுத் தேதி மாற்றத்திற்கான வேண்டுகோள் வந்ததால், தற்போது தாள்-1 நவம்பர் 15, 2025 அன்றும், தாள்-2 நவம்பர் 16, 2025 அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு - குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, கல்வித்தகுதி, தேர்வு  முறை, பாடத்திட்டம், கட்டணம், தேர்வு மையங்கள், தேவையான சான்றிதழ் பட்டியல், குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளது. அறிவிக்கையை http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரைப்படைக்கு வழக்கறிஞர்கள் தேவை

இந்திய தரைப்படையில் பணியாற்ற சட்டம் பயின்ற திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர். சட்டப்படிப்பில் குறைந்த பட்ச இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கிளாட் (CLAT) - 2025ல் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.  நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த விபரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி செப்டம்பர் 3, 2025 ஆகும்.  

நியூ இந்தியா அஸ்யூரன்சில் 550 பணியிடங்கள்

பொதுக்காப்பீட்டில் பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்சில் நிர்வாக அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்துள்ளது. இதில் பொதுப்பணி மற்றும் சிறப்புப் பணி ஆகிய இரண்டிற்குமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 550 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணிவாரியான கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்டவற்றை www.newindia.co.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி ஆகஸ்ட் 30, 2025 ஆகும்.

 917 வங்கி அதிகாரிகள் பணியிடங்கள்

பேங்க் ஆப் மகாராஷ்டிரா(500) மற்றும் பேங்க் ஆப் பரோடா(417) ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளும் சிறப்புப் பணி அதிகாரிகள் மற்றும் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்புகின்றன. கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட விபரங்கள் www.bankofmaharastra.in (பேங்க் ஆப் மகாராஷ்டிரா) மற்றும் www.bankofbaroda.in/career (பேங்க் ஆப் பரோடா) ஆகிய இணையதளங்களில் கிடைக்கும். பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ஆகஸ்ட் 30, 2025 என்றும், பேங்க் ஆப் பரோடா வுக்கு ஆகஸ்ட் 26, 2025 என்றும் விண்ணப்பிக்கக் கடைசித் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.