articles

img

‘விவசாயி’க்கு தெரியுமா விவசாயிகள் பிரச்சனை?

“மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டத்தால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் அதை எதிர்க்கவில்லை” தமிழக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.நானும் ஒரு விவசாயி தான். பல ஏக்கர் நெற்பயிர் விவசாயம் செய்து வருகிறேன். ஒரு விவசாயியின் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் முதல்வர் எடப்பாடி ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார்.மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண்சட்டங்களை எதிர்க்கும் எதிர்க் கட்சிகள் கூறுவது போல் இடைத் தரகர்கள் யாரும் தமிழ்நாட்டில் கிடையாது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு சென்று நல்ல லாபத்திற்கு விற்கலாம். விவசாயிகளே விலையை  நிர்ணயித்துக் கொள்ளலாம். இடைத்தரகர்கள் யாரும் தலையிட முடியாது. புதிய சட்டங்களால் விவசாயிகளுக்கு தான்அதிக லாபம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி திரும்பத்திரும்ப பேசி வருகிறார். இது ஒரு பொய்யை திரும்பத்திரும்பச் சொன்னால் அது உண்மையா கிவிடும் என்ற ‘கோயபல்ஸ்’ பாணி.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை மொத்தமாக குவித்து பதுக்கி வைக்கும் காற்றுப்புகாத பிரம்மாண்ட கிடங்குகளை அதானி குழுமத்தின் “அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் இந்தியா முழுவதும் சென்னை, கோயமுத்தூர், பெங்களூர், கொல்கத்தா, மும்பை என 14 இடங்களில் நிறுவியுள்ளது.8,75,000 மெட்ரிக் டன் கொள்ளளவுகொண்ட இந்தநவீன தானிய சேமிப்பு கிடங்குகள் அனைத்தும் ‘சிமெண்ட் பேஸ் அண்ட் ஸ்கேல்வனிசிங்’ என்ற உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உள்ளதும் போச்சு...
இந்திய உணவு க்கழகத்துடன் ரூபாய் 700 கோடிக்குகூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மாநில வாரியாக ஒட்டுமொத்தமாக விவசாயிகளிடம் ‘அடிமாட்டு விலைக்கு’ அதானி நிறுவனமே கொள்முதல் செய்து கொள்வதுதான் கமிஷன் ஏஜெண்ட் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து லாபத்தை பெற முடியும் என்று ‘நம்ம ஊர் விவசாய முதல்வர்’ கூறுகிறார்!

பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிடங்குகளில் நெல், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் என அனைத்து பொருட்களையும் மாதக் கணக்கில் சிறிதும் சேதமின்றி வைத்துக் கொள்ளலாம். இந்த பிரம்மாண்ட நிறுவனத்தில் உணவு தானியங்களை மொத்தமாக கையாண்டு, ஈரப்பதம் கொண்ட தானியங்களை உலர்த்திய பிறகு, சேமித்து வைத்து இந்தியஉணவுக் கழகத்திற்கு தேவைப்படும்போது பொருட்களை வழங்கும் முன்னோடி நிறுவனமாம் அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ்!சாதாரணமாக நிறுவப்படும் உணவு கிடங்குகளை காட்டிலும் இந்த வகை பிரம்மாண்ட கிடங்குகள் அதற்குமூன்று பங்கு நிலம் கூடுதலாக தேவை. முதன்முதலாக பஞ்சாப்பின்‌ மோஹா-விலும், ஹரியானாவின் கைதலா‌விலும் தான் அதானி குழுமம் அக்ரி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கியது. அதனால்தான் வடமாநில விவசாயிகள் அதன் பாதிப்பை முழுமையாக அனுபவித்து உள்ளனர்.

இதுவரை வாடகைக்கு மட்டுமே குடோன்களை கொடுத்துக்கொண்டிருந்த அதானி நிறுவனம், முதன் முதலாக மத்தியப் பிரதேசத்தில் 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நேரடியாக கோதுமை கொள்முதல் செய்யும் உரிமத்தை பெற்றிருக்கிறது.அவசர அவசரமாக மத்திய மோடிஅரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில்  அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஒழிக்கப்பட்டு அரசு செய்யும் கொள்முதலும் நிறுத்தப்படும் என்ற அச்சம் விவசாயிகளிடம் நிலவுகிறது.அதற்கு ஏற்றாற் போல் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் தடைச் சட்டப்பட்டியலிலிருந்து காய்கறி, பருப்பு, எண்ணெய் வகைகளை விலக்கி புதிய சட்டம்போட்டிருப்பதால் இந்த சட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்காக அல்ல.அதானி மற்றும் அம்பானி போன்ற கார்ப்பரேட்  களவாணிகளுக்குத்தான் என்ற விவசாயிகளின் அச்சம் நியாயமானதே!மத்தியப் பிரதேசத்தில் உரிமை பெற்றவர்கள் மற்ற மாநிலங்களில் பெறமாட்டார்களா? நீங்கள் தான்தரமாட்டீர்களா எடப்பாடியாரே?மத்திய அரசு செய்வதை,சொல்வதை பாஜக ஆளும் மாநிலங்களை விட முந்திக்கொண்டு செய்வது தானே தங்களின் வேலை. பின்எப்படி தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை என்கிறீர்கள்? அந்தச் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டீர்களா? ஏமாற்ற வேண்டாம் எடப்பாடியாரே.

===சி.ஸ்ரீராமுலு==

;