ஸ்கேன் இந்தியா
ஆணை
காவல்துறை அலுவலர்களுக்கு எதிராக துறை ரீதியான நட வடிக்கை எடுக்குமாறு அலகாபாத் உயர்நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. சமூகப் பதட்டம் என்று சொல்லி, மத மறுப்புத் திருமணம் செய்த ஒரு ஜோடியை காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். சட்டத்தின்படி நடக்கும் ஆட்சியில் குடிமகனின் விடுதலையைத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தர முடியவில்லையா எனறு நீதிபதிகள் வினா எழுப்பியுள்ளனர். எந்த இடத்திற்கு அவர்கள் செல்ல விரும்புகிறார்களோ, அங்குப் பாது காப்புடன் அவர்களைக் காவலுடன் அனுப்பி வையுங்கள் என்று சொலலியிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் சாதி, மத மறுப்புத் திரு மணங்களில் அதற்கு எதிரான நட வடிக்கைகளில்தான் மாவட்ட நிர்வாகங்கள் நடக்கின்றன. இந்த விவகாரமும் அதற்கு விதி விலக்கில்லை என்று சமூக நீதி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சீர்திருத்தம்..?
இந்திய புள்ளியியல் மையத்தை சீர்திருத்தம் செய்யப் போகிறோம் என்று அதற்கான மசோதா நகலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து கருத்து கேட்டிருக்கிறார்கள். இந்த மசோதா குறித்துக் கருத்துக் கூறியுள்ள ஆய்வாளர்கள், “இது சீர்திருத்தம் அல்ல. சீர்குலைவு வேலை யாகும். தகுதி, திறமை எல்லாம் போய், பண மிருப்பவர்களின் கைவசம் இந்த மையம் போய்விடும்” என்கிறார்கள். தற்போதுள்ள 33-உறுப்பினர் நிர்வாகக் கவுன்சிலில் ஏழு பேராசி ரியர்களும் இடம் பெறுகிறார்கள். நகலில் உள்ளபடி கவுன்சில் உருவானால், அதில் மொத்தம் 11 பேர் மட்டுமே இருப்பர். அவர்கள் அனைவரையுமே ஒன்றிய அரசு நியமிக்கும். அதோடு, சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் பெரும் கட்டண உயர்வால் பறிக்கப்படவுள்ளன என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்வித்தகுதி
பாஜகவைச் சேர்ந்தவர். தற்போது தாராபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டி யிடுகிறார். ஒருவேளை, பாஜகவுக்கு அதிக சீட்டு கள் கிடைத்து, நிதிஷ் குமாரின் துணையில்லா மல் ஆட்சி அமைக்க முடிந்தால், இவர்தான் முதல்வர் என்று பேசிக் கொள்கிறார்கள். இவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தவுடன் பத்திரிகை யாளர்களைச் சந்திக்கிறார். கல்வித்தகுதி பற்றிய கேள்வி எழுகிறது. PFC என்று போட்டிருக்கிறீர் களே.. அதென்ன... என்றதற்கு திரு, திரு என்று முழித்திருக்கிறார். பல்கலைக்கழகம் பெயரும் சரி யாகத் தெரியவில்லை. வேட்புமனுவில் PFC, Kamaraj University என்று எழுதியிருக்கிறார். இந்தப் பெயரில் மதுரையில் மட்டும்தான் பல்கலைக் கழகம் உள்ளது. என்ன படித்தார், எப்போது படித்தார், உண்மையிலேயே படித்தாரா என்ற கேள்வி களுடன் பீகார் ஊடகவியலாளர்கள் தூண்டித் துருவி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆபத்து
பாஜகதான் இஸ்லாமிய வேட்பாளர் களை நிறுத்துவதில்லை என்றால், கூட்டணிக்கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கி விட்டன. ஒரு கட்டத்தில், சிறுபான்மை வாக்கு களை வாங்குவதற்காக கூட்டணிக்கட்சிகள் வேட் பாளர்களை நிறுத்தும். மதவெறிப் பிரச்சாரத்தை பாஜக நடத்தும். எங்களை மீறி பாஜக ஒன்றும் செய்து விட முடியாது என்று கூட்டணிக்கட்சி கள் பேசிக் கொள்ளும். இப்போது கூட்டணிக் கட்சிகளும் வெறுப்பை உமிழத் தொடங்கிவிட் டன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜன்சக்தி ஆகிய கட்சிகளும் இஸ்லாமியர்களைத் தேர்தலில் நிறுத்துவதைக் குறைத்து விட்டன. பாஜகவின் வளர்ச்சி அர சியல் சட்டம் தந்துள்ள மதச்சார்பின்மைக்கு ஆபத்தானது என்ற குற்றச்சாட்டு உண்மையாகி வருவதையே இது காட்டுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
