பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் 10 ஆண்டுகளில் 70 சதவீதம் அதிகரிப்பு
மாதர் சங்க மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கவலை
குழித்துறை, செப்.25- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டை யொட்டி குழித்துறையில் செப்டம்பர் 24 புதனன்று மாபெரும் பேரணியின் நிறைவாக சங்கத்தின் மாநில துணை தலைவர் என்.உஷாபாசி தலைமை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று ஆற்றிய உரையின் பகுதிகள்: பெண்களின் முன்னேற்றத்திற் கான ஏராளமான போராட்டங்களுக்கு சாட்சியம் வகித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறு கிறது. இது கேரள பெண்கள் முன்னே ற்ற வரலாற்றுடனும் இணைந்த ஒன்றாகும். இங்கு நிற்கும்போது திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, ஈவெரா பெரியார், அய்யா வைகுண்டர், இராமலிங்க அடிகளார், ஸ்ரீநாராயணகுரு போன்றவர்களின் நினைவுகள் மனம் நிறைந்து நிற்கிறது.
அவர்களது முயற்சிகளால்தான் மனி தர்கள் வாழத்தக்க நாடாக மாறி யிருக்கிறது; பெண்களுக்கு காலத்துக் கேற்ற முன்னேற்றம் சாத்தியமானது. பெண்கள் முன்னேற்றத்தில் இடதுசாரிகள் தீயினால் சுட்டபுண் உள்ளாறும்/ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற திருவள்ளுவரின் தமிழ்நாடு இது. வெறுப்பு பிரச்சாரம் நடக்கும் காலத்தில் வார்த்தைகள் எந்த அளவுக்கு சுடுகிறது என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வை யகம் தழைக்கும்; அறிவால் அழகு பெறும் என்று பாடிய பாரதியின் இளைய தலைமுறையினர் நாம். வைக்கம் போராட்டத்தின் மூலம் கேரளத்திலும் புகழ்பெற்றவர் பெரியார். தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் நாடு முழு வதும் நன்கு அறியப்பட்டார்.
தெற்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று புகழ்பெற்றார். தேவதாசி முறைக்கு முடிவு கட்டிய முத்துலட்சுமி ரெட்டி முதல் மதநல்லிணக்கம், மனிதநேயத்தை முன்னிறுத்திய இராமலிங்க அடி களார் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக முன்னேற்றத்துக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அவையெல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. அவர்களைத்தொடர்ந்து முன்னு க்கு வந்த இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் சமூகக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர வரையறைக் குட்பட்டிருந்த அப்போராட்டங்களை, பொருளாதாரச் சுரண்டல்களை முடிவுக்கு கொண்டுவருவது என்கிற அரசியல் உள்ளடக்கத்தை வழங்கி முன்னேறியது. இந்த மாநாட்டில் அந்த வரலாறுகள் நினைவுகூரப்பட வேண்டும். கேரளமும் தமிழ்நாடும் ஒரேமாதிரியான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்ளும் பகுதிகளாகும். வறுமையும் துயரமும் பிறப்பின் பலன் எனவும் அவற்றை அனுபவித்து முடித்தால் மட்டுமே அடுத்த பிறவியிலாவது சொர்க்கம் கிடைக்கும் எனவும் நம்ப வைத்து பெரும்பான்மையாக உள்ள மக்களைச் சுரண்டும் முறைக்கு சாதிய முறை உள்ளாக்கியது. இது நமது 2 மாநி லங்களிலும் வலுவாக இருந்தது. அதற்கு இரையானவர்கள் முக்கிய மாக பெண்களாவர்.
கேரளத்தில் ஸ்ரீநாராயணகுரு, தமிழ்நாட்டில் பெரி யார் போன்றவர்கள் இதற்கு எதிராக கேள்வி எழுப்பினர். முற்போக்கு அர சியல் இயக்கங்கள் அதை வலுப்படுத்தி முன்னேறின. அதன் மூலம் பொதுச் சமூகத்தில் பெண்களுக்கு முக்கியத்து வம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. விடு தலையை பிறரிடம் எதிர்பார்க்காமல் பெண்கள் சுயமாக முன்வந்து அதனைப் பெற வேண்டும் என்று பெரி யார் அறைகூவல் விடுத்தார். இன்றைக்கு ஆதார் அட்டை போல அன்றைக்கு கேரளத்தில் அடையாளம் காண கல்லுமாலை அணியும் நிலை இருந்தது. அதை அறுத்தெறியும் போராட்டங்கள் நடந்தன. பெண்கள் மார்பு மறைப்பதற்கான போராட்டம், கோவில் பிரகாரங்களில் நடக்கும் உரிமைக்கான போராட்டம், முத்திரை பதித்த தோள்சீலைப் போராட்டம்… என இரு மாநிலங்களும் ஒரே மாதிரி யான போராட்டங்களை ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நடத்தி வெற்றி கண்டவர்கள் நாம். அந்த பாரம்பரியத்தைக் கையில் ஏந்தி மாதர் சங்கம் முன்னேற வேண்டும். கேப்டன் லட்சுமி போன்ற வீராங்கனைகள் தலைமை வகித்த அமைப்பு இது. மூடப்பழக்க வழக்கம் முதல் மனித உரிமைக்கான போராட்டங்கள், வேலை செய்வதற்கான உரிமைக் கான போராட்டம், நரபலி போன்ற மூடப்பழக்கத்திற்கு எதிராகவும், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதிக்காகவும் போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள். இந்தியாவில் இன்று இத்தகைய போராட்டங்கள் முக்கியத்துவம் பெறு கின்றன. ஏனென்றால், பெண்ணடி மைத்தனத்தை ஆதரிப்போர் இன்று மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். பரிதாப நிலையில் இந்தியா உலக பட்டினி கணக்கிலும், மனித முன்னேற்ற பட்டியலிலும், பரிதாபகர மான நிலையில் நமது நாடு உள்ளது.
அதற்கு இரையாவது ஒருபகுதி பெண்களும் குழந்தைகளுமாகும். நாட்டின் 55 சதவிகிதம் பெண் களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை. ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ என்கிற முழக்கம் முன்வைக்கப் படுகிறது. ஆனால் பாலின இடைவெளி யில் உலகில் உள்ள 147 நாடுகளின் பட்டியலில் 131 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. 2014 இல் அதிகாரத்துக்கு வந்த பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான தாக்குதல் இல்லாமல் செய்வதாக கூறினார். ஆனால், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவிகி தம் அதிகரித்துள்ளது. இவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவ தில்லை. மாறாக தண்டிக்கப்பட்ட வர்களைக் கூட பாராட்டி மாலையிட்டு வரவேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்வா, ஹாத்ரஸ், உன்னாவோ சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தன. பெண்களுக்கு எதிரான குற்றங் களில் தண்டனையை உறுதி செய்வ தற்கான வர்மா கமிஷன் பரிந்துரை களை செயல்படுத்தவும் இல்லை. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடும் சொற்ப மானது.
பெண்களை பாதுகாப்ப தற்கான திட்டங்களும் இல்லை. இருக்கும் திட்டங்களும் செயல்பட வில்லை. கோடிக்கணக்கான பெண்கள் பணியாற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைக்கான நிதி ஒதுக்கீடும் வெட்டிக்குறைக்கப்படு கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் மர ணங்கள் நிகழும் நமது மாவட்டத்தில் ஐசிடிஎஸ் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வெட்டிக் குறைக்கிறது. எல்டிஎப் அதிகாரத்தில் இருக்கும் கேரளத்தில் சிசு மரண விகிதம் உலகின் வளர்ந்த நாடுகளை விட குறைவாகும். நாடு முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் பெண் களுக்கு எதிரான தாக்குதலில் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒவ் வொரு நாளும் பத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம் இதில் முன்னிலை யில் உள்ளது. கேரளத்தில் பெண் களுக்கு எதிரான வன்முறைகள் மிகக் குறைவு. பெண்களுக்கு சாதகமான கேரளம் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சத விகிதம் இட ஒதுக்கீட்டை அமலாக்கிய சில மாநிலங்களில் கேரளம் ஒன்றா கும். பெண்களின் முன்னேற்றத்துக் காக உருவாக்கப்பட்ட குடும்ப ஸ்ரீ திட்டம் உலகிற்கே முன்மாதிரியாக உள்ளது. அதில் அரைக்கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
பெண்கள், குழந்தைகளுக்கென தனித்துறை கேரளத்தில் உருவாக்கப்பட்டது. பாலின (ஜெண்டர்) பட்ஜெட் உருவாக்கப்பட்ட மாநிலம் கேரளமாகும். இதன் மூலம் 25 சதவிகிதம் நிதி பெண்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்து வது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையில் அபராஜிதா, பிங்க் போலீஸ் உட்பட பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சணை தடுப்பு பிரிவு காவல்துறையில் உருவாக்கப் பட்டுள்ளது. பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளன. தொழில் முனை வோரில் 32 சதவிகிதம் பெண்களாவர். கடந்த 3 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் பெண்கள் அவற்றில் வேலை பெற்றுள்ளனர். பாலஸ்தீனத்தின் நிலை உலகில் இன்று மிகவும் ஆபத்தான பகுதியாக பாலஸ்தீனம் மாறியுள்ளது. 2023 அக்டோபரில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த 2 ஆண்டுகளில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டனர். இதில் 35 ஆயிரம் பெண்கள், குழந்தைகள். உலகப் போரில் இறந்தோரைவிட அதிகமாக - 252 செய்தியாளர்கள் இந்த தாக்கு தலில் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான், சிரியா, கத்தார் நாடுகளிலும் குடியிருப்பு பகுதிகளில் குண்டுவீசி மக்கள் கொல்ல ப்பட்டுள்ளனர். காசாவிலிருந்து மக்களை அடித்துவிரட்ட மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது. காசாவை உல்லாசப் பகுதியாக மாற்றும் திட்டத்துடன் இந்த தாக்குதல் நடப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறி யது முக்கியமானது.
இந்தியா அணிசேரா நாடுகளுடன் இணைந்து செயல்பட்டபோதும் பாலஸ்தீன ஆதரவைக் கொண்டிருந் தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு குரல் கொடுத்த இந்திய நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய ஆதர வாளர்களாக மாறி உள்ளனர். அதன் மூலம் எந்த நன்மையும் நமக்கு கிடைக்கவில்லை. மாறாக எச்1 பி விசாவுக்கு முன்பு இருந்ததைவிட 22 மடங்கு கூடுதல் கட்டணத்தை அமெரிக்கா விதித்ததுதான் நடந்துள் ளது. அமெரிக்காவில் உள்ள 21 சத விகிதம் எச்1 பி விசா பெற்ற இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு எதிராக குரல் எழுப்பவும் திராணி அற்றவர்களாக நமது நாட்டின் மத்திய ஆட்சியாளர்கள் மாறி உள்ளனர். காந்திஜியை கைவிடும் நிலை விடுதலைப் போராட்ட பாரம்பரியம் இல்லாத சங்பரிவார் காந்திஜியைக் கூட கைவிடும் நிலைக்கு வந்துள்ள னர். அதற்கு பதிலாக கோட்சே, சாவர்க் கர் போன்றவர்கள் கொண்டுவரப் படுகிறார்கள். அவர்களை மகாத்மா வாக சித்தரிக்கிறார்கள். காந்திஜிக்கும் மேலானவர்களாக காட்டப்படுகிறார் கள். நமது பல்கலைக்கழகங்களின் தலைமையில் இருப்பவர்கள் (வேந்தர்) தங்களை கோட்சேவின் பக்தர்களாக பகிரங்கமாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் அடிப் படை என்பதே கூட்டாட்சி தத்துவ மாகும். அதை சீர்குலைக்க ஒன்றிய அரசு முயன்று வருகிறது. அதன்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் அரசமைப்பு முறைக்கு நெருக்கடி ஏற்படுத்து கிறார்கள்.
கேரளமும் தமிழ்நாடும் அதற்கு இரையாக்கப்படுகின்றன. ஜிஎஸ்டியால் மாநிலத்தின் இழப்பு மாறவில்லை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழ்நாடு, கேரளம் உட்பட மாநிலங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. ஜிஎஸ்டி கவுன்சில்தான் வரி மாற்றம் கொண்டுவர வேண்டும். ஆனால் பிரதமரே அதுகுறித்து அறிவிக்கிறார். வரி மாற்றம் குறித்து கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநி லங்கள் முன்வைத்த எதையும் ஒன்றிய அரசு பரிசீலிக்கவில்லை. ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொதுமக்களுக்கு அதன் பயன் கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. புதிய வரி மாற்றத்தின் மூலம் சிமெண்ட் விலை ரூ.30 வரை குறைந்திருக்க வேண்டும். ஆனால், சிமெண்ட் நிறுவனங்கள் விலையை மூட்டைக்கு ரூ.35 உயர்த்தி உள்ளன. கேரளத்திற்கு ரூ.8 ஆயி ரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். இது மொத்த வருவாயில் 15 சதவிகிதம் குறை வாகும். தமிழ்நாடும் கேரளமும் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தடைக்கல்லாக இது அமையும். தொகுப்பு : சி.முருகேசன்