articles

img

விவசாயத்தை மேம்படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

விவசாயத்தை மேம்படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

அதிக விளைச்சலுக்கு கென்யா விவசாயிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். விளையும் பயிர்களின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த அங்கு இத்தொழில்நுட்பம் சிறு மற்றும் குறு விவசாயிகளிடையில் பிரபலமாகிவருகிறது.

கென்யாவில் ஒரு நாள். காலைப் பொழுது. கெரீச்சோ (Kericho) பகுதி யில் சோர்வாட் (Sorwot) என்ற கிரா மத்தில் வாழும் சாம்மி செலின் ஸ்ட்ரோடு  (Sammy Selim strode) அடர்ந்த பிர காசமான தன் காபி தோட்டத்தில் வளர்ந்துள்ள செடிகளை கென்னடி கிரூயி (Kennedy Kirui) என்ற இளம்  விவசாயத் தோழருடன் பார்வையிடு கிறார். தோட்டத்தின் ஒவ்வொரு மூலை யிலும் நின்று செடிகளின் நிலை பற்றிய  விவரங்களை வாட்ஸ் ஆப் செயலியில்  உள்ள வெர்ச்சுவல் அக்ரானமிஸ்ட் (Virtual Agronomist) என்ற உரை யாடல் குழுவுக்கு அனுப்புகிறார். வழிகாட்டும் செயலிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த கருவியின் மூலம் உரமிடுதல் பற்றி ஆலோசனை வழங்கப்படுகிறது. சாட் பாக்ஸ் கருவி மேலும் சில கேள்விகள் கேட்டு செலின் 7.9 டன் விளைச்சலைப் பெற குறிப்பிட்ட மூன்று வகை உரங்களை பயன்படுத்த அறிவுரை கூறுகிறது.  “அடக் கடவுளே!”. அறிக்கையில் இருந்த உரங்களின் அளவைப் பார்த்து  செலின் கூறினார். அவர் மிக அதிக  உரங்களைப் பயன்படுத்த திட்டமிட்டி ருந்தார். களைகள், நோய்கள், தொழில்நுட்  பப் பற்றாக்குறை இருந்தால் விவசாயி கள் பெரும் பயிர் இழப்பை சந்திக்க நேரிடும். வேளாண் விரிவாக்க அலுவ லர்களிடம் இருந்து விவசாயிகள் ஆலோ சனைகள் பெறுவது வழக்கம். ஆனால் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் சமீப  ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 2022 இல் தன் நண்ப ரின் உதவியுடன் செலின் இந்த செயலி யை 0.4 ஹெக்டேர்/1 ஏக்கர் நிலத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார். செயலியின் மூலம் கிடைத்த பரிந்து ரைகளால் அவர் 7.3 டன் காபியை விளை வித்தார். “தொழில்நுட்பம் உதவுகிறது”  என்று கூறும் அவர் பெற்ற மிக அதிக  விளைச்சல் இது. செயலியின் பயன்பாட்டுக்கு முன்பு வரை அவர் விவசாயிகளுக்கு பொது வாக இருக்கும் அறிவைப் பயன்படுத்தி மண் ஆரோக்கியம் பற்றி அறியாமல் பயிர் செய்தார். இதனால் மிகக் குறைந்த விளைச்சலை மட்டுமே பெற்றார். இத்தொழில்நுட்பம் வரும்  முன்பு அவர் மண்ணை எடுத்து வெகு  தொலைவில் உள்ள ஆய்வுக்கூடத் துக்கு அனுப்பினார். ஆனால் முடிவுகள் பல மாதங்க ளுக்கு பிறகு அல்லது கிடைக்கா மல்கூட போகும். “மண்ணின் தேவை யைப் பற்றி அறிவது விவசாயிக ளுக்குப் பெரும் சவாலாக இருந்தது” என்கிறார் சோர்வாட் காபி உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க தொழிற்சாலை  மேலாளர் ட்ளோரா மேரிட்டிம் (Florah  Maritim). பயிர்களைத் தாக்கும் பூச்சி கள், நோய்கள் பற்றி இத்தொழில்நுட் பம் வரும் முன்பு விவசாயிகளால் தீர்மா னிக்கமுடியாமல் இருந்தது. “பூச்சிகள், நோய்கள் பற்றி தனக்குத்  தெரிந்தவரை செயல்பட்டு வந்த மச்சா கோஸ் (Machakos) கவுண்டி க்வா  மவாரா (Kwa Mwaura) கிராமத்தைச் சேர்ந்த மியூசௌ முயூட்டிசியா (Musau  Mutisya) என்ற விவசாயி இப்போது தன் 0.6 ஹெக்டேர்/1.5 ஏக்கர் நிலத்தில் தாவர உலகம் (PlantVillage) என்ற செயலியைப் பயன்படுத்தி நோயுற்ற பயிர்களை கண்டுபிடிக்கிறார். இந்த செயலியில் ஆயிரக்கணக்கான ஆரோக்கியமான மற்றும் நோயுற்ற செடிகளின் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் ஆரோக்கியமானவற்றை அடையாளம் காணமுடியும். பழங்குடியினரின்  பாரம்பரிய அறிவுகள் வெர்ச்சுவல் அக்ரானமிஸ்ட் செயலி  மண்ணின் அமில காரத் தன்மையைக் குறிப்பிடும் பி ஹெச் (Ph) அளவு, மண்ணின் மற்ற பண்புகளை ஆப்பி ரிக்கா முழுவதும் உள்ள செயற் கைக் கோள் தரவுகளைப் பயன்படுத்தி விவ சாயிகளுக்கு அளிக்கிறது. கென்யா வில் 7.5 மில்லியன் சிறு மற்றும் குறு  விவசாயிகள் உள்ளனர். 400 விவசாயி களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலு வலர் இருக்கவேண்டும் என்று உலக வேளாண் நிறுவனம் கூறுகிறது. ஆனால் கென்யாவில் 1093 விவசாயி களுக்கு ஒரு அலுவலர் மட்டுமே செயல்படுகிறார். “இந்த இடைவெளியை இத் தொழில்நுட்பம் குறைக்கிறது” என்று ஐ எஸ் டி ஏ (ISDA) என்ற இலாப நோக்  கற்ற அமைப்பை உருவாக்கிய கேட்ஸ்  அறக்கட்டளையின் வேளான் விநி யோக முறைமையின் இயக்குநர் ஈனாக்சி காவா (Enock Chikava) கூறு கிறார். இத்தொழில்நுட்பம் வளர்ச்சி யடைய டிஜிட்டல் திறன்கள் மேம் படுத்தப்படவேண்டும். எல்லா மக்களும் ஸ்மார்ட் போன்கள்  பெறவேண்டும் என்று கென்யா, நைஜீ ரியா, தென்னாப்பிரிக்காவில் இது பற்றி  ஆய்வு செய்த ஜி எஸ் எம் சங்கம் கூறு கிறது. தாவர உலகம் செயலி இலவச மாக தகவல்களைத் தருகிறது. வெர்ச்சு வல் அக்ரானமி செயலி காபி பயிருக்கு  மட்டும் விவசாயிகளிடம் இருந்து கென்ய நாணய மதிப்பில் KSh300 அல்லது £1.70) என்ற கட்டணம் வசூலிக்கிறது. “இத்தொழில்நுட்பங்கள் பழங்குடி யினரின் பாரம்பரிய அறிவுகளை உட்படுத்தி செயல்படவேண்டும்” என்று  அதீன் (Athene) என்ற ஆய்வமைப் பின் நிறுவனரும் இயக்குநருமான ஏஞ்ச லின் வெய்ரெகி (Angeline Wairegi) கூறுகிறார். வெப்பநிலை, ஈரப்பதம், மண்ணின் ஈரம், தேவைப்படும் நீரின் அளவு போன்ற தகவல்களைப் பெற  உதவும் ஃபார்ம் ஷீல்டு (FarmShield) என்ற செயல்முறையை மியூவா (Mua)கிராமத்தைச் சேர்ந்த போனிபேஸ் என்ஸீவோ (Boniface Nzivo) போன்றோர் பயன்படுத்துகின்றனர். மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு அறிவியல் தொழில்நுட்பம் ஆற்றும் மகத்தான பங்கை இந்த கதை நமக்கு  எடுத்துக்கூறுகிறது.