articles

img

பாசிச எதிர்ப்புப் போராளி உமர் முக்தார்

பாசிச எதிர்ப்புப் போராளி உமர் முக்தார்

1858இல் லிபியாவின் பார்குவா கிராமத்தில் மினிபா பழங்குடி இனத்தைச் சார்ந்த உமர் முக்தார் பிறந்தார். 1912இல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைப்பற்றியதும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலனி ஆட்சியை எதிர்த்து ஒழுங்குபடுத்தப்பட்ட, தீரமிக்க எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக போராடினார்.  1911 அக்டோபரில் அட்மிரல் லுயிஜி பராவெல்லியின் தலைமையிலான இத்தாலிய கடற்படை லிபிய கரையோரத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள், இல்லையேல் திரிபோலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்” என அச்சுறுத்தியபோது, லிபியர்கள் மறுத்து தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு ஓடினர். மூன்று நாட்கள் முசோலினியின் படை குண்டு மழை பொழிந்தது.  தொழில் ரீதியாக குரான் ஆசானான உமர், சிறந்த கொரில்லா போர் தந்திரவாதியாகவும் விளங்கினார். பாலைவனப் புவியியல் அறிவைப் பயன்படுத்தி தன் படைவீரர்களுக்கு போர் உத்திகளைக் கற்றுக்கொடுத்தார். உலகின் மிகவும் பலமான முசோலினியின் படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களால் இத்தாலியப் படையை நிலைகுலையச் செய்தார்.  1931 செப்டம்பர் 11இல் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 16இல் தூக்கிலிடப்பட்டார். இதனால் 20 ஆண்டுகால எதிர்ப்புப் போர் முடிவுக்கு வந்தது.