articles

img

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை தடுக்க ஒரு ராணுவத்தை உருவாக்க வேண்டும்

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை தடுக்க ஒரு ராணுவத்தை உருவாக்க வேண்டும்

குஸ்தாவோ பெட்ரோ அதிரடி பேச்சு நியூயார்க், செப்.27 -

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை தடுப்பதற்காக புதிய சர்வதேச ராணுவத்தை உருவாக்க வேண்டும் என ஐ.நா. பொது அவையின் 80 ஆவது அமர்வில் கொலம்பியா ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார். 2023அக்டோபர் மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலையை துவங்கிய பிறகு ஐ.நா.வின் அமைதிப்படைகள் அல்லாத ஒரு சர்வதேச ராணுவத்தை அமைத்து பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்று ஒரு நாட்டுத் தலைவர் முன்மொழிவது இதுவே முதல் முறையாகும். ஐ.நா. அவையில் அவர் பேசியதாவது: பாலஸ்தீனத்தில் நடப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இனப்படுகொலை தான். இந்த இனப்படுகொலையை மனிதகுலம் தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு நாள் கூட இனப்படுகொலைக்கு இடமளிக்க முடியாது. நேதன்யாகு, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பாவில் உள்ள அவரது கூட்டாளிகள்  இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. சர்வதேச ராணுவம் தேவை பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படு கொலையை நிறுத்த ஒரு சர்வதேச பணிக்குழுவை (International Task Force)  உருவாக்க வேண்டும் என கூறினார். மேலும் அவர், காசா தொடர்பான பிரச்சனையில் இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அது நிலைமையை சரி  செய்யவில்லை. பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு ஏவுகணை விழுந்து அப்பாவி குழந்தைகளை படு கொலை செய்து வரும் போது நாம் தொடர்ந்து பேசிப் பேசி வலியுறுத்தலாம் என்பது உண்மையல்ல. ஐ.நா பாதுகாப்பு அவையில் (போர் நிறுத்தத்திற்கு எதிராக ) பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ரத்து அதிகாரமும் மேலும் அதிக குண்டுகள் விழுவதையும், அதிக கொலைகள் நடக்கப் போவதையுமே குறிக்கிறது. “இனப்படுகொலையை இராஜதந்திர நடவடிக்கைகளை தாண்டிய அடுத்த கட்ட நடவடிக்கையால் நிறுத்த வேண்டும். பாலஸ்தீன மக்களின் உயிர்களைப் பாது காக்க இனப்படுகொலையை ஏற்காத நாடு கள் ஒன்றிணைந்து ஒரு சக்திவாய்ந்த சர்வ தேச ராணுவத்தை உருவாக்க வேண்டும்.  சுதந்திரம் அல்லது மரணம் உலக நாடுகளுக்கும், மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். வார்த்தைகள் மட்டுமே இனிமேல் போதாது. இது ஆயுதம் எடுக்கும் நேரம். ‘சுதந்திரம் அல்லது மரணம்’ என்பதைப் பின்பற்ற வேண்டிய நேரம். ஏனெனில் அமெரிக்காவும் நேட்டோ கூட்டமைப்பும்  ஜனநாயகத்தைப் படு கொலை செய்து, கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகாரத்தையே உலகளவில் மீண்டும் கொண்டு வருகின்றன. நாம் சுதந்திரம் அல்லது மரணம் என்ற கோஷத்தை பின் பற்றும் அதே நேரத்தில் சமாதானத்தையும் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று குஸ்தாவோ பெட்ரோ பேசியுள்ளார். மேலும் அமெரிக்கா, கரீபியன் கடல் பகுதியில் தனது ராணுவக்கப்பல்களை நிறுத்தி தாக்கு தல் நடத்தி போர்ப் பதற்றத்தை உருவாக்கி வருவதையும் அவர் கண்டித்தார். இந்த உரையை கேட்ட அமெரிக்க பிரதிநிதிகள் ஒரு கட்டத்தில் அவையில் இருந்து வெளியேறிவிட்டனர்.