articles

img

ஏஐ : நாம் பயன்படுத்துகிறோமா, நம்மை பயன்படுத்துகிறதா - தி.பிரதாப்

ஏஐ : நாம் பயன்படுத்துகிறோமா, நம்மை பயன்படுத்துகிறதா

நாம் இன்று நம் சமூகத்தில் “Seedream 4.0, Nano Banana” போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் போன்ற புகைப்படச் செயலிகள் முற்றிலும் புகைப்படக் கலைஞர்களை அழிக்கும் வண்ணம் மையத்தில் வந்து நிற்கின்றன. ஒரு பொது மனிதர் எடுக்கும் புகைப்படம் கூட இப்போது உண்மையா? கற்பனையா? என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு ஏஐ நம்மை சந்தேகத்துக்குள் தள்ளிவிட்டது. கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களை ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்தி, அதே காட்சிகளை “ஏஐ உருவாக்கியது” என்று வெளியிடப்பட்டது. கலைஞர்கள் உரிமை பறிக்கப்பட்டது.  இது தான் ஏஐ, உழைப்பின் பயனை எடுத்துக்கொண்டு. உழைப்பாளியை புறக்கணிக்கும். இதனால் புகைப்படக் கலை ஞர்கள். கிராபிக் கலைஞர்கள், ஸ்டுடியோ ஊழியர்கள் அனை அனைவரின் வாழ்வாதா ரமும் சந்தேகத்துக்குள்ளானது. அவர்கள் உழைப்பின் மேல் நம்பிக்கை அகன்று அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இது புகைப்படத்துறையிலேயே நின்றுவிட வில்லை. ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் வங்கி (Commonwealth Bank) தனது வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்களில் பலரை பணி நீக்கம் செய்து ஏஐ குரல் கருவிகளால் மாற்றியது. சில மாதங்களில் ஏஐ முறையில் தவறு ஏற்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் ஏஐ ஏற்க மறுத்தார்  கள், பிழைகள் பெருகின. அப்போது வங்கிக்கு  பணியாளர்களையே மீண்டும் அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த சில  மாதங்களில் அந்த ஊழியர்கள் என்ன துன்பம்  அனுபவித்தார்கள்? வேலை இழந்து எதிர்காலம் நிழலானது. ஏஐ தவறு புரிந்தால், வேலைவாய்ப்பு மீண்டும் திரும்பலாம். இழந்த நாட்களையும் மன உளைச்சலையும் யார் திருப்பித் தரப்போகிறார்கள்? இதே போல போலந்தில் உள்ள ஒரு பிர பல ரேடியோ நிலையம் பல வருடங்கள் குர லால் மக்களை கவர்ந்த செய்தியாளர்களை நீக்கி, ஏஐ உருவாக்கிய குரல்கள் மூலம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது. “மனித குரலின் உணர்வு, உயிர்ப்பு வேண்டாம்” என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. பல்லாண்டுகள் பயிற்சி பெற்று, உணர்வுகளை மனிதர்களிடம் பகிர்ந்த ஊழியர்கள் திடீரென “பணிநீக்கம்”. அதுவே ஏஐயின் முகம். அமெரிக்காவில் அரோரா (Aurora), வேமீ  (Wayme) போன்ற நிறுவனங்கள் சுய இயக்க  டிரக்குகளை சாலையில் ஓட்டத் தொடங்கிய போது. டிரக் டிரைவர்களின் தொழிற்சங்கங் கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தன. ஏனெ னில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தலை முறைகள் டிரக் ஓட்டும் தொழிலால் வாழ்ந்து  வருகின்றன. அவர்கள் வேலை இழந்து விட்டால். அந்த சமூகத்தின் நிலை? மருத்துவத்  துறையிலும், மருத்துவர்கள் பல வருடங்கள் படித்து, பயிற்சி பெற்று, எக்ஸ்-ரே, ஸ்கேன்  படங்களை வாசிக்கிறார்கள். இன்று அதையே ஏஐ சில விநாடிகளில் செய்வதாகக்  கூறுகிறது. AI தவறு செய்தால் பொறுப்பு யார்? மருத்துவரா? மென்பொருள் நிறு வனமா? நோயாளியா? நம் வாழ்க்கையை எளிதாக்குவதாகச் சொல்லும் அதே நேரத்தில், இந்த தொழில்நுட்  பம் மூலமாக முதலாளித்துவம் நம் வேலை களை பறித்து, உழைப்பின் மதிப்பை அழிக்கிறது. இது வரலாற்றில் புதியதல்ல. தொழில்துறை புரட்சி காலத்தில் இயந்தி ரங்கள் வந்தபோது, நெசவாளர்கள், கைத்தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்கள் போராடி, தொழிற்சங்கம் அமைத்து,  மனித உரிமைகளை காத்துக் கொண்டனர். அதே நிலை இப்போது இயந்திரம் கையில் கருவியாக இல்லாமல், சிந்தனையாக வந்து விட்டது. ஏஐ உழைப்பின் மதிப்பை அழிக்கிறது, அதனை கட்டுப்படுத்தி, பொதுநலத்திற்கே பயன்படுத்த வேண்டும். அது தனியார் கார்ப்ப ரேட்களின் கையில் இருந்தால், மக்கள் வேலை  இழப்பார்கள். அரசு மற்றும் தொழிற்சங்கத் தின் கையில் இருந்தால், அது மனித உழைப்பின்  சுமையைக் குறைத்து, வேலை நேரத்தை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். ஏஐ பெயரில் வேலை இழக்கும் அலை விரைவில் புகைப்படத் துறையிலிருந்து பத்தி ரிகை, வங்கி, போக்குவரத்து, மருத்துவம், காப்பீடு, கல்வி என எல்லா துறைகளுக்கும் பரவும். அதனால் நம்முடைய எதிர்கால பாது காப்பு, தொழிற்சங்க ஒற்றுமை, பொதுநலக் கட்டுப்பாடு, மற்றும் போராட்டம் மட்டுமே. இல்லையெனில், நாம் வேலை செய்யும் உரிமையே இல்லாமல் வாழும் நிலை வந்து விடும்.