articles

img

முண்டக்கையில் மலரும் புன்னகை - பினராயி விஜயன்

முண்டக்கையில் மலரும் புன்னகை

கேரளம் சந்தித்த ஒப்பிடமுடி யாத துயரத்தின் ஓராண்டு நிறை வடைகிறது. முண்டக்கை – சூரல்மலை துயரத்தின் நினைவுகள் எப்போதும் நமது வலியாக தொடரும். எந்தவொரு நெருக்கடியையும் துணிச்சலுடன் ஒற்றுமை யாக எதிர்கொள்ளும் கேரள மாதிரியின் பிரதிபலிப்புகளில் ஒன்றே முண்டக்கை-சூரல்மலை. பேரிடர் நடந்த உடன் மீட்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளவும், ஒருங்கி ணைக்கவும் நம்மால் சாத்தியமானது. அரசு அமைப்புகளுடன் இணைந்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நிவாரணப் பணிகள்,  நாட்டின் ஒற்றுமையையும் மன உறுதியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பேரிடர் பகுதியில் தங்களது அன்புக்குரி யவர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த அனைவரையும் அரவணைத்த அரசாங்கம், உடனடியாக அவர்களை பாது காப்பான இடங்களுக்கு மாற்றியது. தேவை யான அனைத்து வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்ட முகாம்களில் உளவியல் சிகிச்சை உட்பட உறுதி செய்யப்பட்டது. முகாம் களில் உள்ள குழந்தைகளின் மன ஆரோக்கி யத்தை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆசிரியர்களின் உதவியுடன், முகாம்களிலேயே அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வழிவகை செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் மறுவாழ்வு குறைகள் ஏற்படாத வகையில் நிவாரணப் பணிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அமைச்சரவை துணைக்குழு இரண்டு மாதங்கள் வயநாட்டில் முகாமிட்டு செயல்பட்டது. ஒவ்வொரு விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதை அரசாங்கம் உறுதி செய்தது. பேரிடர் ஏற்பட்ட ஒரு மாதத்திற்குள் தற்காலிக மறுவாழ்வு  முடிக்கப்படும் என்ற அறிவிப்பை கண்டிப்பாகப் பின்பற்றியது அரசாங்கம். ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குள் நிவாரண முகாம் களில் உள்ள அனைத்து மக்களையும் மறுவாழ்வுக்கான இடங்களுக்கு மாற்றியது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சொந்த விருப்பப்படி உறவினர்கள் வீடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கும் இந்த ஜூலை மாதம் வரை முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வாடகை வீடாகக் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. மறுவாழ்வு நிரந்தரமாகும் வரை இந்த உதவி தொடரும். மே 2025 வரை நிவாரண நிதியிலிருந்து வீட்டு வாடகைக்கு ரூ.3,98,10,200 செலவிடப்பட்டுள்ளது. இறந் தோரைச் சார்ந்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகைக்கு கூடுத லாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, 40 முதல் 60 சதவிகிதம் வரை ஊன முற்றவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் 60 முதல் 80 சதவிகிதத்திற்கு மேல் ஊனமுற்ற வர்களுக்கு தலா ரூ.75,000 ஒதுக்கப்பட்டுள்ளது.  பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் மேல் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கிறது. மனநலத்தை மீட்டெடுக்க ஒரு ஆலோசனை அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டு நிறைவையொட்டி, பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங் களின் வயது வந்த உறுப்பினருக்கு ஒரு நாளை க்கு ரூ. 300 உதவி ஒதுக்கப்பட்டது. ஆறு மாதங் களுக்கு மாதம் ரூ. 9000 வழங்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டது. இதற்காக ரூ. 9,07,20,000 செலவிடப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் பயனடைந்துள்ளனர். மாற்று ஆவணங்கள் வழங்கல் தொலைந்து போன ரேசன் கார்டுகள் முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவ ணங்களையும் திரும்பப் பெறுவதற்கான உதவி  ஆரம்ப நாட்களிலிருந்தே தொடங்கியது. ஒவ் வொரு மாதமும் ரூ.1,000 மதிப்புள்ள உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்படுகின்றன. பேரிட ரால் பாதிக்கப்பட்ட வெள்ளார்மலை பள்ளி மற்றும் முண்டக்கை பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர தேவையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்பட்டன. இந்திய கட்டிட சங்கத்தின் (BAI) சிஎஸ்ஆர் நிதி உதவியுடன், மேப்பாடி பள்ளியில் தேவையான வசதிகளை அமைக்க ரூ.2 கோடியை பொதுக் கல்வித் துறை பயன்படுத்தியது. பொதுக் கல்வித் துறையின் நிதியுடன் நான்கு  வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தொடங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. யுனிசெப்பின் உதவி யுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத் துறை, பெற்றோரை இழந்த ஏழு குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சமும் பெற்றோரில் ஒருவரை இழந்த 17 குழந்தை களுக்கு தலா ரூ.5 லட்சமும் விநியோகித்தது. பிரதமரின் வாத்சல்யா திட்டத்தின் கீழ், 18  முதல் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாதத்திற்கு ரூ.4,000 வழங்கும் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது. சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.3 லட்சம் 24 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. டவுன்ஷிப் வீடுகள் கட்டுமானப் பணி டவுன்ஷிப் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. பல சவால்களை எதிர் கொண்ட பிறகு அரசாங்கம் அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. அங்கு அனைத்து வசதிகளுடன் மாதிரி டவுன் ஷிப் அமைக்கப்படுகிறது. இதில் 410 குடி யிருப்பு அலகுகள், பொது கட்டிடங்கள், சாலை கள், நீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் அமைப்புகள், மின்சாரம், பிற உள்கட்ட மைப்பு, நிலத்தோற்றம் மற்றும் தள மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும். ஒப்பந்த நிறுவன மான ஊராளுங்கள் தொழிலாளர் ஒப்பந்த சங்கத்திற்கு முன் திட்ட செலவாக ரூ.40,03,778 ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டவுன்ஷிப் வீடுகள் வேண்டாம் என மறுத்த 104 குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. இந்த வகையில் மொத்தம் ரூ.16 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டது. மறுவாழ்வு பட்டியலில் உள்ள 402 பயனாளிகளில், 107 பேர் வீட்டிற்கு பதிலாக ரூ.15 லட்சத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். முதல்வர் நிவாரண நிதி ரூ.770 கோடி நிலச்சரிவு மறுசீரமைப்புக்காக ஜூன் 25 வரை முதலமைச்சரின் நிவாரண நிதியில் ரூ.770,76,79,158 பெறப்பட்டது. இதில் ரூ.91,73,80,547 பல்வேறு மறுவாழ்வு தொடர் பான தேவைகளுக்கு செலவிடப்பட்டது. இதில், ரூ.7,65,00,000 பேரிடர் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிதி உதவியாகவும், ரூ.50,00,000 வீட்டு வாடகைக்காகவும் முன்னர் ஒதுக்கப் பட்ட தொகைக்கு கூடுதலாக செலவிடப்பட்டது. எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தை கையகப்படுத்து வதற்காக ரூ.43,56,10,769 பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளது. டவுன்ஷிப் திட்டத்திற்கு ரூ.20,00,00,000, டவுன்ஷிப் முன் திட்டச் செலவுகளுக்கு ரூ. 40,03,778, டவுன்ஷிப்பிற்கு வெளியே வசிக்க விரும்புவோருக்கு தலா ரூ. 15 லட்சம் என ரூ. 13,91,00,000, வாழ்வாதார உதவிக்கு ரூ. 3,61,66,000  முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. வாழ்வாதார உதவி, வாடகை, மருத்துவ உதவி, கல்வி, விரி வான மறுவாழ்வு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் உயிர் பிழைத்தவர்களுடன் அரசாங் கம் உள்ளது. இந்த முன்னோடியில்லாத பேர ழிவிலிருந்து அற்புதமாக மீண்டு வந்து மறு வாழ்வு பெற்றவர்களையும், அதை சாத்திய மாக்க அயராது உழைத்தவர்களையும் நான் வணங்குகிறேன். மறுவாழ்வுக்கான பணிகளை சிறந்த முறையில் முடிக்க சமரசமற்ற முயற்சி களுடன் நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.  முண்டக்கை – சூரல்மலை நிலச்சரிவு துயரத்தின் ஓராண்டு (ஜுலை 30) நினைவாக தேசாபிமானியில் எழுதியுள்ள கட்டுரை.   - தமிழில்: முருகேசன்