articles

img

அடக்கு முறைகளை தாண்டிய பெண்கல்வி - கோ.அரவிந்தசாமி

இந்திய நாட்டை எந்த நேரத்திலும் பதற்ற நிலைக்குத் தள்ளி  பெண்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத நாடாக மாற்றி, பசுமை நிறைந்த புல்வெளி அமைந்த மலைப்பகுதிகளை தீக்கிரையாக மாற்றி, மணிப்பூர் மாநிலத்தையே பற்றி எரிய வைத்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக் கும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கில் மாணவிகள் இன்றைக்கு கல்வியை இழந்து தவிக்கும் அவலம் நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

குளிர் காயும் பிரதமர்


தேர்தல் பிரச்சாரத்தில் மணிப்பூர் மாநிலத் தில் இது நான் பிறந்த மண், இது என் நாடு, என் மாநிலம், என் தாயகம் என்று வாய் ஒழுகப் பேசி, வாக்கு சேகரித்த திரு நரேந்திர மோடி அவர்கள் தன் தாயகம் என்று கூறி யுள்ளார். பெற்ற வயிறு பற்றி எரியும்போது, அதில் யாரும் குளிர் காய மாட்டார்கள். ஆனால் தன் தாயகம், தன் தாய் நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி இந்திய நாடு பற்றி எரியும் பொழுது அதில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு புலனம் வழியாக அந்தக் கொடூரக் காட்சிகள், பொள்ளாச்சி சம்பவ மாக கைப்பேசிகளில் வெளிவந்து கொண்டி ருந்தது. அந்தக் காணொலிக் காட்சியில் தன் மீது வன்முறையை நிகழ்த்திய மிருகத்திடம் கல்லூரி மாணவி ‘அண்ணா, என்னை விட்டு ருங்கண்ணா, விட்டுருங்கண்ணா…’  (அடுத் தடுத்த வார்த்தைகளை சொல்வதற்கு கூட மனம்பதைக்கிறது) என்று கெஞ்சிக் கொண்டி ருந்தார். அந்தக் காட்சியைக் கண்ட மொத்தத் தமிழகமும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அந்தச் சம்பவம் பொள்ளாச்சியில் சில மனித மிருகங்களால் கல்லூரி மாணவிக ளுக்கு நடந்த கொடுமையாக தமிழக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இறந்த ஒருவனை சிதையில் வைத்து, மேலே விறகால் அடுக்கி நெருப்பு வைத்த பின்னர், இறந்த அவனின் மனைவியை கதறக் கதற உயிரோடு அந்தச்சிதையில் தள்ளும்  வழக்கம் இந்திய வரலாற்றில் உடன்கட்டை ஏறுவது (சதி) என பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

மார்பகத்தின் அளவிற்கு ஏற்ப வரியைக் கட்ட வேண்டும் என்கிற அநீதியை எதிர்த்து நங்கேலி எனும் பெண் தன் மார்பை அறுத்து வாழை இலையில் வைத்து சனாதனத்தின் முகத்தில் இரத்தத்தைப் பூசிய சம்பவமும் இந்திய சமூகத்தில் நடந்திருக்கிறது. 

முதன்மைப் பெண்மணியும் புறக்கணிக்கப்படல்

பாவ, புண்ணியம் – தீட்டு, புனிதம் என்ற சனாதன இந்தியச் சமூகம் பெண்களின் மேல் காலம் காலமாக தனது அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து அடிமைகளா கவே வைத்திருக்க இன்றளவும் எண்ணிக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டின் முதன்மைப் பெண்மணியாக இருந்தும் கூட பழங்குடி பெண், அதிலும் கணவனை இழந்த பெண் என்ற மடமைச் சிந்தனையால்  புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கும் ஒன்றிய அரசால் அழைக்கப்படாமல் இருந்தது அப்பட்டமாக முகத்தில் அறைகிறது.  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நாடகத்தையும் ஒன்றிய அரசு அரங்கேற்றியிருப்பது. இத்தனை துய ரங்களையும் யாரும் மறக்கவில்லை. தினம் தினம் நம் கண் முன்னே வெவ்வேறு வடிவில் பெண்கள் மீதான வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது, இத்தனை அவ லங்களையும் தாண்டி தான் இன்று பெண்கள் உயர்கல்வியை நோக்கி வருகின்றனர். 

பெண்கள்  வாழத் தகுதியற்ற நாடு

உலகில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்று பிபிசி ஆய்வறிக்கை சொல்கிறது. மேலும் 15 வயது முதல் 38 வயது வரையிலான வர்களில் உலகளாவிய தற்கொலையில் இந்தியப் பெண்கள் மட்டும் 38 சதவீதமாக உள்ளனர். குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட வர்களில் அதிகமான எண்ணிக்கையில் பெண் சிறுமிகள் தற்கொலை செய்துள்ளனர் என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்ப கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. 

உயர்கல்வியில் மாணவிகள்

ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம், 2020-21 ஆம் ஆண்டில் 27.3% ஆக உள்ளது. அதாவது, பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பாடத்தில் சேரும் மாண வர்கள் உள்ளிட்டு உயர்கல்வியில் சேரக் கூடிய 18-23 வயது வரம்பிற்குட்பட்ட 100 இளை ஞர்களில், 27 பேர் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை பெற்று வருகின்றனர். இந்த விகிதம், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 25.6%ஆக இருந்தது. பள்ளிக் கல்வி முடித்து, உயர்கல்வி பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 சதவிகிதம். ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2020-21ஆம் கல்வியாண்டிற்கான உயர் கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை வெளியான நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தி ருப்பது தெரிய வந்துள்ளது. 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 34,411 பேர் பிஹெச்டி படிப்பில் சேர்ந்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதில், 17,443 பேர் ஆண்கள், 16,968 பேர் பெண்கள். இவற்றில் எத் தனை மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அல்லது  படித்து முடித்து முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

கல்வி மீதான வன்முறை

ன்னிறுத்துவதும் அவர்களுக்கான கடமை களையும் உரிமைகளையும் முழக்கமாக முன்வைப்பதும் சமகாலத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதை கற்கிற காலத்தி லேயே பெண்கள் குறிப்பாக மாணவிகள் உணர்வது அவசியமும் ஆகும். குறிப்பாக கல்விச் சூழலில் பெருந்தொற்று காலத்திற் குப் பிறகு தேசம் முழுவதும் மாணவிகளின் இடைநிற்றல் மட்டும் 13 விழுக்காடு அதிகரித் துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை (NEP)-2020-ஐ அறிமுகப்படுத்தும் போது ஒன்றிய கல்வி அமைச்சகம் 2030-ஆம் ஆண்டுக்குள் GER (பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் சேரும் மாணவர்க ளின் விகிதம்) 50 விழுக்காடாக உயரும் எனக் கூறியது. ஆனால் தற்போதுள்ள 27 விழுக் காடு GER விகிதமும் பின்னடைவை சந்தித்து இன்னும் இருபது ஆண்டுகளானாலும் இந்த இலக்கை அடைய முடியாத அளவிற்கு பின்னு க்குச் சென்றுள்ளது. காரணம் பிற்போக் கான தேசிய கல்விக் கொள்கையும் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவான அரசின் கொள்கைத் திட்டமிடுதலுமேயாகும்.  இது ஒருபுறமிருக்க கடந்த பத்து ஆண்டுக ளில் தலைநகர் புதுதில்லியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதும் அவை முறையாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படாமல் ஆளுகின்ற ஒன்றிய அர சாங்கம் சாதிய, மதவாத, ஆணாதிக்கவாதி களுக்கு ஆதரவாக இருப்பதும் தொடர்ந்து வருகிறது என்பது வேதனையளிக்கிறது. உனா, தாத்ரி, கத்துவா தொடங்கி தற்போ தைய மணிப்பூர் வரை பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர வன்முறை நிகழ்வுகள் அவற்றி ற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. 

நீட், கியூட், தேசிய கல்விக்  கொள்கையை எதிர்த்திட

இந்திய அரசாங்கம் கைக் கொண்டுள்ள நீட், கியூட், தேசிய கல்விக் கொள்கை (NEP)2020 போன்ற இந்துத்துவ காவி கார்ப்பரேட் கல்விக் கொள்கைகள் பெண் குழந்தைகளை கல்வியி லிருந்து வெளியேற்றியுள்ளன. இந்திய அளவில் சாதிய, மதவாதச் சிந்தனைகள் அதி கரித்து வருவதால் பெண் குழந்தைகள் மீதான வன்முறையும் அதிகரித்துள்ளது. இவற்றை யெல்லாம் பொதுச்சமூகம் உணர்ந்து மாண வர்களோடு இணைந்து, மாணவிகளுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.  பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டரீதி யான நடவடிக்கையை தமிழக அரசு துரி தப்படுத்த வேண்டும். இவற்றை முன்வைத் தும் கல்வியை வணிகப்பொருளாக மாற்றுவ தற்கு எதிராகவும், தேசியக் கல்விக் கொள்கை, நீட்,  கியூட், இவற்றிற்கு எதிராகவும், இந்திய அர சியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திடவும், பெண் கல்வியை பாதுகாத்திடவும் கல்வி நிலையங்களில் நடக்கும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகவும் இந்திய மாணவர் சங்கம் நடத்தும் மாண விகள் மாநில சிறப்பு மாநாடு 2023 அக்டோ பர் 1இல் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. மாணவிகளின் கல்வி உரிமைகளை பாது காத்து உரிமைகளை நிலைநாட்டிட பல தீர்மா னங்களை வென்றெடுக்கும் வகையில் மாநாடு வெல்லட்டும்.