articles

img

கோவிட்: சீனாவில் நடப்பது என்ன? - அ.அன்வர் உசேன்

சீனாவில் இப்பொழுது பரவி வரும் கோவிட் தொற்று 9வது அலை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  1. இந்த அலையில் பரவும் வைரஸ் ஒமிக்ரான் வகையில் BF.7 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.  
  2. இதுவரை அதிகமாக பாதிப்புகளை உருவாக்கியது டெல்டா வகை வைரஸ். இது ஒரு வரிடமிருந்து 6 பேருக்கு பரவும் தன்மை கொண் டது. ஆனால் BF.7 வடிவம் 12 முதல் 18 பேருக்கு பரவும் தன்மை கொண்டது. பரவல் விகிதம் மற்றும் வேகம் ஆகியவற்றில் டெல்டாவைவிட மோசமான வைரஸ் சீனாவில் பரவிக் கொண்டுள்ளது.
  3. தொற்றுக்கு பின்னர் 7 முதல் 10 நாட்க ளுக்கு பிறகுதான் வைரஸ் செயலிழக்க வைக்க முடிகிறது. அது வரை தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் மற்றவர்களுக்கு தொற்றை உருவாக்கக் கூடாது. தொற்று அதிகமாவதால் மருத்துவ கட்ட மைப்புகள் சீர்குலையக் கூடாது. இதற்காகவே ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள். Fவைரசின் வடிவம் என்ன? அதன் புது பிறழ்ச்சி உள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் வரை ஊர டங்கு அல்லது மையப்படுத்தப்பட்ட தனிமைப் படுத்துதல் என்பதுதான் அறிவியல் முன் உள்ள ஒரே வழி.  
  4. இதனையே சீனாவில் அமலாக்குகின்றனர். இப்பொழுது வைரசின் வடிவம் குறித்து சில அறிவியல் உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
  5. சீனா முழுமைக்கும் ஒரே விதமான ஊரடங்கு மற்றும் தொற்று சோதனை வழிமுறைகள் கடை பிடிக்கக் கூடாது என வலியுறுத்தி 20 வழிகாட்டு தல்களை சீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.  
  6. அனைத்து வழிகாட்டுதல்களும் மூன்று கீழ்கண்ட முக்கிய கோட்பாடுகளை கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது:
  7.  எப்பொழுதும் மக்கள் மற்றும் அவர்தம் உயிர் பாதுகாப்பு முன்னுரிமை பெற வேண்டும். Y வெளியிலிருந்து பரவும் தொற்றையும் உள்ளூரில் பரவலும் தடுப்பது முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
  8.  “பூஜ்யம் தொற்று” எனும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். ஆனால் வறட்டுத்தனமான அணுகுமுறை இல்லாமல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டிருக்க வேண்டும். •வைரசுக்கு எதிரான போர் என்பது காலத்துடன் நடக்கும் ஓட்டப்பந்தயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  9. கோவிட் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப் படும் என அறிவிப்பு.
  10. ஊழியர்களுக்கு மருத்துவ செலவுகளில் மானியம் வழங்கப்படும்.  Fஊரடங்கு உள்ள பகுதிகளில் அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி வழங்கப்படும்.
  11. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட குவாங்க்டா ங்க் மாகாணத்தில் 8000 தொற்று நோய் நிபுணர்கள் மக்களின் சிகிச்சைக்காக  மற்ற பகுதிகளிலிருந்து திரட்டப்பட்டுள்ளனர்.
  12. Fஇதே மாகாணத்தில் 10 நாட்களில் 10,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 19 மருத்துவ மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  13. சோங்கிங்க் மாகாணத்தில்  ஊரடங்கில் உள்ள மக்களுக்கு உதவிட தொண்டர்களாக பணியாற்ற கட்சி ஊழியர்கள்/பொது மக்கள்  உட்பட 6,00,000 பேர் முன்வந்துள்ளனர். எந்த முதலா ளித்துவ தேசத்திலும் இப்படித் தொண்டர்கள் முன்வரவில்லை.
  14. சீனாவில் ஒரு நாளைக்கு சராசியாக 490 ஆர்ப்பாட்டங்கள், கவன ஈர்ப்பு இயக்கங்கள் அல்லது கோரிக்கை இயக்கங்கள் நடைபெறு கின்றன. ஒன்றிய அரசும் உள்ளூர் நிர்வாகங்க ளும் தலையிட்டு பிரச்சனைகளை தீர்க்கின்ற னர். அவையெல்லாம் முதலாளித்துவ ஊடகங்க ளுக்கு தெரிவதில்லை; அல்லது மறைக்கின்றனர்.
  15. கோவிட் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் அவசியம். சீனாவில் தடுப்பூசிகள் செலுத்திய விவரங்கள்: Gமொத்த தடுப்பூசிகள் செலுத்தியது- 344 கோடி. G135 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. G127 கோடி பேர் இரு தவணைகள் போட்டுள்ளனர்(90.28%) G80 கோடி பேர் பூஸ்டர் எனப்படும் 3 வது தவணை போட்டுள்ளனர். G60 வயதுக்கு மேல் உள்ள 23.9 கோடி பேரில்  22.8 கோடி பேர் இரு தவணையும் 18.1 கோடி பேர் மூன்று தவணைகளும் செலுத்தி யுள்ளனர். G80 வயதுக்கு மேல் உள்ள 2.74 கோடி பேரில் 2.36 கோடி பேர் இரு தவணைகளும் 1.45 கோடி பேர் மூன்று தவணைகளும் போட்டுள்ளனர்.  
  16. 9வது அலை 60 வயதுக்கு மேல் உள்ள வர்கள்/ புற்று நோய் போன்ற இணை நோய்  உள்ளவர்கள்/ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் கள் ஆகிய 3 பிரிவினரை கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
  17. சீனாவை போலவே அதிக நாட்கள் ஊரடங்கில் இருந்த இரு தேசங்கள் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும். ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரம் தொடர்ச்சியாக 262 நாட்கள் ஊரடங்கில் இருந்தது. 2 வருடங்கள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
  18. இரு தேசங்களிலும் ஊரடங்கு திடீரென விலக் கப்பட்ட பொழுது தொற்றும் மரணங்களும் அதிக மாயின. ஆஸ்திரேலியாவில் மரணங்கள் 17% அதிகமாயின.
  19. அப்பொழுதெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் இது குறித்து எதுவும் பேசவில்லை.  
  20. இதனை சீனாவுக்கும் அறிவியல் அடிப்ப டையில் பொருத்தினால், திடீரென ஊரடங்கு விலக்கப்பட்டால் சுமார் 18 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பர் என  ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
  21. அறிகுறியுடன் உள்ள பாதிப்புகளைவிட அறிகுறி இல்லாமல் கிட்டத்தட்ட 10 மடங்கு தொற்று உள்ளது என கண்டுபிடிக்கப்படுகிறது.
  22. பல முதலாளித்துவ தேசங்களை போல சீனாவும் அறிகுறி உள்ள பாதிப்புகளை மட்டும் வெளி உலகுக்கு தெரியப்படுத்திவிட்டு அமைதி காக்கலாம். ஆனால் சீன அரசாங்கம் அதனை செய்யவில்லை.
  23. மிகப்பரவலான இலவச பரிசோதனைகள் மூலம்தான் அறிகுறி இல்லாத தொற்றை கண்டு பிடிப்பது சாத்தியமாகிறது. இத்தகைய பரிசோத னைகள் குறித்தும் மக்களில் ஒரு சிறு பிரிவினரி டையே அதிருப்தி நிலவுகிறது. ஆனால் இது நியாயமற்றது.
  24. தொற்று கண்டறியப்படும் சில இடங்களில் சீன மக்களுக்கு தாங்களே பரிசோதனை செய்து கொள்ள இலவச கருவிகள் வழங்கப்படுகின்றன. தொற்று இருந்தால் அவர்கள் மருத்துவ ஊழி யர்களுக்கு தகவல்கள் தருகின்றனர்.
  25. அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைகள் காரணமாக அமெ ரிக்காவின் கூட்டாளி தேசங்களான ஆஸ்திரே லியா/ நியூசிலாந்து/ பிரிட்டன்/ பிரான்ஸ்/ ஜெர்மனி/ஜப்பான்/ மெக்சிகோ/ கனடா/இஸ்ரேல் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தமது குடிமக்கள் செல்வதை தவிர்க்குமாறு தகவல் அறிவித்துள்ள னர். இது ஏன் முதலாளித்துவ ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை?
  26. மருத்துவ கட்டமைப்பு மிக நவீனமாக உள்ள அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக ஃபுளு காய்ச்சலால் 62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்; கடுமையான பாதிப்புகளால் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட 52,000 பேரில் 2,900 பேர் உயிரி ழந்தனர். இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு என அமெரிக்க சுகாதாரத் துறையே அறிவித்துள்ளது. இந்த செய்தி ஏன் முதலாளித்துவ ஊடகங்களில் பேசப்பட வில்லை?
  27. 24.11.2022 முதல் 30.11.2022 வரை உள்ள  ஒரு வாரத்தில் கோவிட் தொற்று மற்றும் மரணங் கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் முன் வைக்கும் விவரங்கள்:
  28. முதலாளித்துவ தேசங்களில் ஊரடங்கு காலத்திssல் மக்களுக்கு முழுமையான பொருளா தார பாதுகாப்பு தர முடிவது இல்லை.மேலும் கார்ப்ப ரேட்டுகள் தமது சுய நலனுக்காக ஊரடங்கை விலக்க நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆனால் சீனா வில் ஊரடங்கு காலத்தில் முழுமையான பொரு ளாதார பாதுகாப்பு தரப்படுகிறது. கார்ப்பரேட்டு களின் நிர்ப்பந்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை.
;