articles

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மகத்தான வெற்றி!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மிக நீண்ட தாமதத்திற்கு பின் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் மாதத்தில் 27 மற்றும் 30 தேதி களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக் கான தேர்தல் 2021 அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதி களில் நடந்தது. இதுவரை நடைபெறாமல் இருந்த  நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தற்போது   நடந்து 21 மாநகராட்சிகளில் 1374 வார்டு உறுப்பினர் களும், 138 நகராட்சிகளில் 3843 வார்டு உறுப்பினர் களும், 489 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர் களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், மக்கள் பிரதிநிதி களால் நிர்வகிக்கப்பட வேண்டிய உள்ளாட்சிகளின் அதிகாரம் அனைத்தும்,  அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஆளும்கட்சிப் பிரமுகர்களால் தட்டிப் பறிக்கப்பட்டன.  நிர்வாகம் படிப்படியாக சிதைக்கப் பட்டது. தேர்தல்  இழுத்தடிக்கப்பட்டது. ஊழல் முடை நாற்றம் வீசியது, மக்கள் வெறுமனே பார்வையாளர் களாக ஆக்கப்பட்டார்கள். இப்படியான சூழலில், தற் போது உள்ளாட்சிகளுக்கு தேர்தல்கள் நடந்து, பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே ஜனநாயக ரீதி யான முன்னேற்றம் ஆகும். குறிப்பாக, மேயர்களாக வும், நகர்மன்றம் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் களாகவும் சரிபாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பெண் களும், பட்டியலின/பழங்குடியினரும் அதிகாரம் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மகத்தான வெற்றி

 கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைப் போலவே இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஊழல் அதிமுகவையும், மதவெறி பாஜகவையும் முறியடித்திட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இந்த அணிக்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சி களில் 1,100 வார்டுகளில் திமுக அணி வெற்றிபெற்றுள் ளது. அதிமுக  164 வார்டுகளை மட்டும் பெற்று படு தோல்வியடைந்துள்ளது. இதே போலவே நகராட்சி களில் திமுக அணி 2,658 வார்டுகளில் வெற்றிபெற்றுள் ளது. அதிமுக 638 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பேரூராட்சிகளில் திமுக அணி 4993 இடங்களை கைப் பற்றியுள்ள நிலையில் அதிமுக  1,206 இடங்களை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு உடன்பாடு கண்டும், உடன்பாடு ஏற்படாத இடங்களில் தனியாகவும் தேர்த லை கட்சி அணிகள் சந்தித்தன. மாநகராட்சிகளில் 66  வார்டுகளிலும், நகராட்சிகளில் 169 வார்டுகளிலும் பேரூ ராட்சிகளில் 388 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் 24 மாநகராட்சி வார்டு களிலும், 41 நகராட்சி வார்டுகளிலும், 101 பேரூராட்சி  வார்டுகளிலும் வெற்றியடைந்துள்ளது. சில இடங் களில், உடன்பாடு கண்டபோதும் தோழமைக் கட்சி களைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாக கள மிறங்கியது கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதித்துள் ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட்டது. கன்னியா குமரியில் மட்டும் 15 நகராட்சி வார்டுகளிலும், 42 பேரூ ராட்சி வார்டுகளிலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக் குரியதாகும்.

அதிமுக வாக்கு சதவீதம் சரிவு

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, இதுவரை காணாத படுதோல்வியை சந்தித்துள்ளது. அதன் வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது. தேர்தல் களத்தில், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பாஜகவுடன் கூட்டணி இல்லாத போதிலும் அதன் குரலாகவே மாறி பிரச்சாரம் செய் தார்கள். அந்த பிரச்சாரங்களை மக்கள் முற்றாக  நிராகரித்திருக்கிறார்கள். சென்ற சட்டமன்றத் தேர்த லில் அதிமுகவுக்கு அதிகமான பிரதிநிதிகளைக் கொடுத்த மேற்கு மண்டலத்திலும், மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள். மேற்கு மண்டலத்தில் ஒசூர் தவிர மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும் ஒற்றை இலக் கத்திலேயே வார்டுகளைப் பெற்றுள்ளது அதிமுக. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில்  96 இல்  திமுக அணி வெற்றிபெற்றுள்ளது.  ‘கொங்கு நாடு’  பிரிவினை முழக்கத்தை முன்னெடுத்த பாஜகவின் கூச்சல் இப்போது மெளனமாகிவிட்டது. கோவை மாநக ரின் 86 வார்டுகளில் பாஜகவின் வேட்பாளார்கள் டெபா சிட் கூட வாங்கவில்லை.

பாமகவுக்கு படுதோல்வி

மத்திய மண்டலத்தில் உள்ள 4 மாநகராட்சிகளை யும், 23 நகராட்சிகள் மற்றும் 71 பேரூராட்சிகளையும் திமுக அணியே கைப்பற்றியுள்ளது. வடக்கு மண்ட லத்தில் அதிமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் படு தோல்வியை சந்தித்துள்ளன. பாமக போட்டியிட்ட 1373  மாநகராட்சி வார்டுகளில் 5 இல் மட்டுமே வெற்றி பெற்றது. 3842 நகராட்சி வார்டுகளில் 48 இல் வெற்றியும், 7,603 பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட்டு 73இல் வெற்றியும் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நக ராட்சி வார்டுகள் ஒன்றில் கூட பாமக வெற்றியடைய வில்லை. தென் மாவட்டங்களிலும் திமுக அணி பெரும்  வெற்றியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு முழுவதுமே மக்கள் அதிமுக - பாஜக - பாமக உள்ளிட்ட சக்திகளை நிரா கரித்துள்ளனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த பாஜகவுக்கும், ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்திய அவர்களின் அதி கார மிரட்டலுக்கும் மக்கள் பலமான அடி கொடுத்துள் ளார்கள். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பூஜ்ஜியம் ஓட்டு பாஜக

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணா மலை விநோதமான முறையில் ஒரு பேட்டி கொடுத் திருக்கிறார். அதில் பாஜக வளர்ந்துவிட்டதாகவும், பெரிய கட்சியாகிவிட்டதாகவும் பூச்சாண்டிகாட்டியுள் ளார். பாஜக போட்டியிட்ட 5594 வார்டுகளில் 305 இல்  மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அதிலும் 200 வார்டு கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. 4504 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக் கிறார்கள். ஒற்றை ஓட்டு பெற்று தோல்வியுற்ற தனது சாதனையை தானே முறியடித்து பூஜ்ஜியம் ஓட்டு பெற்ற புதிய சாதனையை பாஜக படைத்துள்ளது. படு தோல்விக்கு உள்ளாகியிருக்கும் பாஜக தலைவர்,  தலை குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக ஊடகங்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தின் சில உள்ளாட்சிப் பகுதிகளில் மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படாததால் ஏற்பட்ட வாக்கு பிரிவினைதான் பாஜக வுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளன. அங்கேயும் ஒருங் கிணைந்து செயல்பட முடிந்திருந்தால் மதவெறிக் கூட்டத்தை பின்னுக்குத்தள்ள முடிந்திருக்கும். இருப்பினும், பாஜக வெற்றிபெற்றுள்ள சில பகுதி களிலும் கூட, மக்களிடையே பிரிவினையை விதைக்க முயற்சிப்பார்கள் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். சென்னை பெருநகரத்தில் பாஜக வேட்பா ளர்களில் ஒரே ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த  ஒரு கவுன்சிலரும், காந்தியைப் படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவுக்கு ஆதரவாக மிக வெளிப் படையாக பேசி வரும் நபர். இப்படியான நபர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதை நாம் எச்சரிக்கை யோடு  அணுக வேண்டும். பாஜகவை எதிர்ப்பதில் முனைப்புடன் தொடர்ந்து இயங்குவது அவசியம்.

உள்ளாட்சிகள் மீது நம்பிக்கை

இந்தத் தேர்தலில், பதிவான வாக்குப் பதிவு சதவீத மும், அதிகரித்த பணப்புழக்கமும் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகள் ஆகும். சென்னை பெருநகரில் 50 சதவீதம் மக்கள் கூட வாக் களிக்க வரவில்லை. மாநில அளவில் 60சதவீத வாக்குப் பதிவு நடந்திருக்கிறது எனினும் மாநகராட்சிகளில் இந்த  சதவீதம் 52 ஆகவும், நகராட்சிகளில் 68 ஆகவும், பேரூ ராட்சிகளில் சுமார் 75 ஆகவும் இருக்கிறது. நகர்ப்புறத் தில் குடிநீர், வடிகால், கழிவு மேலாண்மை என அடிப் படை வசதிகளை ஏற்படுத்தித் தருகிற உள்ளாட்சி மன்றங்களை தேர்ந்தெடுப்பதில் மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பது, ஜனநாயகக் கடமையை தவற விடுவதாகவே அமைந்திடும். தமிழ்நாட்டில், தேர்தல் பணமயமாகி வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். குறிப்பாக, நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் அபரிமிதமான பணப்பு ழக்கம் இருந்துள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களை ஊழல் முறைகேடுகளில் இருந்து காப்பாற்றுவது பெரும் சவாலாகும்.

கூடுதல் அதிகாரங்கள் தேவை

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளா ட்சியில் நல்லாட்சியை உறுதி செய்யும் விதத்தில் இயங்கினால்தான், மக்களின் நம்பிக்கையை வென் றெடுக்கவும், உறுதிப்படுத்திடவும் முடியும். அதற்கு உள்ளாட்சிகளை வலிமைப்படுத்துவது அவசியம். கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி யின் ஆட்சி பல்வேறு முன்னுதாரணங்களை உருவாக்கி யுள்ளது. அங்கே உள்ளாட்சிகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படுகிறது. நிர்வாக அதிகாரங்களும் பகிரப் பட்டுள்ளன. மாநில அரசின் பல வளர்ச்சித்திட்டங் களை உள்ளாட்சிகளின் வழியாகவே செயல்படுத்து கிறார்கள். கிராம சபைகளின் மூலம் அரசுத்திட்டங் களுக்கான பயனாளர் தேர்வு நடக்கிறது. வீடுகளுக்கே சென்று அரசின் திட்டங்களைச் சேர்க்கும் முன்னு தாரணமான பல முயற்சிகளுக்கு உள்ளாட்சிகள்தான் முகமாக இருக்கின்றன. அதே போன்ற முயற்சிகளை தமிழ்நாட்டிலும் நாம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பாலும் அதிகாரிகளின் ராஜ்ஜியமாகவே உள்ளன. இந்தச் சூழலை மாற்றியமைப்பது முக்கியம். அதற்காக கூடுதலான நிதி ஒதுக்குவதுடன், அதிகாரங்களை பகிர்ந்தளிக்கத் தொடங்க வேண்டும். நகர்ப்புற உள்ளா ட்சிகளிலும் ’மக்கள்  சபைகளை’ உருவாக்கிடவேண் டும். சென்னை பெருநகருக்கும், மாநகராட்சிகளுக்கும் தனித்தனியாக சட்டங்கள், பேரூராட்சிகளுக்கும், நக ராட்சிகளுக்கும் தனித்தனியாக சட்டங்கள் என்றுள்ள இப்போதைய நிலைமையை மாற்றி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குமான ஒருங்கிணைந்த சட்டம் கொண்டுவர வேண்டும். அதே போல நகர்ப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களையும், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளையும் உள்ளாட்சிகளின் வழி செயல்படுத்தவேண்டும்.

நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென சிபிஐ(எம்) நீண்ட நாட்களாக கோரி வந்துள்ளது. திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை யில் ரூ.100 கோடி ஒதுக்கி பரிசோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இத்திட்டத்தினை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சி கள், பேரூராட்சிகளிலும் அமல்படுத்திட வேண்டும். இந்தத் தேர்தலில் ஒரு திருநங்கையும், 50 சதவீத  பெண் பிரதிநிதிகள், மற்றும் பட்டியல், பழங்குடி பிரதிநிதி கள் தேர்வாகியுள்ளார்கள். அவர்கள் சுயமாக முடி வெடுக்கவும், உள்ளூரின் தேவைகளை முன்னிறுத்தி செயல்படவும் ஏதுவான சூழலை ஏற்படுத்துவது மிக முக்கியமான கடமையாக முன்வந்துள்ளது. ஆளும் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்குமே இதில் கடமை உண்டு. மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியாகவும், தனியாக வும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளை வென்றுள்  ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் முன்பு  போல் இப்போதும் முன்னணி மக்கள் ஊழியர்களாக வும், போராளிகளாகவும் நேர்மையுடன் செயல்படு வார்கள். உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் குரலாக ஒலிப்பதுடன், அதிகாரப் பரவலை உறுதி செய்தி டும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து முன் னெடுப்பார்கள். மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் வகுப்புவாத சக்திகளை தொடர்ந்து எதிர்ப்பதுடன், உள்ளாட்சி நிர்வாகங்கள் வெளிப்படைத்தன்மையோடும், அதிக அதிகாரங்களோடு இயங்குவதை உறுதி செய்யும் விதத்தில் தங்கள் பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும்.