articles

img

உதய்பூர் கொலை சம்பவம்: கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் டீஸ்டா செதல்வாத், ஜூபேர், ஸ்ரீகுமார் விடுவிக்கப்பட வேண்டும்

இப்போது நடைபெற்றுள்ள உச்சநீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வாயத்தின் தீர்ப்பு, இதற்கு முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தையும் உதாசீனம் செய்திருக்கிறது, நிராகரித்திருக்கிறது. எனவே இது ஒரு மோசமான நீதி தவறுதலாகும்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிகவும் பயங்கரமானவிதத்தில் நடைபெற்றுள்ள கொலைச் சம்பவம் அனைத்துத்தரப்பினராலும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் இதில் சம்பந்தப்பட்டவர்களைச் சுற்றி வளைத்துள்ள அதே சமயத்தில், குற்ற மிழைத்த கயவர்கள் கடும் தண்டனையைப் பெற்றிட வேண்டும். நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை முதலானவை வெறித்தனமான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பது சமூகத்தையே மனிதாபிமானமற்றதாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இத்தகைய வெறுப்புச் சுருள் முடிந்திட வேண்டும். இந்த வழக்கை ஒன்றிய அரசாங்கம் தேசியக் குற்றப் புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்ப டைத்திருப்பது வெறுப்பு மற்றும் வன் முறைத் தீ மேலும் கொழுந்துவிட்டெரிய இட்டுச் செல்லக்கூடாது.

அம்பலப்படுத்துதல் கண்டு அஞ்சும் மோடி அரசு

மதவெறித் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்யக்கூடிய விதத்தில் சமூக ஊட கங்களில் பொய்ச் செய்திகள் பதிவேற்றம் செய்யப்படுவது, விஷம் தோய்ந்த வெறுப்பு  மற்றும் வன்முறைச் சுருள் அதிகரிப்ப தற்குப் பெருமளவில் பங்களிக்கிறது. இத்த கையப் பொய்ச் செய்திகளை வெளிச்சத்தி ற்குக் கொண்டுவருவதன் மூலமும், உண்மைகளை மக்கள் முன் வைப்பதன் மூலமும்தான் இத்தகைய மதவெறி வெறுப்புத் தீயைத் தணித்திட முடியும்.  இந்தத் திசைவழியில் அகமதாபாத்தில் செயல்பட்டுவந்த ஆல்ட் நியூஸ் (Alt News) இணைய தளம் மதிப்பிடற்கரிய பணியைச் செய்திருக்கிறது. ஆனால் அதன் இணை நிறுவனர், முகமது ஜுபேர் 2018ஆம் ஆண்டில் பதிவேற்றம் செய்த  ஒரு ட்விட்டர் பதிவுக்காக இந்தியத் தண்ட னைச் சட்டம் 153-ஏ (மதப்பிரிவினருக்கி டையே பகைமையை வளர்த்ததாகக் கூறும் குற்றப்பிரிவு) பிரிவின்கீழ் கைது செய்யப் பட்டிருக்கிறார்.  தவறான தகவல்களை  (disinformation) அளித்துவரும் பொய்ச் செய்திகள் எந்திரம் (FAKE NEWS MA CHINE) தோலுரித்துக்காட்டப்படும்போது மோடி அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பற்ற தாக உணர்வதும், பயப்படுவதும் தெளி வாகவே தெரிகிறது.  ஜுபேர் கைது செய்யப்படுவதற்கு எவ்விதமான அடிப்படையும்  இல்லை. அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

மோடி - கூட்டறிக்கையின் கொடூரமான போலித்தனம்

ஜுபேர் கைது செய்யப்படும் அதே சமயத்தில், பிரதமர் மோடி ஜி.8 உச்சி மாநாட்டில் ஓர் அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அங்கே வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டி ருக்கிறார். அதில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? கையெழுத்திட்டுள்ள அனை வரும் “கருத்துக் கூறும் சுதந்திரத்தைப் பொ றுத்தவரையில், இணையம் வழியாகவும், இதர விதங்களிலும் ஒருவரின் கருத்துக் கூறும் சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்றும், ஒரு சுதந்திரமான மற்றும் சுயேச் சையான ஊடக செயல்பாட்டையும் பாது காப்போம்” என்றும் தீர்மானித்திருக்கி றார்கள். இதை விடக் கொடூரமான போலித் தனம் வேறெதுவும் இருக்க முடியாது. டீஸ்டா செதல்வாத், ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் (இவர் வேறொரு வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்து வருகிறார்) ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொ டர்ந்து ஜுபேர் கைது நடந்திருக்கிறது.  டீஸ்டா செதல்வாத், 2002 குஜராத் வன் முறை வெறியாட்டங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கோரி விடாப்பிடியா கத்தொடர்ந்து போராடி வருகிறார். விடா முயற்சியுடன் இவர் செயல்பட்டதன் காரண மாகத்தான் இந்தியாவில் மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற 68 வழக்குகளில் 120 கயவர்க ளுக்குத் தண்டனைகளை இவரால் பெற்றுத் தர முடிந்திருக்கிறது. இந்தியாவில் நடை பெற்ற மதவெறிக் கலவரங்கள் தொடர்பா கத் தண்டனைகள் பெற்றிருப்பதில் இது ஒரு மகத்தான சாதனையாகும்.

கேள்வி கேட்டு முன் வருபவர்களை மிரட்டும் தெளிவான சமிக்ஞை

டீஸ்டாவின் கைது, மக்களுக்கு அர சமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தி யுள்ள ஜனநாயக உரிமைகள் மீது ஏவப் பட்டுள்ள வெட்கக்கேடான தாக்குதலா கும். இது, மதவெறி வன்முறை வெறியாட் டங்கள் யார் ஆட்சியில் மேற்கொள்ளப் பட்டதோ அந்த ஆட்சியின் பங்களிப்பைக் கேள்வி கேட்பதற்கு எவரும் முன்வரக் கூடாது என்று மக்களை மிரட்டுகிற தெளி வான ஒரு சமிக்ஞையை அனுப்பியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், உச்சநீதிமன்றமே டீஸ்டாவின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் காவல்துறையினருக்கு கட்டளை பிறப்பித் திருப்பதாகும். என்னே முரண்தகை! உச்சநீதிமன்றத்தின் மூவரடங்கிய விடு முறை அமர்வாயம் (vacation bench), குஜ ராத் மதவெறி வன்முறை வெறியாட்டங்க ளில் மிகக் கொடூரமான முறையில் கொல் லப்பட்டகாங்கிரஸ் கட்சியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈசான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா ஜாஃப்ரிக் காக உச்சநீதிமன்றத்தில்  டீஸ்டா நடத்தி  வந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கி றது. நீதிமன்றம், குஜராத் மாநிலத்தில் வன் முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோது அப்போது அங்கே முதலமைச்சராக இருந்த மோடியின் பங்களிப்பு குறித்து விசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் எவ்விதத் தவறு மில்லை என்று முடிவு செய்திருக்கிறது.

எஸ்ஐடி அறிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டதா?

“வெறுமனே மாநில நிர்வாகத்தின் தோல்வியோ அல்லது செயலற்ற தன்மை யோ சதி நடந்ததாக ஊகிப்பதற்கான அடிப் படை கிடையாது,” என்று கூறி மோடியை குற்றப் பிரிவிலிருந்து முற்றிலுமாக விடு வித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பில் மிகவும் மோசமான அம்சம் என்னவென்றால்,  “உள்நோக்கங்களுடன் உள்ளவர்கள் பிரச்சனைகளை எப்போதும் கொந்த ளிக்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள்” (“people with ulterior motives had sought to keep the pot boiling”) என்று கூறி, இந்தத் தீர்ப்பானது நீதி கோரி வழக்கு தொடுத்த மனுதாரரை, நேரடியாகவே,  குற்றஞ்சாட்டப்பட்டவராக மாற்றியிருப்பதாகும். மேலும், அந்தத் தீர்ப்பானது, “இவ்வாறு நீதிமன்ற நடை முறையைத் துஷ்பிரயோகம் மேற்கொண்ட தற்காக, சம்பந்தப்பட்ட அனைவரும் குற்ற வாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு, சட்டத்தின் படி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டி யது தேவை” என்று கூறி “கைது செய்யக்” கட்டளையிட்டிருக்கிறது. ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைக்கு எதிராக எந்தவொரு நீதி மன்றத்திலாவது மேல் முறையீடு செய்தால்  அது எப்படி “நீதிமன்ற நடைமுறையைத் துஷ்பிரயோகம் செய்ததாகக்” கொள்ள முடியும்?  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைகள் என்பவை இனி வருங் காலங்களில் நீதித்துறையின் மேல் முறை யீட்டு வரையறைக்குள் வராதா?

மனித உரிமை ஆணையத்தின் கடும் எச்சரிக்கை

இப்படி குஜராத் சிறப்புப் புலனாய் வுக்குழுவினை சுத்தவாளிகளாக அறிவித்தி ருப்பது (clean chit given) 2002 மே மாதத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்ன கூறியிருந்ததோ அதற்கும், 2004 ஏப்ரலில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன கூறியி ருந்ததோ அதற்கும், நரோடா பாட்டியா  மீதான குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டிருந்ததோ அதற்கும் மற்றும் மோடியை சிறப்புப் புல னாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டதி லிருந்த அபத்தங்களுக்கும் முரண்படு கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், “புலனாய்வு அமைப்புகள் புலன் விசார ணைகளை மேற்கொண்ட விதத்தைப் பார்க்கும்போது அவை விரிவான அளவில் நேர்மையற்றமுறையில் புலன் விசாரணை களை நடத்தி இருப்பதைப் பார்க்க முடி கிறது,…” என்று கருத்து கூறியிருக்கிறது. மேலும், அது, “புலன்விசாரணையை அரசி யல் செல்வாக்கிற்கு ஆட்படாமல், சுதந்திர மானமுறையில் மிகவும் நேர்மையுடன் மேற்கொள்ளாவிட்டால், மிகப்பெரிய அள விற்கு ஆபத்து ஏற்படும் என்றும், மனச் சாட்சியற்றமுறையில் நீதி தவறுதலும் ஏற்படும்” என்றும் கூறியிருக்கிறது. 

நவீன நீரோக்கள் என உச்சநீதிமன்றம் விமர்சனம் 

உச்சநீதிமன்றம் 2004 தீர்ப்புரையில் கடும் வார்த்தைகளைப் பிரயோகித்தி ருந்தது. “வழக்கில் தாக்கல்செய்யப் பட்டுள்ள பதிவுருக்களை மேலோட்டமாகப் பார்க்கும்போதே, நீதிபரிபாலன அமைப்பு முறை விளையாட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், சூழ்ச்சித் தந்தி ரங்களால் சிதைக்கப்பட்டிருப்பதாகவு மான உணர்வினை ஒருவர் பெறுகிறார்,” என்று கடும் வார்த்தைகளில் தாக்குதல் தொடுத்திருந்தது. “பெஸ்ட் பேக்கரியில் அப்பாவி குழந்தைகளும், ஆதரவற்ற பெண்களும் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இன்றைய நவீன நீரோக்கள் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அநேக மாக இந்தக் குற்றங்களைச் செய்த கயவர்க ளை எப்படிப் பாதுகாப்பது என்று ஆலோசி த்துக் கொண்டிருந்திருக்கலாம்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

எஸ்ஐடி விசாரணையை கேள்விக்குட்படுத்திய குஜராத் நீதிமன்றம்

குஜராத் உயர்நீதிமன்றம், நரோடா பாட்டியா வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை நேரடியாகவே கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. அதில்,  “காவல்துறையினராலும், அதேபோன்றே சிறப்புப் புலனாய்வுக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகள் மிகவும் அபத்தமான முறையில் மேற் கொள்ளப்பட்டிருந்ததும், அதேபோன்றே நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கை அபத்தமானமுறையில் நடத்திய விதமும், இவர்கள் அனைவரின் நோக்கங்களும் என்ன என்பதைப் பக்கம் பக்கமாகப் பேசு கின்றன,” என்று கூறியிருந்தது. மோடி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் சாட்சியம் கூறுகையில், குல்பர்க் சொசைட்டி மீது ஆயுதந்தாங்கிய குண்டர் கள் தாக்குதல் தொடுக்கப் போகிறார்கள் எனத் தனக்கு எந்தத் தகவலும் வர வில்லை என்று மறுத்திருப்பதுடன், அன்றி ரவு நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு கூட்டத் தின்போது மட்டுமே குல்பர்க் சொசைட்டி தாக்குதல் பற்றியும் அதில் ஈசான் ஜாஃப்ரி கொல்லப்பட்டது குறித்தும் தான் கேள்விப் பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மோடியுடன் மோத விரும்பாத எஸ்ஐடி

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் சாட்சியமளித்த சாட்சிகள், ஜாஃப்ரி முதல மைச்சருக்கு தொலைபேசியில் உதவி கோ ரியதாகவும், ஆனால் மோடி அவர் கூறி யதைக் கேட்காததுடன், உண்மையில், அவ ரைத் திட்டியதாகவும், கூறியிருக்கிறார்கள். இருப்பினும், சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த உறுதி வாக்குமூலங்களின் அடிப்ப டையில் மோடியுடன் மோத விரும்ப வில்லை. இப்போது நடைபெற்றுள்ள உச்சநீதி மன்றத்தின் விடுமுறைகால அமர்வா யத்தின் தீர்ப்பு, இதற்கு முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தையும் உதாசீனம் செய்திருக்கிறது, நிராகரித்தி ருக்கிறது. எனவே இது ஒரு மோசமான நீதி தவறுதலாகும். டீஸ்டா மற்றும் ஸ்ரீகுமார் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அரசமைப்புச்சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள சுயேச்சையான நிறுவனங்கள் மற்றும் அதிகாரக்குழுமங்களின் புனிதம் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும், வலுப்படுத்தப்பட வேண்டும்.  நீதி வழங்கப்படுவதில் சிதைவு இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

ஜூன் 29, 2022, 
தமிழில்: ச.வீரமணி

;