articles

img

யானை அழகாகத்தான் இருக்கிறது…

யானை அழகாகத்தான் இருக்கிறது
அதன் காது இன்னும்
கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமோ ?

யானை அழகாகத்தான் இருக்கிறது
ஆனாலும் அதன் கால்கள் இன்னும்
உயரமாக இருந்திருக்கலாமோ?

யானை அழகாகத்தான் இருக்கிறது
ஆயினும் அதன் கொம்புகள் இன்னும்
கூர்மையாக இருந்திருக்கலாமோ?

யானை அழகாகத்தான் இருக்கிறது
அதன் தும்பிக்கை இன்னும்
பெரிதாக இருந்திருக்கலாமோ?

யானை வலுவாகத்தான் இருக்கிறது
ஆனால் அது புலால் உண்ணுமானால்
இன்னும் வலுவாய் இருந்திருக்குமோ ?

இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு
அவசரத்துக்கு ஓடி தப்பிக்க முடியுமோ ?
பூனைபோலவே இருந்திருக்கலாமோ ?

யானை பிளிறியபடியே சொன்னது!
“சரிதாம்! மனிதா! உனக்கு கொஞ்சம்
மூளையும் இதயமும் இருந்திருக்கலாமோ?”
சு.பொ.அகத்தியலிங்கம்

;