articles

img

ஒற்றுமைக்கான தேடலில் தெற்காசிய நாடுகள் - பேரா.பார்த்தா எஸ்.கோஷ்

தெற்காசிய மண்டலத்தில் இந்தியா, பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான் ,பூட்டான் நேபா ளம், வங்காளதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய எட்டு நாடுகள் உள்ளன.தெற்காசிய மண்டலத்தின் நிகழ்ச்சி போக்குகளை தீர்மானிக்கும் இடத்தில் இம் மண்டலத்தில் முக்கால் பங்கு வகிக்கும்   இந்தியா இல்லை. தெற்காசியமண்டலத்தின் வரலாற்று நிகழ்வுப் போக்குகளை  பாகிஸ்தானுடன் இணைந்து வெளிநாடுகள்தான் தீர்மானித்து வந்துள்ளன. இந்தியா வெறுமனே எதிர்வினையாற்றும் சக்தியாகவே நீடிக் கிறது.

வரலாற்று ரீதியான இந்தோ மையம்

வரலாற்று ரீதியாக தெற்கு ஆசியா என்பது கிடை யாது. தெற்கு ஆசியா என்பது கெடுபிடிப் போரின் விளை வாக ஏற்பட்ட கருத்தாகும். இம் மண்டலத்தில் நடை பெற்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இந்தியாவை மையப்படுத்தியே குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. கி.மு. 326 இல் அலெக்சாண்டர் தட்சசீலத்தின் மீது (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இணைந்த பகுதி) படையெடுத்து வந்தபோது இந்தியாவின் மீது படையெடுத்துள்ளதாகவே அலெக்சாண்டர் நினைத் தான்.கி.பி.52 இல் புனித துறவி தாமஸ் மூலம் கிறிஸ்த வம்  தென் கோடி கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போதுஅவர் இந்தியாவில் கிறிஸ்தவம் அறிமுகப் படுத்தப்பட்டதாகவே நினைத்தார்.  கொலம்பஸ், வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைத் தேடினர். காலனித்துவ காலத்தில்” இந்திய இயல்”  என்ற தனித் துறையே செழித்து வளர்ந் தது. இந்த மண்டலத்தில் எப்போதுமே இந்தியாவை மையப்படுத்தியே புவியியல் அடையாளங்கள் குறிப்பி டப்பட்டன. இதனால்தான், இந்தியப் பெருங்கடல், மேற் கிந்திய தீவுகள், கிழக்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தோ -சீனா ஆகிய  பெயர்களை பெற்றுள்ளோம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நமது மண்டல பூகோளப் பரப்பை எவ்வாறு வரையறுப்பது என்று அமெரிக்காவில் தீவிரமான சச்சரவு நடந்தது. இந்தியாவுக்காக பணியாற்றிய அறிஞர்கள் தெற்காசியா  பற்றிய எந்தவொரு வரையறுப்பும் இந்தோ என்பதை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் பனிப்போரின் தேவைகளால், பாகிஸ்தானுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் வல்லுநர்கள் முடிவெடுத்தனர். தெற்காசிய மண்டலத்தில்  சோசலிச சோவியத் ஒன்றியத்தின் அதிகரித்துவரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் நம்பகமான நீண்டகால கூட்டாளியாக இருக்கும் என்று அமெரிக்கா எதிர் பார்த்தது. ஆசியக் கண்டத்தின் மற்ற பகுதிகளில் கம் யூனிசம் பரவுவதை தடுத்தது போன்று, தெற்காசிய நாடு களிலும் கம்யூனிசம் பரவுவதை தடுப்பதற்கு பாகிஸ்தா னும், தெற்காசிய நாடுகள் கூட்டணியும் பயன்படும்  என்று அமெரிக்கா கணக்குப் போட்டது.

இந்தியா- பாகிஸ்தான் ராணுவ ரீதியிலான பிளவு

பனிப்போர்க் காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிளவு முழுமையானது. இரண்டு நாடுக ளுக்கும் இடையே மூன்று பெரிய போர்கள்(1947, 1965,1971) மூண்டன. 1950 களில், அமெரிக்காவின் சோவி யத் எதிர்ப்புக் கொள்கைக்கு பாகிஸ்தான் தீவிரமாக ஒத்துழைத்தது. ஆனால், 1960 களில் சீன - சோவியத் பிளவு துவங்கியதுமே பாகிஸ்தான் சீனாவை நெருங்க ஆரம்பித்தது.1970 களின் தொடக்கத்தில் பாகிஸ்தான் நாடு சீனா - அமெரிக்கா உறவுக்கு  முக்கியமான பங் காற்றியது. இந்தக் காலத்தில் எல்லாம் இந்தியா அணி சேரா நாடுகள் இயக்கத்தில் இருந்தது. கூட்டுச் சேராக் கொள்கையை அமெரிக்கா மட்டுமல்ல; பாகிஸ்தா னும் கேலி செய்தது. அன்றைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜபருல்லாகான் அணிசேரா இயக்கத்தில் உள்ள நாடுகளை “பூஜ்யத்துடன் எத்தனை பூஜ்யங்கள் சேர்த்தாலும் பூஜ்யம் தான் கிடைக்கும்” என்றார். இந்திய- சோவியத் உறவுகள் பலமடைந்ததும் இந்தியா பாகிஸ்தான்  பிளவுகள் அதிகமானது. வங்காளதேசம் உருவாக இந்திய- சோவியத் கூட்டணி முக்கியப் பங் காற்றியது. வங்காளதேசம் உருவானதற்கு பின்னர் பாக்- சீன உறவுகள் மேலும் பலம் அடைந்தன.

பனிப் போர் முடிந்த பின்னரும் கூட, இந்திய- பாக் உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஜம்மு- காஷ்மீரில் உள்ள உறைபனி மூடிய கார்கில் குன்றுக ளுக்காக 1999 இல் இரண்டு நாடுகளும் மீண்டும் மோதிக் கொண்டன. ஓயாமல் சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகளுமே 1998 இல் அணு ஆயுத சோதனை நடத்தியதன் மூலம் அணுஆயுத யுத்த அபாயமும் சேர்ந்து கொண்டது. 1998 காலகட்டத்தில் உலக நாடுகள் இந்தியா-பாகிஸ்தானை முன்னிட்டு மிகவும் பதற்றத்தில் இருந்தன. அதன்பின்னர் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் (அக்டோபர் 1, 2001) பாகிஸ்தானும் உடந்தையாகச் செயல்பட்டதாக இந்தியா கூறியது. 2008நவ.26, இல் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மும்பையின் மீது மிருகத்தனமான, கொடூரத் தாக்குதல் தொடுத்தனர். நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலியானார்கள். பாகிஸ்தானின் தீவிர வாத சூழ்ச்சிகளை பற்றி உலகின் கவனத்தை ஈர்ப்பதற் காக முதலில் 2001லும் ,பின்னர் 2008 லும் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா படைகளை குவித்தது. இதனால் போரின் விளிம்பில் இரண்டு நாடுகளும் நின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் துப்பாக்கிச் சூடுகளும், குண்டு வெடிப்புகளும் அன்றாட நிகழ்வாகிப் போயின. ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிடுவதாகவும், பலுச்சிஸ்தானில் இந்தியா தலையிடுவதாகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஜன.2016 இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். 2019 பிப்.14 இல் பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த அகமது தர்(20) மூலம் புல்வாமாவில் வெடிகுண்டு நிரப்பிய வாகனங்கள் மூலம் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.2019 பிப்.26 இல்‌ இந்திய விமா னப்படை பாலக்கோட்டில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்- இ-முகமது அமைப்பினர் மீது தாக்குதல் தொடுத்தது.

சீனக் காரணிகள்

சீனாவைக் குறிப்பிடாமல் ,தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான யதார்த்தமான உறவு நிலைமைகளை  புரிந்துகொள்ள முடியாது. தெற்காசிய மண்டல நாடு களின் கூட்டமைப்பான “சார்க்” அமைப்பில் உள்ள 8 நாடுகளில் ஆப்கானிஸ்தான், பூட்டான், இந்தியா, நேபா ளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளுடன் சீனா தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. சீனா உலகின் இரண்டாவது பொருளாதார வல்லமை மிக்க நாடாகும். ஆனால், இதற்கு முரணாக ,உலக பூகோள மண்டலங்களில் மிகவும் ஏழ்மையான மண்டலமாக நமது தெற்காசிய மண்டலமே உள்ளது. சீனாவின் பொருளாதார பலம் தெற்காசியாவில்  உள்ள சிறிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.அவை சீனாவிடம் குறிப்பிடத்தக்க அளவில் பெருந் திட்டங்களுக்கு நிதி உதவி பெறுகின்றன. தெற்காசி யாவில் பூகோள ரீதியாக மண்டல ஆதிக்க நிலையில் தானே உள்ளதாக இந்தியா கருதுகிறது.இதனால், இந்தியா-சீனா இடையே பரஸ்பர சந்தேகம் எழு கிறது. சீனாவிடம் கடன் பெறும் நாடுகளிடம் சீனா மறை முக உள்நோக்கங்களை கொண்டுள்ளது என்று அண்டை நாடுகளிடம் இந்தியா  கூறும்போது பிரச்சனை கள் எழுகின்றன.

சீனாவிடம் நிதி உதவி பெறுவது நிரந்தரமான கடன் வலையில் வீழ்ந்துவிட நேரிடும் என்று அண்டை நாடு களை இந்தியா எச்சரிக்கும் போது, அந்த நாடுகள் இந்தி யாவே சீனாவைச் சார்ந்துதானே இருக்கிறது என்று எதிர்வினை ஆற்றுகின்றன. ஏனெனில், சீனாதான் இந்தி யாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதார நாடாகும். சீனாவின் பொருளாதார பலம் கடந்த இருபது ஆண்டு காலத்தில், குறிப்பிடத்தக்க அளவில்அதிகரித்துள்ளது. இந்தியாவின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 டிரில்லியன் டாலர்களேஆகும். ஆனால் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோ 15.2 டிரில்லியன் டாலர்களாகும். சீனாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களின் பலத்துடன் இந்தியாவின்  தொழில்நுட்ப நிறுவனங்களை ஒப்பிடவே முடியாது.

பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் தலைநகராக மாறிவருகிறது; இந்தியா உலகளாவிய சக்தியாக வளர்ந்து வருகிறது என்று இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டாலும் உண்மை மிகவும் சோகமானது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகமான வருமானம் ஈட்டும் உலகின் மிகப்பெரிய பத்து நிறுவனங்களின் வரி சையில் சீனாவில் மட்டும் ஜேடி (JD), அலிபாபா, டென் செண்ட் (TENCENT),பைடு(BAIDU) ஆகிய நான்கு நிறுவனங்கள் வருகின்றன. தெற்காசியா முதல் உலகம்  முழுவதும் சீன தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதிலும் தற்போ தைய சோகம் என்னவென்றால், தகவல் தொழில்நுட்ப  பெங்களூருவாக அறியப்படாமல்- பெங்களூரு இந்துத் துவாவின் பரிசோதனைக் கூடமாக உலக அளவில் அவப் பெயரை சம்பாதித்துள்ளது.

அதுவும் சமீப காலமாக, இந்திய சீன உறவுகள் சிரம மான காலகட்டத்தில் நுழைந்துள்ளது. இதன் விளைவு கள் சர்வதேச அளவிலும், தெற்காசிய மண்டலத்திலும் எதிரொலிக்கும். இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டு பொருளாதார பலமிக்க நாடுகளான இந்திய- சீனாவின்  அதிகார சமநிலையை மறு மதிப்பீடு செய் கின்றன. இதன் விளைவாக ,பாக்- சீன உறவை சமன்படுத்த இந்தியா அமெரிக்காவுடன் நெருக்க மான உறவுகளை மேற்கொள்கிறது. இதில் எந்த அள வுக்கு இந்தியா வெற்றி பெறும் என்பது தெற்காசிய நாடுகளின் நிலைப்பாடுகளை பொருத்தே அமையும்.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் வன்செயல்கள் அமெரிக்காவிலும் எதிரொ லிக்கிறது. பைடன் நிர்வாகம் இதை அலட்சியப்படுத்த முடியாது. சீனா அமெரிக்காவைத்தான் முக்கியமான எதிரியாக கருதுகிறது.இந்தியாவை எதிரியாகக் கருத வில்லை.

தொடரும்...