articles

img

கண்ணோட்டம் - ஆளும் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் ‘வாழும் கலை’ கார்ப்பரேட் சாமியார் - மதுக்கூர் இராமலிங்கம்

கி.பி. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பி யாவில் மதகுருமார்கள் மன்னர்  களை தங்கள் கால்களை முத்த மிட்டு பதவியேற்கும்படி பணித்திருந்தனர். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ருஷ்யாவில் ஜார்  மன்னர்களை வளைத்துப் போட்டு வைத்தி ருந்த மதகுருமார்கள் பரிசுத்த ரஷ்யாவின் சின்னம் கசையடி அல்லது நீண்ட சாட்டை என்று அறிவித்தனர். 16 ஆம் நூற்றாண்டில் மத பீடங்களால் அறிவியலாளர்கள் அனுபவித்த சித்ரவதைகள் ஏராளம்.  கி.பி.1914ஆம் ஆண்டு ரஷ்யாவை ஆண்ட  நிக்கோலஸை கைக்குள் போட்டுக்கொண்டு ரஷ்புடின் என்ற போலிச்சாமியார் ஆட்டம் போட்டான். கடந்த கால வரலாற்றில் மதவேடம் பூண்ட போலிச்சாமியார்கள் நிகழ்த்திய அட்டூ ழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இப்போது இந்தியாவில் ஏராளமான ரஷ்  புடின்கள் புறப்பட்டிருக்கிறார்கள். கார்ப்ப ரேட் சாமியாரும் ‘வாழும் கலை’ என்ற  அமைப்பின் நிறுவனரும், மூச்சுப் பயிற்சி நிபு ணருமான பூஜ்யஸ்ரீ ரவிசங்கர் என்பவர்  தினமணி ஏட்டில் ‘வளமான எதிர்காலத்துக் கான நம்பிக்கை’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நரேந்திர மோடியின்  ஒன்பது ஆண்டு கால ஆட்சிக்கு முரட்டு முட்டாக கொடுத்தி ருக்கிறார் பூஜ்யஸ்ரீ. இந்தக் கட்டுரையில் வரிக்கு வரி பொய்யும், புனைவும் வழிகிறது. இந்தியா வில் எல்லாம் சுபிட்சமாக இருக்கிறது. இத னால் இளைஞர்கள் மற்றும் ஏழைகளிடம் நம்  பிக்கை ஏற்பட்டுள்ளது என்கிறார் இவர். 

ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் போலிருக்கிறது. நாட்டில் நடப்பது எது வும் குருஜிக்கு தெரியாது போலிருக்கிறது.  ஏராளமான வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டு பயனாளர்களின் கணக்குகளில் முழுத் தொகையும் சென்றடைவதை பிரதமர் மோடி  உறுதிப்படுத்திவிட்டார் என்று துள்ளிக் குதிக்கி றார். சமையல் எரிவாயு மானியத்தொகையை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்து வதாகக் கூறி விலையை ஏற்றினார்கள். ஒரு வேளை குருஜி சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருந்தால் கடைசியாக அவரது வங்கிக்  கணக்கில் மானியத் தொகையாக எவ்வளவு  வந்து சேர்ந்தது என்பதை ஏழை இந்தியர் களுக்கு தெரிவித்தால் அவருக்கு ‘புண்ணிய மாகப்’ போகும். குருஜி பெரிய பொருளாதார ‘புளி’யாகவும் இருப்பார் போலிருக்கிறது. பணவீக்கம் குறைந்துவிட்டது, வேலையின்மை இல்லவே  இல்லை என்றெல்லாம் அடித்துவிடுகிறார். வேலையின்மை விகிதம் 7.14சதவீதத்திலி ருந்து 7.45 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்  கூறுகிறது. ஆனால் குருஜி வேலைவாய்ப்பு பொங்கி வழிந்தோடுகிறது என்கிறார். 

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்  வறிக்கை பணவீக்க விகிதம் 6 சதவீதத்திற்கும் அதிகமாக நீடிப்பதாகவும் இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறு கிறது. ஆனால் பணவீக்கத்தை மோடிஜி கட்டுப் படுத்திவிட்டார் என்கிறார் குருஜி.  கொரோனா காலத்தில் ஒருவரும் பசியால்  வாடக்கூடாது என்ற உன்னதநோக்கத்தோடு அரசு ஏராளமான முன்முயற்சிகளை எடுத்தது  என்கிறார் ரவிசங்கர். புலம் பெயர் தொழிலா ளர்கள் பசி, பட்டினியோடு தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து இறந்த போது குருஜி  எங்கிருந்தார் எனத் தெரியவில்லை. கொரோனா காலத்தில் அம்பானி, அதானி போன்ற ஏழை கள் கொள்ளை லாப பசியால்  வாடக்கூடாது என்பதே மோடி அரசின் நோக்கமாக இருந்தது. அவர்களது சொத்து மதிப்பு மட்டும்தான் கொரோனா காலத்திலும் உயர்ந்தது.  ரவி  சங்கரின் பார்வையில் கார்ப்பரேட் முதலாளி கள்தான் ஏழைகள் போலிருக்கிறது.

பிரதமர் மோடி மதநம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் வெளிக்காட்டத் தயங்கவில்லை. பெருமிதம் கொள்கிறார் என்கிறார் இவர். ஆட்சியிலிருப்பவர்களுக்கு தனிப்பட்ட மதநம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் மதச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள்  ஆட்சி செய்ய வேண்டும். மோடி கோவி லுக்குப் போவதை யாரும் குறைசொல்ல மாட்  டார்கள். ஆனால் நாடாளுமன்றத்தையே மடம்  போல மாற்றி மன்னராட்சிக் காலம் போல செங்கோல் பெறுவதும் யாகப் புகையால் ஜனநாயகத்தின் கண்ணை மறைப்பதும் பெருமைக்குரியது அல்ல. காஷ்மீர் வளர்ச்சியடைந்துவிட்டதாகக் கூறுகிறார் குருஜி. அந்த மாநிலம் மட்டும் துண்டு  துண்டாக உடைக்கப்படவில்லை; அந்த மாநில  மக்களின் வாழ்க்கையும் சுக்குநூறாகக் கிழிக்  கப்பட்டுள்ளது. இதைத்தான் வளர்ச்சி என்கி றார் இவர். ஆப்கானிஸ்தானுக்கு புதிய நாடாளு மன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி அன்ப ளிப்பாக வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு  தெரியும் என்று வினா எழுப்புகிறார் ரவிசங்கர்.  இது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசிய மல்ல. இந்தியாவின் சார்பில் 9 கோடி டாலர் செலவில் ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 2015ஆம் ஆண்டு திறந்து வைக்  கப்பட்டது. ஆனால் அதன்பிறகு தலிபான்கள்  ஆப்கன் ஜனநாயகத்தையே முடக்கி அந்த நாடாளுமன்றக் கட்டடத்தையே காட்சிப் பொரு ளாக மாற்றி வைத்துள்ளனர். மத தீவிரவாதம் எந்த அளவுக்கு நாட்டை சீரழிக்கும் என்பதற்கு  உதாரணமாகவும் ஆப்கன் விளங்குவதை  பூஜ்யஸ்ரீ புரிந்து கொள்வது நல்லது.

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை யும் புகழ்ந்துரைத்துள்ளார் பூஜ்யஸ்ரீ. பல்வேறு  ஆபத்தான அம்சங்களைக் கொண்டுள்ள இந்த  கல்விக்கொள்கையை படைப்பாற்றலை ஊக்குவிக்கும் என்றும், அனைவருக்கும் கல்வி யை உறுதிப்படுத்தும் என்றும் புல்லரிப்போடு கூறுகிறார் இவர். காவிமயம், கார்ப்பரேட் மயம், ஒன்றிய மயம் என கல்வியை மாற்று வதுதான் புதிய கல்விக் கொள்கை. இடஒதுக்  கீட்டை இல்லாமல் செய்வதே இதன் நோக்கம்.  இது புதிதல்ல. பழைய குருகுல மொந்தை யில் கார்ப்பரேட் சரக்கு. மோடியின் குழுவுக்கு இன்னும் சற்று காலம்  வழங்குவதில் தவறு ஏதும் இல்லை என்று முடிக்கிறார் மூச்சுப் பயிற்சி நிபுணர். மோடி யின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இந்திய  மக்களுக்கு மூச்சுத் திணறுகிறது. இதை இன்னும் சற்று காலம் வழங்கலாம் என்று இவர்  பரிந்துரைக்கிறார். தப்பு சாமி தப்பு. உங்க ளைப் போல எல்லோருக்கும் மூச்சடக்கும் திறன் இல்லை.

;