articles

img

“இந்திய சா‘தீ’யக் குடியரசு!” - கி.ஜெயபாலன்

Kattal-A jackfruit mystery-
(இந்தி) 2023 (நெட்பிளிக்ஸ்)

இந்திய சமூகத்தில் புரையோடி யுள்ள சாதியத்தை எள்ளி நகை யாடி விமர்சிக்கும் திரைப்படம் “காட்டல்-எ ஜாக்ப்ரூட் மிஸ்டரி” மோபா காவல் நிலையத்தின் காவலர் களான மகிமா பஸோரும், சவுரப்பும் காத லர்கள். மகிமா கீழ் சாதியை சேர்ந்தவள் என்பதால் சவுரப் வீட்டில் இவர்கள் காதலை எதிர்க்கின்றனர். இந்நிலையில் மகிமா ஆய்வாளராகப் பதவி உயர்வு பெறுகிறாள்; துணிச்சலான செயல் பாடுகளால் பெயரெடுக்கிறாள். உள்ளூர் ஆளும்கட்சி எம்எல்ஏ பதீரியா, தனது கட்சி தலைவருக்கு விருந்து படைக்கிறார். அதில் தனக்கு, மந்திரி பதவி பெற, முதல்வரிடம் சிபாரிசு செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார்.  விருந்தில் பரிமாறப்பட்ட பலாப்பழ ஊறுகாயின் சுவை கட்சித்தலைவரை ரசித்து புசிக்க வைக்கிறது. “பணத்தால், திறமையால் செய்ய முடியாததை, முதல்வ ரின் மனைவிக்கு இந்த ஊறுகாயை வழங்கி, மந்திரி பதவி வாங்கலாம்” எனக் கட்சித் தலைவர் யோசனை கூற; எம்எல்ஏ-ம், தனது தோட்டத்தில் உள்ள மலேசியா உயர் இன பலாமரத்தில் காய்த்துள்ள இரு பழங்களிலிருந்து ஊறுகாய் தயாரித்து விரைவில் அனுப்பு வதாக உறுதி கூறுகிறார். இந்நிலையில், பலாப்பழங்கள் திருடு போக அதைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலை மகிமாவுக்கு வருகிறது. இதனை விசாரிக்கப் போக, பலாப்பழத் தோட்டக் காரன் மகள் அமியா உட்பட, நகரில் 44 பெண்கள் காணாமற்போன விபரம் தெரியவருகிறது. பலாப்பலத் திருடனைப் பிடிக்கப் போக இளம்பெண்களைக் கடத்திய கும்பலைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

எது முக்கியமாகிறது? காணாமற் போன பெண்கள் பிரச்சினையா? அரண் மனை பலாப்பழப் பிரச்னையா? என்ற கதை யோட்டத்தில் சட்டம், ஒழுங்கு என்ப தெல்லாம் சாதீயம், அரசியலதிகாரத்தால் அழுகிப்போன பொருட்களாக, ஏளனப் படுத்தப்படுகிறது. உள்ளூர் அரசியல் பிரமுகர் வீட்டுத் திருமண ஊர்வலத்தில், மது அருந்தி, வானை நோக்கிச் சுடுவது போன்ற கீழ்த்தரச் செயல்களை ஆய்வாள ரான மகிமா தடுக்க முயல்கிறாள்.இதனை காவலரும் அவளது காதலனுமான சவுரப் தடுக்கிறான். “இது வழக்கமானது; கண்டு கொள்ளாதே” என்கிறான். ஆடம்பரம், பகட்டுப் பெருமையைக் காட்டும் விதமாக அதே ஊர்வலத்தில் பணத்தாள்கள் வீசி எறியப்படுகிறது; இவற்றைப் பொறுக்க வரும் எளிய விளிம்புநிலை மக்களை சவுரப் அடித்து வெளியேற்றுகிறான். அப்போது சவுரப்-ஐ, “இவர்கள் என்ன ஆடா, மாடா? மனிதர்கள் தானே! ஏன் அடிக்கிறாய். காவலர்கள் மனி தர்களை அடிப்பதற்கான உரிமம் பெற்ற வர்கள் அல்ல”என மஹிமா கடிந்து கொள்வாள். இதனை கவனிக்கும் மற்ற  காவலர் கள், “குயிலு எப்படி கூவணுமுனு, காக்கா சொல்லித்தருது. இந்த அதிகார பருப்பு எங்ககிட்ட வேகாது. நாங்கள்லாம் உயர்ந்த ஜாதி” எனத் தங்களுக்குள்ளே பேசி மஹிமாவை ஏளனம் செய்வது;  எம்.எல்.ஏ வீட்டுக்குச் சென்று மகிமா விசாரணை செய்து திரும்பியபின் கங்கை நீரால் வீட்டை கழுவுவது; கடத்தப் பட்ட அமியா தாழ்த்தப்பட்ட சாதிப்பெண் என்றதும் சிவப்பு விளக்குத் தரகன் பேசிய தொகையைக் குறைத்துக் கொடுப்பது போன்ற காட்சிகள் சாதீயக் குரூரத்தைக் காட்டும் பனிப்பாறை நுனியாகும். காணாமற்போன பெண்கள் பற்றிய சுவரொட்டிகளை மறைத்து பலாப் பழத் திருட்டு குறித்து துப்புக் கொடுப்பவர் களுக்கு வெகுமதி அறிவிப்பு போஸ்டர் கள் காவலர்களால் ஒட்டப்படுகின்றன.

உப்பு சப்பற்ற பிரச்சனையை கையிலெடுப்பதன் மூலம், கவனிக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னையை மறைப்பது; என்ற இன்றைய ஆட்சியாளர் களின் யுக்தியை மேற்கண்ட காட்சி,  அற்புதமான குறியீடாக விவரித்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் மகிமாவி டம்” இந்தியன் பீனல் கோடைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்; ஆனால் இந்தியன் பொலிட்டிகல் கோடைத்தான் பினபற்ற வேண்டியுள்ளது” என்கிற வசனங்களும்; “மதுராவில் இருக்க வேண்டுமென்றால் ராதே, ராதே எனக் கூறித்தான் ஆக வேண்டும்” என்ற வசனங்கள் சிந்திக்க வைப்பவை. சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே, பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விடுகிறார்கள் என மஹிமா, தன் அதிகாரியிடம் கூறுவது; அரசியலுக்கும், ஊடகங்களுக்குமான பிணைப்பை பிரதிபலிக்கிறது.     பலாப்பழத் திருட்டும், காணாமற் போன பெண்கள் விவகாரமும் குறியீடு கள். அரசு யந்திரம் ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடவே இருக்கிறது; மக்கள் பிரச்னைகள் ஒரு பொருட்டே அல்ல என்பதை இந்தக் குறியீடுகள் வழியே விளக்கப்படுகிறது.          

இன்றைய சமூகத்தின் சாதிய, அதிகார ஒடுக்குமுறையை கதை போக்கில் செயற்கையான எவ்வித திணித்தலு மின்றி, வெகு இயல்போடு,திரைக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. மஹிமாவாக நடித்துள்ள ஷான்யா மல்ஹோத்ரா இயல்பான நடிப்பை தந்துள் ளார். ஏனைய அனைத்து நடிகர்களும் சிறப்பான பங்கைத் தந்துள்ளனர். கதைக்கு கூடுதல் புரிதலை உரு வாக்கும் இரு அர்த்தம் பொதிந்த பாடல் களும் சிறப்பானது. சிறந்த படத் தொகுப்பு, பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு. ஒன்றிய அரசை எதிர்கருத்துக் கூறினாலே தேசத்துரோக வழக்கு பாயும் இன்றைய சூழலினையும் துணிச்சலாக அனுஜ் என்ற டிவி செய்தியாளர் பாத்திரம் மூலம், பகடி செய்த இயக்குநர் யஷோவர் தன் மிஷ்ரா மிகுந்த பாராட்டுக்குரியவர். இந்திய ஜனநாயகம் (மேல்தட்டு) மக்களுக்காக,(மேல்தட்டு)மக்களால், (மேல்தட்டு)மக்களுக்குரியதாக ஆன ஒன்று என்பதை அவல நகைச்சுவையாகச் சொல்லும் திரைப்படம் இது.

;