articles

img

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சுமைப்பணித் தொழிலாளர்களின் அவலம் - ஆர்.வெங்கடபதி

நேரடி நெல்கொள்முதல் நிலையங் கள்  அதிக மகசூலைப் பொறுத்து விவசாயிகளிடம் நெல் கொள் முதல் செய்ய தேவையானஅளவு அரசால் அவ்வப்போது கூடுதலாக திறக்கப்பட்டு கொள் முதல் பணி நடைபெறுகிறது.நெல் கொள் முதல் நிலையங்கள் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்களில் கூடுதல் எண்ணிக்கையில்  உள்ளன. மேலும் விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர்,புதுக்கோட்டை, மாவட்டங் களிலும், மற்ற மாவட்டங்களில் நெல் கூடுத லாக விளையும் சில இடங்களிலும் கொள் முதல் நிலையங்கள் அரசால் தேவைக்கேற்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் திறக்கப்படுகின்றன.

டெல்டா மாவட்டங்களை தவிர பொதுவாக மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் கூடுதலாக நெல்விளையும் இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஒரு சில கொள்முதல் நிலையங்களுக்கு மட்டுமே நிரந்தர கட்டிட வசதி உள்ளது. பெரும்பாலான கொள் முதல் நிலையங்களு க்கு கட்டிட வசதி இல்லை.திறந்த வெளியா கவே உள்ளது.

கொள்முதல் நிலையங்களில் சுமைப்பணித் தொழிலாளர்

விவசாயிகள் கொள்முதல் நிலையங்க ளுக்கு கொண்டுவரும் நெல் மூட்டைகளை கொள்முதல்  நிலைய சுமைப்பணித் தொழிலா ளர்கள் தூசி,கருக்கா நீக்க வின்னோவிங்  மிஷினில் பிரித்து கொட்டி மூட்டைபிடித்து, எடை சரிபார்த்து மூட்டைகளை தைத்து அட்டி போட்டு அடுக்கி வைக்கவேண்டும்.நுகர்பொ ருள் வாணிப கிடங்கிற்கோ அல்லது நெல் அரவை நிலையங்களுக்கோ, லாரி,டிரான்ஸ் போர்ட், கான்ட்ராக்டர்கள் மூலம் கொண்டு  வரும் லாரிகளில் கொள்முதல் நிலையங்க ளில் அடுக்கி வைத்துள்ள மூட்டைகளை ஏற்றி அனுப்பவேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அதிகபட்சமாக 12சுமைப்பணி தொழிலா ளர்கள் உள்ளனர். பெரும்பாலும் சம்பா சாகு படி காலத்தில் மார்ச், ஏப்ரல், மாதத்தில் கடும் வெயில் காலங்களில் கூடுதல் பணி இருக்கும். பொதுவாக வேலை நேரம் காலை 9மணி முதல் மாலை 6மணி என்றிருந்தாலும் கூடுதல் பணி காலத்தில் காலை முன் கூட்டியே பணி துவங்கும் மாலை 7மணிவரை கூட பணி நடக்கும். வெப்பம் கொதிக்கின்ற வெயிலி லும் பணி செய்தாக வேண்டும்.பருவ காலங்க ளில் கூட குறுவை காலத்தில் நவம்பர் மாதத்தி லும், சம்பா காலத்தில் பிப்ரவரி முதல் மார்ச் முடிய போதுமான வேலை கிடைக்கும்.பருவ காலத்தின் இதர மாதங்களில் சொற்ப வேலையே. வருடத்தின் மற்ற நாட்களில் இவர்கள் வாழ்வாதாரத்திற்கான வருமானம் கேள்விக்குறியே!

இவர்களுக்காக பணி செய்யும் இடத்தில் குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட இல்லை.தொழி லாளர்களே குடிதண்ணீருக்கான ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். இவர்கள் கொண்டுவரும் உணவை அருந்த ஒரு நிழற்கூடம் கூட பெரும்பாலான மையங்களில் இல்லை. கழிப்பறை இல்லை. நெல்கொள்முதல் நிலையங்களில் பணி செய்பவர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தா லும் இவர்களுக்கு அடையாள அட்டை என்பது வழங்கப்படவில்லை.ஒருசில இடங்க ளில் புதிதாக ஆட்களை சேர்க்க வேண்டும் என்று அவ்வப்போது வரும் ஆளுங்கட்சியின் தலையீடும், பல நேரங்களில் தலைதூக்கு கின்றது. இவர்கள் மூட்டையை பிரித்து வின்னோவிங் மிஷின்களில் கொட்டி தூசி, கரிக்கா நீக்கி மூட்டை பிடித்து பதினான்கு தையல் போட்டு அட்டி வைப்பது.மீண்டும் லாரி யில் ஏற்றுவது ஆக இத்தனை பணிக்குமாக சேர்த்து இவர்களுக்கு அரசு வழங்கும் கூலி மூட்டை1க்கு ரூ.10 மட்டுமே.இவர்களுக்கு தீபா வளிக்கு  கருணைத் தொகையாக ரூ.3000ம், பொங்கல் பண்டிகைக்கு ரூ.300 மட்டும் வழங்கப்படுகிறது.இந்தகருணைத் தொகை கூடஇந்த தொழிலாளர்கள் செய்யும் ஒட்டு மொத்த பணிக்காக பெறும் கூலியின் சட்டப்படியான போனஸ் அல்ல. மிகமிக சொற்ப தொகையே. அரசு வழங்கும் இந்த சொற்ப தொகை கூட பெரும் எண்ணிக்கை யிலான தொழிலாளர்களுக்கு வழங்கப் படாமல் எண்ணிக்கை விடுபடுவதும், தொடர்ந்து தொழிற்சங்கம் இதற்காக ஆண்டுதோறும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் மனு கொடுக்க வேண்டிய அவலநிலையும் உள்ளது.

நிலையங்களில் கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை உட னுக்குடன்  லாரி டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டர் கள் லாரிகளை அனுப்பி மூட்டைகளை எடுத்து இடம் காலியானால் தான் கொள்முதல் பணி தொடர்ந்து நடக்கும். ஆனால் லாரியை உடனுக்குடன் அனுப்பி மூட்டைகளை கொண்டு செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரி கள் நிர்பந்தம் கொடுப்பதில்லை.  இதனால் மூட்டைகள் தேக்கமடை யும் போது சுமைப்பணி தொழிலாளர்கள் லாரி உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்தால் தான் லாரி வந்து மூட்டைகளை ஏற்றிச் செல்லும் அவலநிலை தொடர் கிறது.  அவ்வாறு மூட்டைகளை உடனுக்குடன் எடுத்து செல்லாததா லும், வெயிலிலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பதாலும் ஏற்படும் சேதாரங்கள் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு இயக்க இழப்பு தொகை(எடை குறைவு) என்ற பெய ரில் கொள்முதல்நிலைய பட்டியல்எழுத்தர் உதவியாளர், இரவு காவலர் ஆகிய ஊழி யர்கள் பொறுப்பாக்கப்பட்டு இவர்களை பணம் கட்ட சொல்வதும் உடன் பணம் கட்ட வில்லை என்றால்  பணியிடை நீக்கம் செய்வ தும் போன்ற சட்டவிரோத நடவடிக்கையும் அமலில் உள்ளது. நேரடி கொள்முதல்நிலைய சுமைப்பணித் தொழிலாளர்களும்  மனிதர்களாக, உழைப்பா ளர்களாக மதிக்கப்பட வேண்டும். தமிழக அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கின்ற வகையில் திட்டங்களை உரு வாக்க வேண்டும்.

;