சமீப நாட்களாக தொலைக்காட்சி விளம்பரங்களில் அமேசன் நிறுவனத்தின் சார்பாக இன்னைக்கு என்ன வாங்கினிங்க என பேரன் தாத்தாவிடமும். பக்கத்துவீட்டு பெண் இன்னொரு வீட்டிலும் எட்டிப் பார்த்து விசாரிக்கும் விளம்பர காட்சிகள் பார்க்க நேரிடுகிறது. தாத்தா நான் இன்னைக்கு காது கேட்கும் கருவியைக்காட்டி அதுக்கு பேட்டரி வாங்கினேன் என்றும். பக்கத்துவீட்டு பெண்ணுக்கு நான் கோதுமை மாவு, காய்கறி வாங்கினேன் என்ற பதிலும் ஆச்சரியப்படாத வகையில் கண்ணுக்கு முன் தோன்றி மறைகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஓரிரு பொருட்களுடன் துவங்கிய மின்னணு வார்த்தகம் அசுர பாய்ச்சலில் வேகமெடுத்த வருகிறது. இந்திய மின்னணு வர்த்தகத்தைப் பொறுத்தளவிலும் 2023 ஆம் ஆண்டில் 71,292 மில்லின் அமெரிக்க டாலர்களாக அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5.70,33336 கோடியாக இருக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. கனடா நாட்டை பின்னுக்குத்தள்ளி 8 ஆவது உலகின் மிகப் பெரிய மின்னணு வர்த்தக சந்தையாக இந்தியா இருக்கும். 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 13.9 சதவிகித வளர்ச்சியடைந்து 2027 ஆம் ஆண்டு இந்திய மின்னணு வர்த்தக சந்தையின் மதிப்பு 119967மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 9.59,736 கோடியாகும். உலக மின்னணு வர்த்தக சந்தையின் வளர்ச்சி விகிதமான 17 சதவிகிதமாக இந்திய வர்த்தகமும் வளர்ச்சியடையும் எனவும் நிபுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்திய மின்னணு வர்த்தகத்தில் உணவு மற்றும் சொந்த உபயோகத்திற்களின் விற்பனை வருவாய் 31.4 சத விகிதமாக முதல் இடத்திலும். ஆடம்பரப் பொருட்களின் மூலம் வருவாய் 27.9 சதவிகிதமாகவும். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் விற்பனை 18.6 சதவிதமும். பர்னீச்சர் மற்றும் வீட்டுஉபயோகப்பொருட்களின் விற்பனை 12 சதவிகிதமும். பொம்மைகள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களின் விற்பனை 10 சதவிதமாக என சந்தையில் ஆக்கிரமித்துள்ளன. இந்திய மின்னணு வர்த்தகத்தில் ஆதிக்க வகிப்பது பே°கட்.காம் °டோர் தான். இதன் வருவாய் 2021ஆம் ஆண்டு கணக்கின்படி 1222.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 97 ஆயிரம் கோடியாகும். இரண்டாவதாக 1119.3மில்லியன் டாலர் வருவாயுடன் அஜியோ டாட்காம் நிறுவனமும். மூன்றாவதாக 752.2மில்லியன் டாலர் வருவாயுடன் ரிலையன்° டிஜிட்டல் நிறுவனமும் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் 100 இடத்தில் உள்ள மின்னணு வர்த்தக நிறுவனங்களில் மேற்கண்ட மூன்று நிறுவனங்கள் மட்டும் 38.6 சதவிகிதத்தை கொண்டுள்ளன.
இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 62கோடியே 20 லட்சம் பேர் என்பதிலிருந்து 2025ஆம் ஆண்டில் 90 கோடிப் பேராக உயரும் என ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இணையத்தைப் பயண்படுத்துவோரின் 77சதவிகிதமானோர் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவலையும் தெரிவிக்கிறது. மற்றொரு பக்கத்தில் தொடர்ச்சியான இரண்டாண்டுகளின் பெருந்தொற்று காலத்தில் இந்திய சில்லரை வர்த்தகம் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. நேரடியாக சென்று பொருட்களை வாங்குவது குறைந்துவிட்டது. 2018ஆம் ஆண்டில் சில்லரை வர்த்தமானது 950பில்லியன் டாலர்களாக இருந்தது 2020ஆம் ஆண்டில் 883 பில்லியன் டாலர்களாக சரிந்தது. இந்த சரிவிலிருந்து சில்லரை வர்த்தகம் இன்றளவிலும் மீளமுடியவில்லை. சுமார் 90 கோடி மக்களை இணையப்பயண்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் நிலையில், இந்திய தகவல் தொடர்பு சாதனங்கள் மட்டும் இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வசம் எப்படி விட்டு வைப்பார்கள். ரிலையன்ஸ் ஸ்டோர், அமேசன் போன்ற கார்ப்பரேட்டுகள் இந்திய சந்தையை முற்றிலும் ஆக்கிரமிக்க வசதியாக மோடி அரசு செய்து தந்த வசதி தான் பிஎஸ்என்எல் முடக்கம். என்ன செய்யப்போறீங்க...
-எஸ்.ஏ.மாணிக்கம்