articles

img

மலைவாழ் மக்கள் மீது அறிவிக்கப்படாத போர் தொடுத்துள்ளது மோடி அரசு

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு நான்காவது அகில இந்திய மாநாட்டு பேரணி-  பொதுக்கூட்டம் நாமக்கல்லில் வியாழனன்று நடைபெற்றது. அதில் அமைப்பின் துணைத் தலைவர் பிருந்தா காரத் உரையாற்றினார். அருகில் அமைப்பின் தலைவர்கள்.

பிருந்தா காரத் குற்றச்சாட்டு

புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆதிவாசிக ளின் உரி மைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவராக ஜிதேந்திர சவுத்ரி, ஒருங்கிணைப்பாளராக பிலின் பிஹாரி பாஸ்கி, பொருளாளராக பி.டில்லி பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும்  67 பேர் கொண்ட ஒருங்கி ணைப்பு குழுவில் தமிழ கத்தில் இருந்து பெ. சண்முகம், ஆர்.சரவ ணன், ஏ.வி.சண்முகம், ஏ.பொன்னுச்சாமி  ஆகி யோர்  தேர்வு செய்யப்பட்ட னர். மேலும், சகோதர அமைப்பின் பிரதிநிதிகள் ஸ்மிதா குப்தா (கார்ட்), விகாஸ் ராவல் (கார்ட்), பிஜு கிருஷ்ணன் (அகில இந்திய விவசாயிகள் சங்கம்), பி.வெங்கட் (அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்), மரியம் தாவ்லே (அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம்) சி.எச்.நரசிம்ம ராவ் (சிஐடியு), ஹிமேங்ராஜ் பட்டாச்சார்யா (வாலிபர் சங்கம்), மயூக்பிஸ்வாஸ் (மாணவர் சங்கம்) உள்ளிட்ட 67 பேர் கொண்ட ஒருங்கிணைப் புக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.

ஆதிவாசிக ளின் உரி மைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவராக ஜிதேந்திர சவுத்ரி, ஒருங்கிணைப்பாளராக பிலின் பிஹாரி பாஸ்கி, பொருளாளராக பி.டில்லி பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும்  67 பேர் கொண்ட ஒருங்கி ணைப்பு குழுவில் தமிழ கத்தில் இருந்து பெ. சண்முகம், ஆர்.சரவ ணன், ஏ.வி.சண்முகம், ஏ.பொன்னுச்சாமி  ஆகி யோர்  தேர்வு செய்யப்பட்ட னர். மேலும், சகோதர அமைப்பின் பிரதிநிதிகள் ஸ்மிதா குப்தா (கார்ட்), விகாஸ் ராவல் (கார்ட்), பிஜு கிருஷ்ணன் (அகில இந்திய விவசாயிகள் சங்கம்), பி.வெங்கட் (அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்), மரியம் தாவ்லே (அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம்) சி.எச்.நரசிம்ம ராவ் (சிஐடியு), ஹிமேங்ராஜ் பட்டாச்சார்யா (வாலிபர் சங்கம்), மயூக்பிஸ்வாஸ் (மாணவர் சங்கம்) உள்ளிட்ட 67 பேர் கொண்ட ஒருங்கிணைப் புக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.

இந்தியாவில் மலைவாழ் மக்க ளுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் பல வழக்குக ளுக்கு ஆஜராக வேண்டிய மோடிஅர சின் வழக்கறிஞர்கள், ஒருநாள் கூட ஆஜராகவில்லை. இதனால் மலை வாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.  கார்ப்பரேட்களுக்கு தடையாக மலைவாழ் மக்கள் உள்ளனர். இந்தத் தடையை உடைப்பதற்காகத்தான் வன  பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அல்லது சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. இதன் மூலம்  வனத்தை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுக்க முயற்சி நடை பெறுகிறது. கார்ப்பரேட் ஆதரவாளர்க ளாக செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும். மலைவாழ் மக்களின் முன்னணிப் படையாக பெண்கள் உள்ளனர். ஏனெனில் அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வனம் நம்முடை யது. வளம் நம்முடையது. தண்ணீர் நம்முடையது. இதை  ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். பிரதமர் மோடியிடம் மண்டியிட மாட்டோம் என சபதமேற்றுள்ளனர். அதன் வெளிப்பாடு தான் இந்த மாநாடு. தமிழகத்திலும் கூட வன விலங்கு கள் பாதுகாப்பு என்ற பெயரில் மலை வாழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான உரிமையை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

இனச்சான்றிதழ் வழங்குவதிலும் தாமதம் உள்ளது. குறிப்பாக ஈரோடு மலையாளிகள், குரும்பன்ஸ், வேட்டை க்காரர்களுக்கு தாமதமின்றி சான்றிதழ் வழங்கவேண்டும். இதற்காக நீங்கள் தமிழகத்தில் போராடுங்கள். உங்களுக் காக நாங்கள் தில்லியில் போராடுகிறோம். மலைவாழ் மக்களுக்கு சான்றிதழ் கொடுக்காமல் அந்த சமூகத்தை சாராத வர்களுக்கு மலை வாழ் மக்கள் என சான்றிதழ் கொடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்ப கத்தின் கணக்குப்படி ஆண்டிற்கு 8,000 மலைவாழ் மக்கள் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொரு நாளும் நான்கு ஆதிவாசி பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார்கள். இதைப் பற்றி பிரதமர் மோடி பேச மறுக்கிறார். மணிப்பூரில் ஆதிவாசி மக்களுக்கு நடைபெற்ற கொடுமைகள் போல் வேறெங்கும் நடைபெற்றிருக்காது.

இரட்டை இன்ஜின் ஆட்சி தான் மணிப்பூரில் நடைபெறுகிறது. நானும்  (பிருந்தாகாரத்), அமைப்பின் தலை வருமான ஜிதேந்திர சௌத்ரியும் அங்கு சென்றோம். அங்கு  கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நிலை மை மோசமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையை எப்படி நாம் கடந்து செல்ல முடியாதோ அதேபோல் தான் மணிப்பூரிலும் ஒரு பகுதி மக்கள் மற்றொரு பகுதிக்குள் நுழைய முடி யாது. அங்குள்ள ஆளுநர் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்கி றார். மணிப்பூர் சம்பவம் குறித்து மோடி  இன்று வரை எதுவும் பேசவில்லை. இது தான் இரட்டை இன்ஜின் ஆட்சி. தமிழகத்தில் ஆளுநரைப் பயன் படுத்தி மாநில அரசிற்கு எதிராக நடவ டிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால், பிரச்சனை உள்ள மணிப்பூரில் எதுவும் செய்ய முடியாமல் ஆளுநர் அமைதி யாக உள்ளார். மணிப்பூரில் நடைபெற்ற கொடுமை களை நாடு முழுவதும் சொல்ல வேண்டும். அதே தருணத்தில் நாம் நமது உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அரசியலமைப்பை பாது காக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவிலேயே ஆதிவாசி மக்களை பாதுகாப்பதில் முதலிடத்தில் இருப்பது கேரளம் தான். கேரளத்தின் சாதனையை அனைத்து மாநிலங்களி லும் பெறுவதற்கான களப்பணியைத் தொடர்வோம். மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை போராட்ட வடிவமாக மாற்றுவோம் என்றார்.

ஜிதேந்திர சௌத்ரி 

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் ஜிதேந்திர சௌத்ரி:-  பேரணி நடத்தி மக்கள் கூட்டத்தை காண்பிப்பதற்காக நாம் மாநாடு நடத்துவதில்லை. பழங்குடி மக்களின் உரிமைகள் நசுக்கப்படு கின்றன. உரிமைகளைப் பாதுகாப்ப தற்காகவே மாநாடு நடத்துகிறோம். ஆதி பூர்வ குடிகளால் தான் நாடும், காடும் வளம் பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் ஆதிவாசி மக்கள். இன்றைக்கு அவர்களின்  உரிமைகளைப் பறிக்கும் வேலையைத் தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். “சனாதனம்” குறித்து தமிழக அமைச்சர் கூறியதை திரித்துக் கூறி, அதை நாடு முழுவதும் கிளப்பி விட்டு,  மக்களின் கவனத்தை திசைதிருப்பியுள்ளார் பிரதமர். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இது அமிர்தகாலம் என்கிறார் பிரதமர். ஆதிவாசி மக்களும், மலை வாழ் மக்களும்எந்தப் பலனையும் அடையவில்லை. உரிமைகளை கொடுக்க மறுக்கிறார்கள். உரிமையை பலவீனப்படுத்தப் பார்க்கிறார்கள். ஆதிவாசி மக்களுக்கான இட ஒதுக்கீடு மட்டுமல்ல, வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் சமூக நீதிக்காகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடினர். இப்போது சமூகநீதி சிதைக்கப்படுகிறது.  ஒவ்வொரு மலையில் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு விதமான பண்பாடு, கலாச்சாரம் உள்ளது என் பதை மலைவாழ் மக்கள் தங்களது நடனத்தின் மூலம், கும்மியின் மூலம் நிரூபித்துள்ளனர். ஆனால், பிரதமரோ, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச் சாரம் என்கிறார். கடைசியில் ஒரே ஆள் தான் என்பார். அவர் நரேந்திரமோடி தான். 2024-ஆம் ஆண்டு தேர்தலில்  மோடி யை தோற்கடிக்க ஆதிவாசி மக்களும் மலைவாழ் மக்களும் தயாராகிவிட்டனர்.

பிலின் பாஸ்கி

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் கன்வீனர் பிலின் பாஸ்கி:- நாடு முழுவதும் உள்ள மலை வாழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டங்கள் அமைந்து ள்ளன. தமிழகத்தில் இந்த அமைப்பு  முதன்மையானது என்பது பெரு மையாக உள்ளது. 40 நாட்கள் அவ காசத்தில் இந்த மாநாடு பிரமிக்கத்தக்க வகையில் நடந்தேறியுள்ளது. வாச்சாத்தி போராட்டம் தொடங்கி சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்ற போராட்டம் வரை வெற்றி பெற் றுள்ளது.பட்டா, இனச்சான்றுகோரிக் கைகளுக்காகப் போராடி மக்களுக்கு பெற்றுத் தந்து வருகிறீர்கள். இந்த வெற்றிக்குக் காரணம் செங்கொடி காட்டும் பாதையில் மலைவாழ் மக்கள் அணிதிரள்வது தான் என்றார்.  பிருந்தாகாரத்தின் ஆங்கில உரையை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி துரைராஜ் மொழிபெயர்த்தார். ஜிதேன்சௌத்ரியின் உரையை லட்சுமி நாராயணன் மொழி பெயர்த்தார்.

 செய்தி: ச.நல்லேந்திரன்